Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 24th July 2020


அதிபா் விருது

  • இந்திய வம்சாவளியைச் சோ்ந்த செவிலியா் கலா நாராயணசுவாமிக்கு (59) சிங்கப்பூர் நாட்டின் அதிபா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சுகாதார மையத்தில் துணை இயக்குநராக இருக்கும் கலா நாராயணசுவாமி, கோவிட்-19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

International Union of Railways

  • சர்வதேச இரயில்வே யூனியனின் (International Union of Railways) பாதுகாப்புத் துறைக்கு (Security Platform) துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த அருண் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • 1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச இரயில்வே யூனியனின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது. இவ்வமைப்பில் 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

தேசிய ஒளிபரப்பு நாள்

  • ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 23 அன்று, இந்தியா முழுவதும் தேசிய ஒளிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட முதல் வானொலி ஒலிபரப்பை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Digantara-திகன்தாரா

  • திகன்தாரா என்று அழைக்கப்படும் ஒரு விண்வெளி தொடக்கமானது இந்தியாவின் முதல் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு LIDAR (Light Detection and Ranging) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

”குமார் சாஷாக்திகரண் யோஜனா”

  • ”குமார் சாஷாக்திகரண் யோஜனா” ('Kumhar Sashaktikaran Yojana' ) திட்டத்தின் கீழ் 100 மின்சாரத்தில் இயங்கும் மண்பாண்ட சக்கரங்களை ( electric potter wheels) குஜராத்தின் காந்திநகரிலுள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழங்கினார்.
  • ”குமார் சாஷாக்திகரண் யோஜனா” ('Kumhar Sashaktikaran Yojana' ) என்பது, கிராமப்புறங்கள் மற்றும் தொலை தூர கிராமங்களிலுள்ள மண்பாண்டத் தொழிலாள்களின் நலனுக்காக மத்திய காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் கமிஷனினால் ( Khadi and Village Industries Commission (KVIC) ) கடந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும்.

’உலக காடுகள் வள மதிப்பீடு 2020’

  • 2010-2020 ஆண்டு காலக்கட்டத்தில், உலக அளவில் காடுகள் பரப்பு அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளவையின், உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ’உலக காடுகள் வள மதிப்பீடு 2020’ (Global Forest Resources Assessment (FRA) 2020)எனும் அறிக்கையில், முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெற்றுள்ளன, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே சிலி மற்றும் வியட்நாம் நாடுகள் பெற்றுள்ளன.
  • உலக அளவில், காடுகள் சார்ந்து வேலைவாய்பை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் சுமார் 6.23 மில்லியன் மக்கள் காடுகளைச் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது உலகளவில் இத்தகைய வேலைவாய்ப்பில் 50% என்பது குறிப்பிடத்தக்கது.

World Class State of Art Honey Testing Laboratory

  • இந்தியாவின் முதல், உலகத்தரம் வாய்ந்த தேன் சோதனை ஆய்வகம் (World Class State of Art Honey Testing Laboratory) குஜராத் மாநிலம் ஆனந்த் எனுமிடத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை தேசிய தேனீ வாரியம் (National Bee Board) அமைத்துள்ளது.

Democratic People’s Republic of Korea

  • வட கொரியா நாட்டிற்கு (Democratic People’s Republic of Korea) 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காசநோய் மருந்துகளை இந்திய அரசு 24-7-2020 அன்று அனுப்பி வைத்துள்ளது. இந்த மருந்துப் பொருட்கள் உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்டுள்ளது.

Central Reserve Police Force (CRPF) raising day

  • 82 வது , மத்திய ரிசர்வ் போலீஸ் படை எழுச்சி தினம் (Central Reserve Police Force (CRPF) raising day) - ஜீலை 27 சி.ஆர்.பி.எஃ. எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை 27, ஜீலை 1939 ல் அரச பிரதிநித்துவ போலீஸ் (Crown representative Police) என்ற பெயரில் அப்போதைய பிரிட்டிஷ் அரசினால் தொடங்கப்பட்டது. பின்னர், 1949 ல் Central Reserve Police force எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Share with Friends