பெர்சவரன்ஸ் (perseverance)
- செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக தனது பெர்சவரன்ஸ் (perseverance) ரோவரை இன்று அனுப்பி உள்ளது. அட்லாஸ் 5 ராக்கெட் மூலம் நாசா வெற்றிகரமாக இந்த ரோவரை அனுப்பி உள்ளது.
- இந்த பெர்சவரன்ஸ் (perseverance) வரும் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்று அடையும். இந்த ரோவர் பெரிய கார் அளவில் இருக்கும் ரோவர் ஆகும்.
- செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பெரிய நதி இருந்ததாக கருதப்படும் ஜெசோரோ என்ற பகுதியில் இந்த பெர்சவரன்ஸ் (perseverance) இறங்க உள்ளது.
- அங்கு ஒரு காலத்தில் மிகப்பெரிய நதி இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு உயிர்கள் இருந்ததா, நிலப்பகுதி எப்படி இருந்தது என்பதை ஆராய்ச்சி செய்ய இந்த ரோவர் பயன்படுத்தப்படும். முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் தன்னிச்சையாக செயல்படும் இந்த ரோவர் அங்கு நீர் மற்றும் செல்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை செய்யும்.
- அதேபோல் செவ்வாய் கிரகத்தில் இந்த ரோவரில் இருந்து வெளியே வரும் ஹெலிகாப்டர் ஒன்றும் ஆராய்ச்சி செய்ய இருக்கிறது.
- 1.8 கிலோ எடை கொண்ட சிறிய ஹெலிகாப்டர் ஆகவும் இது. இதன் பெயர் இன்ஜெனியூட்டி (Ingenuity) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. செவ்வாயில் நீர் இருந்த பகுதிகளை இது ஆராய்ச்சி செய்யும். அதேபோல் செவ்வாயில் இருந்து வெளியாகும் சத்தத்தை இது ஆராய்ச்சி செய்ய உள்ளது.
"முஸ்லீம் பெண்கள் உரிமை தினம்”
- "முஸ்லீம் பெண்கள் உரிமை தினம்” (“Muslim Women Rights Day”) - ஆகஸ்டு 1 (முத்தலாக் (Triple talaq) முறை ஒழிப்பதற்கு வழிசெய்த , முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 ( Muslim Women (Protection of Rights on Marriage) Act, 2019) அமலுக்கு வந்த நாள்)
”SABIC”
- முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலினால் இயங்கும் உலகின் முதல் பெரிய வேதிப்பொருள் தொழிற்சாலை எனும் பெருமையை ஸ்பெயின் நாட்டிலுள்ள ”SABIC” எனும் நிறுவனம் பெற்றுள்ளது.
- ”பாயம்பர் - இ -ஆஷம்’ (Payambar-e A’zam 14 (“Great Prophet 14”)) என்ற பெயரில் வருடாந்திர இராணுவ ஒத்திகையை ஈரான் நாடு 29-7-2020 அன்று நடத்தியுள்ளது.
”SABIC”
- முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலினால் இயங்கும் உலகின் முதல் பெரிய வேதிப்பொருள் தொழிற்சாலை எனும் பெருமையை ஸ்பெயின் நாட்டிலுள்ள ”SABIC” எனும் நிறுவனம் பெற்றுள்ளது.
'பாயம்பர் - இ -ஆஷம்’
- ”பாயம்பர் - இ -ஆஷம்’ (Payambar-e A’zam 14 (“Great Prophet 14”)) என்ற பெயரில் வருடாந்திர இராணுவ ஒத்திகையை ஈரான் நாடு 29-7-2020 அன்று நடத்தியுள்ளது.
“எய்ம்-ஐகிரஸ்ட்”
- “எய்ம்-ஐகிரஸ்ட்” ( 'AIM-iCREST') என்ற பெயரில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான ஆதரவை அளிக்கவும், நிபுணத்துவத்தை வழங்குவதற்குமான திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்க இயக்கம் பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை, வத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து தொடங்கியுள்ளது. இந்தியாவில் இது போன்ற முயற்சி முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
National Transit Pass System (NTPS)
- தேசிய போக்குவரத்து நுழைவுசீட்டு முறைமை (National Transit Pass System (NTPS)) என்ற பெயரில் மரக்கட்டைகள், மூங்கில் மற்றும் இதர காடுகள் சார்ந்த தயாரிப்புகளை நாடுமுழுவதும் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்வதற்காக ஆன்லைன் அல்லது மொபைல் செயலி மூலம் அனுமதி பெறுவதற்கான வசதியை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020
- நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை 29 ஜீலை 2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 21-ஆம் நூற்றாண்டின் இந்த முதலாவது கல்விக் கொள்கை, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமையும்.
- அணுகுதல், சமவாய்ப்பு, தரம், குறைந்த கட்டணம் மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அடித்தூண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை, 2030-க்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப உருவாக்கப்பட்டிருப்பதுடன், இந்தியாவை வலிமையான அறிவாற்றல்மிக்க சமுதாயம் மற்றும் உலகளவில் அறிவாற்றலில் சிறந்த சக்தியாக மாற்றும் நோக்குடன், பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை மேலும் முழுமையான, நெகிழுந்தன்மையுடைய, பலதரப்படடதாக, 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைப்பதுடன், ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வி சீர்திருத்தங்களின் வரலாறு
- பல்கலைக்கழக மானியக்குழு (1948-49) (University Education Commission (1948-49))
- இடைநிலைக்கல்வி குழு(1952-53) (Secondary Education Commission (1952-53))
- கோத்தாரிக் கல்விக் குழு (1964-66) (Education Commission (1964-66) under Dr. D.S. Kothari )
- புதிய கல்விக் கொள்கை 1968 (National Policy on Education, 1968)
- 42 வது அரசியலமைப்புத் திருத்தல் 1976 , கல்வியை பொதுப்பிரிவில் வைத்தது (42nd Constitutional Amendment,1976-Education in Concurrent List )
- தேசிய கல்விக் கொள்கை 1986 (National Policy on Education (NPE), 1986)
- தேசிய கல்விக்கொள்கை 1986 மாற்றியமைக்கப்பட்டது / செயல் திட்டம்- 1992( NPE 1986 Modified in 1992 (Program of Action, 1992))
- S.R. சுப்பிரமணியன் குழு அறிக்கை 27 மே 2016 ( T.S.R. Subramaniam Committee Report (27 May, 2016) )
- கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை 31 மே 2019 (Dr. K. Kasturirangan Committee Report (31 May, 2019)