Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 28th July 2020


500 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பிராட்

  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், கிரேக் பிராத்வெய்ட்டின் (19 ரன்) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இது ஸ்டூவர்ட் பிராட்டின் 500-வது டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது.
  • இதன் மூலம் 500 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் வரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 7-வது வீரராக இணைந்துள்ளார். மேலும் இந்த மைல்கல்லை குறைந்த வயதில் (34) எட்டிய 2-வது பவுலர் என்ற பெருமையையும் பெற்றார்.
  • இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அவரை விட குறைந்த வயதில் (31) இந்த சாதனையை செய்து முதலிடத்தில் உள்ளார்.

லிவர்பூல் பயிற்சியாளருக்கு விருது

  • லிவர்பூல் அணி முதல் முறையாக இங்லிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து கோப்பையை கைப்பற்றக் காரணமான பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கடந்த 30 ஆண்டுகளாக இங்லிஷ் பிரிமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வந்த லிவர்பூல் அணி, இந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
  • இதற்கு முக்கிய காரணம் அணியின் பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் (53). ஜெர்மனி கால்பந்து வீரரான இவர் 2015ம் ஆண்டு முதல் லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
  • ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஈஎப்ஏ சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனாக லிவர்பூல் இருப்பதற்கும் இவர்தான் காரணம்.

ஆறாவது கால்நடை மருத்துவக்கல்லூரி

  • தமிழகத்தின் ஆறாவது கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் 2021-22-ம் ஆண்டில் இருந்து கல்வியாண்டு தொடங்கும். அந்த கல்வியாண்டில் முதலில் 40 பேரும், அதன்பின்னர் 80 பேரும் சேர்க்கப்படுவார்கள்.
  • ஏற்கனவே, சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லையை தொடர்ந்து சேலம் தலைவாசல் கூட்டு ரோட்டில் 5-வது கால்நடை மருத்துவக்கல்லூரி நிறுவப்பட்டது.

"M-STRIPES"

  • "M-STRIPES" பற்றி : M-STriPES (Monitoring System for tigers - intensive protection and ecological status) என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புலி கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு செயலியாகும்.
  • 2018-2019 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் தேசிய புலிகள் கணக்கெடுப்பானது, உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பாக கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

  • புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் , 2010 :

  • புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010-ல் ஒன்று கூடி, 2022 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
  • இது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

(Environment IMpact Assessment

  • சூழலியல் தாக்க மதிப்பீட்டு (Environment IMpact Assessment) வரைவு 2020 ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவின் மீதான மக்கள் கருத்துக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள்

  • “Quest for Restoring Financial Stability in India” - விரால் ஆச்சாரியா (ஆசிரியர்) “The India Way: Strategies for an Uncertain World” - S ஜெய்சங்கர் (ஆசிரியர்)

World Hepatitis Day

  • உலக கல்லீரல்அழற்சி (ஹெபடிடிஸ்) நோய் தினம் (World Hepatitis Day) - ஜீலை 28 | மையக்கருத்து - ஹெபடிடிஸ் இல்லாத எதிர்காலம் ( Hepatitis-Free Future)

“Ziyuan III 03”

  • “Ziyuan III 03” என்ற பெயரில் உயர் தர மேப்பிங் செயற்கைக் கோளை (high-resolution mapping satellite ) சீனா, தனது Long March-4B ராக்கெட்டின் மூலம் 25-7-2020 அன்று விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

குரோஷியா (Croatia)

  • குரோஷியா (Croatia) நாட்டின் புதிய பிரதமராக ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் ( Andrej Plenkovic) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குரோஷியாவின் தலைநகரம் - ஷாக்ரெப் (Zagreb) | நாணயம் - குரோஷியன் குணா (Croatian kuna)

துனீசியா(Tunisia)

  • துனீசியா(Tunisia) நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெசிசி (Hichem Mechichi ) நியமிக்கப்பட்டுள்ளார். துனீசியா நாட்டிம் தலைநகரம் ‘துனிஷ்’ (Tunis) | நாணயம் - துனீசியன் தினார் (Tunisian Dinar(TND))

Cotton warehouse

  • வியட்நாம் நாட்டில் பஞ்சு கிடங்குகளை (cotton warehouse) அமைக்க இந்தி பஞ்சு நிறுவனம் (Cotton Corporation of India) திட்டமிட்டுள்ளது. பஞ்சு ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இந்தோனேசியா

  • இந்தியா - இந்தோனேசியா இடையே, பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தோனேசியாவுக்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வது, கடல்சாா் பாதுகாப்பை அதிகரிப்பது ஆகியவை தொடா்பாக இந்த ஒத்துழைப்பில் முக்கிய இடம்றவுள்ளன.
  • குறிப்பாக, பாதுகாப்பு துறையில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
  • 2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு அரசு முறைப்பயணமாக பிரதமா் மோடி சென்றிருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Share with Friends