உலக தயாரிப்பு இடர் குறியீடு 2020
- உலக தயாரிப்பு இடர் குறியீடு 2020 (Global Manufacturing Risk Index) ல் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. Cushman & Wakefield எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் அமெரிக்கா பெற்றுள்ளது.
”நிஷிதா”
- ”நிஷிதா” (National Initiative for School Heads and Teachers Holistic Advancement (NISHTHA)) என்ற பெயரில் “தேசிய பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழுமையான மேம்பாட்டு திட்டத்தை” மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் , ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1200 வல்லுநர்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.
- ”நிஷிதா” திட்டம் முதன் முதலில் ஆகஸ்டு 2019 ல் தொடங்கப்பட்டிருந்தாலும், கோவிட்-19 சூழலினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் மறுபடியும் ஆன்லைன் வழியாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT (National Council of Educational Research and Training) ) இந்த திட்டத்தில் மாறுதல்களைச் செய்துள்ளது. ஆன்லைன் வழியான இந்த திட்டம் DIKSHA (Digital Infrastructure for Knowledge Sharing) மற்றும் NISHTHA இணையதளங்கள் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
கல்லூரிகளில் மதிய உணவு
- தெலங்கானாவில் அரசு ஜூனியா் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2020-21 கல்வியாண்டு முதல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் அந்த மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் 17-7-2020 அன்று அறிவித்துள்ளார்.
World’s First Fully Automatic Electric Vessel
- உலகின் முதலாவது, முழுவதும் தானியங்கி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் கப்பலை (world’s first fully automatic electric vessel) உருவாக்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த ’கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம்’ (Cochin Shipyard Ltd (CSL)) மற்றும் நார்வே நாட்டின் ASKO Maritime நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுதப் படை
- ஆயுதப் படைகள் அவசர தேவைகளுக்காக ரூ. 300 கோடி வரையில் ஆயுதங்களை வாங்கச் செலவிடலாம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council (DAC)) 15-7-2020 அன்று அனுமதி வழங்கியுள்ளது.
AHIDF
- ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் அமல்படுத்தப்படும் கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (Animal Husbandry Infrastructure Development fund (AHIDF)) அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மீன்வளம் கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள் 16 7 2020 அன்று வெளியிட்டுள்ளார்.பால் பண்ணை, இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் இதர தயாரிப்புகளுக்கான கட்டமைப்பை நிறுவுதல், மற்றும் தனியார் துறையில் கால்நடை தீவன ஆலைகளை நிறுவுதல் ஆகியவற்றில் முதலீடுகளை ஊக்குவிக்க இந்த நிதி உதவும் .
”நிமோகோக்கல் பாலிசாக்ரைட் கோஜுகாட் தடுப்பூசி"
- இந்தியாவின் முதலாவது, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிமோனியா (pneumonia) நோய்க்கான தடுப்பூசியான ”நிமோகோக்கல் பாலிசாக்ரைட் கோஜுகாட் தடுப்பூசிக்கு”(Pneumococcal Polysaccharide Conjugate Vaccine) மத்திய மருந்து கட்டுப்பாட்டகம் (Drug Controller General of India(DCGI)) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பூனேவிலுள்ள M/s. Serum Institute of India Pvt. Ltd எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
சர்வதேச ஊடக சுதந்திர விருதுகள் 2020
- சர்வதேச ஊடக சுதந்திர விருதுகள் 2020 (International Press Freedom Award 2020) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஷாஹிதுல் ஆலம் (Shahidul Alam), ஈரானைச் சேர்ந்த மொகமது மொஷேட் (Mohammad Mosaed), நைஜீரியாவைச் சேர்ந்த ‘தாபோ ஓலோருன்யோமி (Dapo Olorunyomi) மற்றும் ரஷியாவைச் சேர்ந்த ஸ்வேட்லானா புரோகோப்யேவா (Svetlana Prokopyeva) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’க்வென் இஃபில்ல் ஊடக சுதந்திர விருது 2020’ ( Gwen Ifill Press Freedom Award 2020) அமல் க்ளூனே ( Amal Clooney) எனும் லெபனான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட ’Committee to Protect Journalists(CPJ)’ எனும் அமைப்பினால் இந்த விருது வழங்கப்படுகிறது.