Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 18th July 2020


”சுரினாம்"

  • ”சுரினாம்” (Suriname) நாட்டின் அதிபராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ’சான் சந்தோகி’ ( ‘Chan’ Santokhi) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தென் அமெரிக்க கண்டத்திலுள்ள சுரினாமின் தலைநகரம் - பரமாரிபோ (Paramaribo) | நாணயம் - சுரிநாம் டாலர் (Suriname Dollar)

‘சிஎச்ஆட்ஆக்ஸ் 1 என்கோவ்-19’ தடுப்பூசி

  • ‘சிஎச்ஆட்ஆக்ஸ் 1 என்கோவ்-19’ (ChAdOx1 nCoV-1) என்ற பெயரில் கோவிட் -19 நோய்க்கான தடுப்பூசி ஒன்றை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவை அடிப்படையாகக்கொண்டது. ‘ஜைகோவ்-டி’ பிளாஸ்மிட் டி.என்.ஏ.வை ஆதாரமாக கொண்டது. இந்த தடுப்பூசி செப்டம்பர் 2020 ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன ஆய்வுக்கான தேசிய விருது.

  • 2019 -ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த வன ஆய்வுக்கான தேசிய விருது கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் முனைவர் கண்ணன் வாரியருக்கு, உயிரிப் பன்மையைக் காப்பதில் ஆய்வு மேற்கொண்டமைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் இவ்விருதினை வழங்கியுள்ளது.

HCL Technologies Limited

  • ஹெச்.சி.எல்நிறுவனத்தின் தலைவராக (HCL Technologies Limited) ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (Roshni Nadar Malhotra) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷ்னி நாடார் பொறுப்பேற்கிறார். அதே நேரத்தில் ஷிவ் நாடார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் தொடருவார் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலார் ஆர்பிட்டர்

  • சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து (7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில்) எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் (Solar Orbiter mission) எடுத்துள்ளது.
  • பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

FIFA World Cup 2022

  • "ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2022" (FIFA World Cup 2022) கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (Federation Internationale de Football Association) அறிவித்துள்ளது.

லா லிகா கால்பந்து போட்டி

  • ஸ்பெயினில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி தொடரல் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, வில்லார்ரியலை எதிர்கொண்டது.
  • முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொரோனா பாதிப்பு இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 10-வது வெற்றி இதுவாகும்.
  • மேலும் இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தையும் சொந்தமாக்கியது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ரியல் மாட்ரிட் பட்டத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த போட்டியில் அந்த அணி பட்டத்தை வெல்வது இது 34-வது முறையாகும்.

கொந்தகை அகழ்வாராய்ச்சி

  • மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும். கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.
  • இங்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து மேலும் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
  • அங்கு முதல்நாள் 2 குழந்தைகளின் உடல்கள் கிடைத்தது. கொந்தகை பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு கீழடி ஆய்வில் மொத்தம் 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
  • நேற்று முதல்நாள் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் இரண்டும் மிக சிறிய உடல்கள் ஆகும். ஒரு உடலின் அளவு 1.05 மீட்டர் மட்டுமே இருந்தது. இன்னொரு உடல் 0.65 மீட்டர் இருந்துள்ளது.
  • இரண்டு உடலும் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உடல்களை விட மிகவும் பழைய உடல்கள் ஆகும். அதில் இருந்த அளவு சதை பகுதி கூட இந்த உடல்களில் காணப்படவில்லை இந்த உடல்கள் தற்போது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • கிமு 300-400 ஆண்டுகளை சேர்ந்த உடல்களாக இது இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் மீதான ஜீன் ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்த உடல்களின் பாலினம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விரைவில் இதன் மீதான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.

Share with Friends