Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 29th July 2020


கருங்கல்பாளையம் நூலகம்

  • தேசியக் கவி பாரதியார், யானையால் தாக்கப்பட்டு குணமடைந்த பின், கடைசி வெளியூர்ப் பயணமாக, 1921 ஜூலை, 31-ல் ஈரோடு கருங்கல்பாளையம் காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் எம்.கே. தங்கப்பெருமாள் பிள்ளை துவங்கிவைத்த, கருங்கல்பாளையம் வாசகசாலையின் ஆண்டு விழாவுக்காக வருகை தந்து, “மனிதனுக்கு மரணமில்லை” என்ற தலைப்பில் புகழ்பெற்ற உரையை ஆற்றிய நிகழ்வின் 100 வது ஆண்டு தினம் 31-7-2020 அன்று அனுசரிக்கப்படுகிறது.

ஈழுவா & தீயா

  • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் ஈழுவா, தீயா வகுப்பினரைப் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட வகுப்பினரைச் சோ்ந்தவா்களிடம் முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

ரஃபேல் போர்விமானங்களின் சிறப்பு அம்சங்கள்

  • வானில் 120 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை அதிவிரைவில் தாக்கும் திறன் கொண்ட மீடியாா் ரக ஏவுகணைகள், தரையில் 600 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஸ்கால்ப் ரக ஏவுகணைகள் ஆகியவை ரஃபேல் போா் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
  • அகச்சிவப்புக் கதிா்கள் மூலமாக தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் வசதி, எதிரி நாட்டு ரேடாா்களைக் கண்டறியும் வசதி உள்ளிட்டவையும் ரஃபேல் போா் விமானங்களில் இடம்பெற்றுள்ளன. அதிகமான உயரங்களில் போா் விமானங்கள் பறக்கும்போது அங்கு நிலவும் குளிா்ச்சியான சூழலால் பாதிக்கப்படாத வகையில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • ரஃபேல் போா் விமானத்தின் இறக்கையின் நீளம் -10.90 மீட்டா் , மொத்த நீளம் 15.30 மீட்டா், உயரம்- 5.30 மீட்டா், அதிகபட்ச பயண வேகம் - மணிக்கு சுமாா் 1,400 கி.மீ, அதிகபட்ச பறக்கும் உயரம் - 50,000 அடி, ஒரு முறை பயணிக்கும் தூரம் - 780 முதல் 1,650 கி.மீ., விமானிகளின் எண்ணிக்கை-ஒன்று, விமானத்தின் குறைந்தபட்ச எடை-10 டன், விமானத்தின் அதிகபட்ச எடை -24.5 டன்.

‘BIS-Care’ மொபைல் செயலி

  • பொருட்களிலுள்ள ISI மற்றும் hallmark தர குறியீடுகளின் உண்மைத்தன்மையை வாடிக்கையாளர்கள் தாங்களாகவே சோதித்தறிவதற்கும், புகாரளிக்கவும், இந்திய தர வாரியத்தின் (Bureau of Indian Standard) மூலம் ‘BIS-Care’ எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

சூரிய ஆற்றல் உற்பத்தி பூங்கா

  • சர்வதேச சோலார் கூட்டமைப்பின் (International Solar Alliance(ISA)) வாயிலாக இந்தியாவின் சார்பில் 62.91 ஜிகா வாட் மின் திறனுடைய சூரிய ஆற்றல் உற்பத்தி பூங்கா இலங்கையில் அமைக்கப்படவுள்ளது.

சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day) - ஜீலை 29

  • புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010-ல் ஒன்று கூடி, 2022 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
  • இது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இளம் ஆலோசகா்கள் குழுவில் அா்ச்சனா சோரங்

  • பருவ நிலை பாதிப்புகளுக்கு யோசனைகள், தீா்வுகளை அளிக்கும் இளம் ஆலோசகா்கள் குழுவில் இந்திய பெண்மணியான ஒடிசாவின் ரூர்கேலா பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான அா்ச்சனா சோரங் (Archana Soreng) இடம்பெற்றுள்ளாா்.
  • இவருடன் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 18 முதல் 28 வயதுக்கு உள்பட்ட மேலும் 6 இளைஞா்கள் கொண்ட குழுவை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டரெஸ் தோ்வு செய்துள்ளாா்.

ரூ.22 கோடி நிதி

  • சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும், கடுமையாக அச்சுறுத்திவருகிறது.
  • கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவிலும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவுக்கு மேலும் 3 மில்லியன அமெரிக்க டாலர்கள் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி தற்போது வழங்கியுள்ளது.
  • இதன் இந்திய மதிப்பு, 22,47,97,500 ரூபாய். ஆசிய பசிபிக் பேரிடர் மேலாண்மை நிதி தொகுப்பில் இருந்து இத்தொகை அளிக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசு இத்தொகையை பேரிடர் மேலாண்மை நிதிக்கு அளிக்கிறது.
  • உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் வாங்குவது, கொரோனா சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு இந்த நிதியை இந்தியா பயன்படுத்த உள்ளது.
  • முன்னதாக, இந்தியாவில் கொரோனா தடுப்பு, சிகிச்சை பணிகளுக்கு, கடந்த ஏப்.,28ம் தேதி, ஆசிய வளர்ச்சி வங்கி, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1.12 லட்சம் கோடி) அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது.

பொது முடக்கத் தளா்வை அறிவித்தது மத்திய அரசு

  • தேசிய அளவில் மூன்றாம் கட்ட பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அல்லாத இடங்களில் யோகாசன பயிற்சி மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இவை செயல்படத் தொடங்கும்.
  • அதேபோல, இரவு நேரங்களில் தனிநபா்கள் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளா்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • திருவிழாக்கள், மதம், அரசியல் தொடா்பான கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுதந்திர தினத்தைக் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள், தளா்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் தாயகம் திரும்புபவா்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்மானந்துக்கு தேசிய விருது

  • என்ஐஓடி எனப்படும் தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் (சென்னை) டாக்டா் எம்.ஏ.ஆத்மானந்துக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சாா்பில் சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது.
  • கடல்சாா் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கடலின் அடிப்பகுதியில் இருந்து மீத்தேன் எடுத்தல், மீன் வளங்களை மேம்படுத்துதல், மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடலுக்குள்ளேயே பண்ணைகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்களை அவரது தலைமையிலான குழுவினா் செயல்படுத்தியுள்ளனா்.
  • புயலுடன் இணைந்து பயணித்து தகவல்களை அளிக்கும் நவீன சாதனங்கள் தொடா்பான ஆராய்ச்சியையும் ஆத்மானந்த் மேற்கொண்டுள்ளாா். இதுவரை கடல் தொழில்நுட்பம் குறித்து சா்வதேச அளவில் 144 ஆய்வுக் கட்டுரைகளை அவா் சமா்ப்பித்துள்ளாா்.
  • கடல் வள ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பைப் போற்றும் விதமாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கடல் தொழில்நுட்ப ஆய்வுக்கான சிறப்பு விருதை அவருக்கு வழங்கியுள்ளது.

சீன & அமெரிக்க தூதரகம் மூடல்

  • அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தைப் பயன்படுத்தி அந்நாடு உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்க அரசால் அத்தூதரகம் ஜூலை 25-ஆம் தேதி மூடப்பட்டது.
  • இதற்குப் பதிலடியாக சிசுவான் மாகாணத் தலைநகரான செங்டு நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை சீனா ஜூலை 27-அன்று மூடியுள்ளது.

MOSPI அறிக்கை: 403 திட்டங்கள் பாதிப்பு

  • மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MOSPI சமீபத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
  • அறிக்கையின்படி, 150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கண்காணிக்கிறது.
  • கண்காணிக்கப்படும் 1,686 திட்டங்களில் 403 செலவுகள் அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 530 திட்டங்களின் நேரம் அதிகரித்துள்ளதாரகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உள்கட்டமைப்பு திட்டங்களின் அசல் செலவில் சுமார் 19.60% இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 1,686 திட்டங்களை செயல்படுத்த மொத்த அசல் செலவு ரூ.20,66,771 கோடி ஆகும்.
  • MOSPI: Ministry of Statistics and Programme Implementation.

வந்தே பாரத் திட்டம்

  • மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 5-ம் கட்ட சேவை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2.5 லட்சம் பேர் ஏற்கெனவே இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

ISIS பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

  • இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை சமீபத்தில் எச்சரித்துள்ளது.
  • அந்த அறிக்கையின் தலைப்பு “ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் பொருளாதாரத் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை” என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

Quest for Restoring Financial Stability in India

  • முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் வி.ஆச்சார்யா எழுதிய “இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான தேடல்” என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை SAGE பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது தேடலை இந்த புத்தகம் சித்தரிக்கிறது, மேலும் நிலையான முன்னேற்றத்திற்கான உறுதியான திட்டத்தை வழங்குகிறது.

உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28

  • ஆண்டுதோறும் ஜூலை 28 அன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் (Nature Conservation Day) கடைபிடிக்கப்படுகிறது இயற்கை வளங்கள் என்பது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், காடுகள், மலைகள், அருவிகள், நதிகள், கடல்கள், கனிம வளங்கள், வளிமண்டலத்தில் உள்ள நீர், காற்று, சூரிய ஒளி மற்றும் சக்தி அளிக்கும், வளங்கள் என அனைத்தும் உள்ளடக்கியதாகும்.
  • இந்திய-நிலப்பரப்பு உலக நாடுகளில் இந்தியா, ஏழாவது பெரிய நாடாகும், இந்தியாவின் நிலப்பரப்பு 3,287,267 சதுர கி. மீ. நீளம் கொண்டதாகும்.
  • இந்த நிலப்பரப்பு, வடக்கிலிருந்து தெற்கு வரை 3,214 கி.மீ., கிழக்கிலிருந்து மேற்கு வரை 2,993 கி.மீ. தூரம் கொண்டதாகும்.

"APSEZ"

  • அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ), அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் திட்டத்தில் (SBTi) பதிவுசெய்யும் முதல் இந்திய துறைமுகமாகவும், உலகளவில் 7-வது துறைமுகமாகவும் திகழ்கிறது.
  • SBTi உறுதிப்பாட்டுக் கடிதத்தில் கையொப்பமிட்டதன் மூலம், புவியியல் வெப்பமயமாதலை தொழில்வளர்ச்சி காலத்தின் முந்தைய நிலைகளை விட 1.5 ° C ஆக வைத்திருக்கும் அறிவியல் அடிப்படையிலான உமிழ்வு குறைப்பு இலக்குகளை மேற்கொள்ள APSEZ உறுதிபூண்டுள்ளது.
  • காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடு (TCFD) தொடர்பான பணிக்குழுவின் ஆதரவாளராகவும் APSEZ யெழுத்திட்டுள்ளது.
  • APSEZ: Adani Ports and Special Economic Zone Ltd
  • SBTi: Science-Based Targets initiative.
  • TCFD: Task Force on Climate Related Financial Disclosure.

"Ind-SAT 2020"

  • மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், 2020 ஜூலை 22-அன்று இந்தியாவில் படிப்போம் (study in India Programme) திட்டத்தின் கீழ், முதலாவது இந்திய கல்வி மதிப்பீட்டு தேர்வை (Ind-SAT 2020) நடத்தியது.
  • தேசிய சோதனை நிறுவனத்தால் (National Testing Agency) இணையவழியில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
  • Ind-SAT தேர்வு என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கை மற்றும் உதவித்தொகை வழங்குவதற்காக நடத்தப்படுகிறது.
  • Ind-SAT: Indian Scholastic Assessment.

"சாஹில் சேத்"

  • இந்திய வருவாய் சேவை அதிகாரி சாஹில் சேத், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (BRICS-CCI) கௌரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • BRICS-CCI: Chamber of Commerce and Industry.

குளோபல் ஃபிண்டெக் விழா-2020

  • உலகின் மிகப்பெரிய முதலாவது உலகளாவிய ஃபிண்டெக் விழா (Global Fintech Fest), ஜூலை 22-23 தேதிகளில் இணையவழியாக நடைபெற்றது;
  • இது இந்திய கொடுப்பனவு கவுன்சில் ஆஃப் இந்தியா (NPCI) மற்றும் ஃபிண்டெக் கன்வெர்ஜென்ஸ் கவுன்சில் (PCI) ஆகியவற்றால் இந்த நிதி தொடர்பான விழா "Fintech : With and Beyond COVID" என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் UPI AutoPay, RuPay வணிக அட்டை & OCEN நெறிமுறை ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது.
  • ஓசென் நெறிமுறை: நந்தன் நிலேகனி OCEN என்ற ஒரு புதிய கடன் நெறிமுறை உள்கட்டமைப்பை அறிமுகப்படுத்தினார், இந்த ஓசென் நெறிமுறையை மென்பொருள் துறையின் சிந்தனைக் குழுவான "இந்திய மென்பொருள் தயாரிப்பு தொழில் ரவுண்ட்டேபிள் (iSpirit) அமைப்பு" உருவாக்கியுள்ளது.
  • iSpirit: Indian Software Product Industry RoundTable.
  • OCEN: Open Credit Enablement Network.

"ஒலிவியா டி ஹவில்லேண்ட்"

  • இரண்டு முறை ஆஸ்கார் விருதும் நடிகையான ஒலிவியா டி ஹவில்லேண்ட் (Olivia de Havilland) தனது 104 வயதில் பிரான்சின் பாரிஸில் ஜூலை 24-அன்று காலமானார். இவர் ஒரு டோ-ஐட் நடிகை (doe-eyed actress) என்று அறியப்பட்டவர்.
  • ஜப்பானின் டோக்கியோவில் 1916 ஜூலை 1 ஆம் தேதி பிறந்த இவர் ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படத்தின் கடைசி முன்னணி கதாபாத்திரத்தில் பணியாற்றினார்.

Share with Friends