Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 23rd July 2020


இரண்டாவது பிளாஸ்மா வங்கி

  • இந்தியாவின் இரண்டாவது பிளாஸ்மா வங்கியை, (தில்லிக்கு அடுத்தபடியாக) சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக அரசு 22-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது.
  • கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகா் முதல் நபராக பிளாஸ்மா தானம் அளித்தாா்.

கக்ரபார் அணு மின் திட்டம்

  • கக்ரபார் அணு மின் திட்டம் (Kakrapar Atomic Power Project) : குஜராத்தில் கட்டப்பட்ட , உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கக்ரபர் அணுமின் திட்டத்தின் (Kakrapar Atomic Power Station) 3-வது உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

“பாரத்” (“Bharat”)

  • “பாரத்” (“Bharat” ) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தானியங்கி டிரோன்களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) உருவாக்கியுள்ளது.
  • இந்த டிரோன்கள் இந்திய இராணுவத்தில், சீன எல்லையைக் கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ளன.

"துருவஸ்திரா ஏவுகணை"

  • ஹெலிகாப்டரில் இருந்து டாங்கிகளை அழிக்கும் "துருவஸ்திரா ஏவுகணை" சோதனை வெற்றி : ”துருவஸ்திரா” ( “Dhruvastra” ) என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்தாக்குதல் “நாக்” ரக ஏவுகணையை (Anti Tank guided Nag Missile) மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) 15-16 ஜீலை 2020 தினங்களில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • எதிரிகளின் ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் 3வது தலைமுறை ஏவுகணை அமைப்பான ஹெலினா, இந்திய ராணுவத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பருவ காலங்களிலும், பகல் மற்றும் இரவிலும் தாக்குதல் நடத்த முடியும். தற்போது அதனை மேம்படுத்தி துருவஸ்திரா என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு எதிரிகளின் ராணுவ டாங்கிகள் மீது நேர் எதிராகவும், மேல் நோக்கியபடி இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். இந்த ஏவுகணை 500 மீட்டர் முதல் 7 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.

”விரிக்‌ஷாரோபன் அபியான்”

  • ”விரிக்‌ஷாரோபன் அபியான்” (“Vriksharopan Abhiyan”) என்ற பெயரில் சுரங்க வேலை நடைபெற்ற இடங்களில் அதிக அளவில் மரங்களை நட்டு பசுமைமயமாக்குவதற்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் 23 ஜீலை 2020 அன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டமானது, மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் அமலாக்கம் செய்யப்படவுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

  • பங்கு சந்தை மதிப்பின் படி, ரூ.13 இலட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய இந்தியாவின் முதல் நிறுவனம் எனும் பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited (RIL)) பெற்றுள்ளது. இத்தகைய மதிப்பை எட்டிய உலகின் 48 வது நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உருவாகியுள்ளது.

கொரோனா - அதிவிரைவு கருவி

  • 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது.
  • தற்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ RT-PCR (reverse transcription-polymerase chain reaction)’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.

“மாலியில்”

  • மாலத்தீவு நாட்டின் தலைநகர் “மாலியில்” ‘அவசர மருத்துவ சேவைகள்’ வழங்குவதில் இந்தியாவின் சார்பில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 22 ஜீலை 2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.

International Solar Alliance Framework Agreement

  • சர்வதேச் சூரிய ஆற்றல் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் (International Solar Alliance Framework Agreement) 87 வது உறுப்பினராக நிகராகுவா (Nicaragua ) நாடு இணைந்துள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில், பாரிஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டின் போது (United Nations Climate Change Conference, Paris -2015) பிரதமர் மோடி அவர்களினால் தொடங்கப்பட்டது.
  • இவ்வமைப்பின் தலைமையிடம் ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ளது.
  • தற்போதைய பொது இயக்குநராக (Director General) உபேந்திர திரிபாதி (Upendra Tripathy) உள்ளார்.
  • பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கும் ரஃபேல் போா் விமானத்தில் ஹேமா் ரக ஏவுகணைகளும் இணைத்து வாங்கப்படவுள்ளன. அவசரகால தேவையின் அடிப்படையில் இந்த ஏவுகணைகள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன.
  • நடுத்தர தொலைவு ஏவுகணையான ஹேமா், பிரான்ஸ் விமானப்படை மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணைகள் எத்தகைய பதுங்கு குழிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. மலைப்பாங்கான இடங்களிலும் இவை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்

”டினாவென் - 1” (Tianwen-1)

  • ”டினாவென் - 1” (Tianwen-1) என்ற பெயரில், செவ்வாய் கிரக ஆய்வுக்கான முதல் சுயாதீன ஆளில்லா விண்கலத்தை சீனா 23-7-2020 அன்று தனது லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம்வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.இந்த விண்கலம் பிப்ரவரி 2021 மாதத்தில் செவ்வாய் கிரகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு 90 நாட்களுக்கு கிரகத்தை ஆராய ஒரு ரோவரை இறக்கி ஆய்வு நடத்தும்.
  • கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

’மராதோ’

  • மாலத்தீவு நாட்டின் ’மராதோ’ (Maradhoo) மற்றும் ‘ஹல்குதூ’ (Hulhudhoo) நகரங்களில் அருகாமை மீன் பதப்படுத்தல் நிலையங்களை (Neighborhood Fish Processing Plants) அமைப்பதற்காக இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-7-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.

World Trade Organization

  • உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organization) 25 வது பார்வையாளர் அந்தஸ்துடைய நாடாக ‘துர்க்மெனிஸ்தான்’ ( Turkmenistan ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • 1 ஜனவரி 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தில் 164 நாடுகள் உறுப்பினர்களாகவும், 25 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளன.

Share with Friends