இந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்
கி.மு
✓3000-1500 சிந்து சமவெளி நாகரீகம்.
✓576 கெளதம புத்தர் பிறந்தார்.
✓527 மகாவீரர் பிறந்தார்.
✓327-326 அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான தரைவழிப்பாதை திறக்கப்பட்டது.
✓313 சமண மரபுப்படி சந்திரகுப்தர் மெளரியர் அரியணை ஏறினார்.
✓305 செலுக்கல்ஸ் சந்திரகுப்தர் மெளரியரிடம் தோல்வி அடைந்தார்.
✓273-232 அசோகரின் ஆட்சி காலம்.
✓261 கலிங்கத்துப் போரில் வெற்றி.
✓145-101 இலங்கையில் சோழ அரசர் எல்லாராவின் ஆட்சி.
✓58 விக்கிரம சகாப்தம் தொடக்கம்
கி.பி
✓78 சாக சகாப்தம் தொடக்கம்.
✓120 கனிஷ்கர் அரியணை ஏறினார்.
✓320 குப்தர் பேரரசு தொடக்கம்.இந்து இந்தியாவின் பொற்காலம்.
✓380 விக்கிரமாதித்தர் அரியணை ஏறினார்.
✓405-411 சீன பயணி பாஹியான் இந்தியா வருகை.
✓415 முதலாம் குமர குப்தர் அரியணை ஏறினார்.
✓455 ஸ்கந்த குப்தர் அரியணை ஏறினார்.
✓606-647 ஹர்ஷவர்தரின் ஆட்சி காலம்.
✓712 சிந்து பகுதியில் அரேபியர்களின் முதல் படையெடுப்பு.
✓836 கண்ணோசியில் போஜ அரசர் அரியணை ஏறினார்.
✓985 சோழ அரசர் இராஜராஜன் அரியணை ஏறினார்.
✓998 சுல்தான் முகமது அரியணை ஏறினார்.
✓1001 முதல் இந்திய படையெடுப்பில் பஞ்சாபை ஆண்ட மன்னன் ஜெய்பாலை முகமது சலானி தோற்கடித்தார்.
✓1025 முகமது கஜினியால் சோமநாத் கோயில் அழிக்கப்பட்டது.
✓1191 முதல் தரெய்ன் போர்.
✓1192 இரண்டாம் தரெய்ன் போர்.
✓1206 டெல்லி சிம்மாசனத்தில் குதுபுத்தீன் ஐபக் அரியணை ஏறினார்.
✓1210 குதுபுத்தீன் ஐபக் இறந்தார்.
✓1221 செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுப்பு (மங்கோல் படையெடுப்பு)
✓1236 ரசியா சுல்தான் டெல்லி அரியணை ஏறினார்.
✓1240 ரசியா சுல்தான் இறந்தார்.
✓1296 அலாவுதீன் கில்ஜி அரியணை ஏறினார்.
✓1316 அலாவுதீன் கில்ஜி இறந்தார்.
✓1325 முகமது பின் துக்ளக் அரியணை ஏறினார்.
✓1327 முகமது பின் துக்ளக்கால் தலைநகரம் டெல்லியிலிருந்து தெளலாபாத்திற்கு மாற்றப்பட்டது.
✓1336 தெற்கில் விஜயநகர பேரரசு உருவாக்கப்பட்டது.
✓1351 பிரோஸ் ஷா அரியணை ஏறினார்.
✓1398 இந்தியாவின் மீது தைமூர் லாங் படையெடுத்தார்.
✓1469 குருநானக் பிறந்தார்.
✓1494 பார்கானாவில் பாபர் அரியணை ஏறினார்.
✓1497-98 வாஸ்கோடாகாமா முதல் முறையாக கடல் மார்க்கம் வழியாக இந்தியாவுக்கு வருகை புரிந்தார். (இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் மார்க்கம் கண்டுபிடிக்கப்பட்டது).
✓1526 முதலாம் பானிப்பட்டு போர் நடைபெற்றது. பாபரால் இப்ராஹிம்லோடி தோற்கடிக்கப்பட்டார். முகலாய அரசு தோற்றுவிக்கப்பட்டது.
✓1527 கான்வாவில் நடைபெற்ற போரில் பாபர் ராணாசங்காவை தோற்கடித்தார்.
✓1530 பாபர் இறந்தார். ஹீ மாயூன் அரியணை ஏறினார்.
✓1539 ஷெர்ஷா சூரி, ஹீமாயூனை தோற்கடித்து இந்தியாவின் சக்கரவர்த்தி ஆனார்.
✓1540 கன்னோசிப் போர்.
✓1555 ஹீமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்றினார்.
✓1556 இரண்டாம் பானிப்பட்டு போர்.
✓1565 தலைக்கோட்டை போர்.
✓1576 ஹல்திகாட்டி போர், இராண பிரதாப் அக்பரால் தோற்கடிக்கப்பட்டார்.
✓1582 “தீன் ஏ இலாஹி” அக்பர் துவக்கினார்
✓1597 இராணபிரதாப் இறந்தார்.
✓1600 கிழக்கிந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்டது.
✓1605 அக்பர் இறந்தார். ஜஹாங்கீர் அரியணை ஏறினார்.
✓1606 குரு அர்ஜுன் தேவ் தூக்கிலிடப்பட்டார்.
✓1611 ஜஹாங்கீர் நூர்ஜஹானை மணந்தார்.
✓1616 சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரை சந்தித்தார்.
✓1627 சிவாஜி பிறந்தார். ஜஹாங்கீர் இறந்தார்.
✓1628 ஷாஜகான் இந்திய சக்கரவர்த்தி ஆனார்.
✓1631 மும்தாஜ் மகால் இறந்தார்.
✓1634 இந்தியாவின் வங்கத்தில் வியாபாரம் செய்ய ஆங்கிலேயர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
✓1659 ஒளரங்கசீப் அரியணை ஏறினார். ஷாஜகான் சிறைப்படுத்தப்பட்டார்.
✓1665 சிவாஜி ஒளரங்கசீப்பால் சிறைப்படுத்தப்பட்டார்.
✓1666 ஷாஜகான் இறந்தார்.
✓1675 9 வது சீக்கிய குரு தேக் பகதூர் தூக்கிலிடப்பட்டார்.
✓1680 சிவாஜி இறந்தார்.
✓1707 ஒளரங்கசீப் இறந்தார்.
✓1708 குரு கோவிந்த் சிங் இறந்தார்.
✓1739 நதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார்
✓1757 பிளாசிப் போர், கிளைவ் லார்ட் தலைமையில் இந்தியாவில் ஆங்கிலேய அரசியல் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
✓1761 மூன்றாம் பானிப்பட்டுப் போர், இரண்டாம் ஷா ஆலம் இந்தியாவின் பேரரசர் ஆனார்.
✓1764 பக்ஷர் போர்.
✓1765 கிழக்கிந்திய கம்பெனிக்கு கிளைவ் இந்தியஆளுநராக நியமிக்கப்பட்டார்.
✓1767-69 முதலாம் மைசூர் போர்.
✓1770 வங்கத்தின் பெருந்துயரம்.
✓1780 மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்தார்.
✓1780-84 இரண்டாம் மைசூர் போர்.
✓1784 பிட்ஸ் ஓம்டா சட்டம்.
✓1790-92 மூன்றாம் மைசூர் போர்.
✓1793 ஆங்கிலேயர்கள் வங்கத்தில் நிரந்தர குடியேற்றம்.
✓1799 நான்காம் மைசூர் போர் நடைபெற்றது, திப்பு சுல்தான் இறந்தார்.
✓1802 பாசீன் உடன்படிக்கை.
✓1809 அமிர்ஸ்டர் உடன்படிக்கை.
✓1829 சதி வழக்கம் தடைசெய்யப்பட்டது.
✓1830 ராஜாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். இங்கிலாந்து சென்றார்.
✓1833 ராஜாராம் மோகன் ராய் இறந்தார்.
✓1839 மகாராஜ் ரஞ்சித் சிங் இறந்தார்.
✓1839-42 முதலாம் ஆப்கான் போர்.
✓1845-46 முதலாம் ஆங்லோ-சீக்கிய போர்.
✓1852 இரண்டாம் ஆங்லோ பர்மிஸ் போர்.
✓1853 முதல் இரயில் இருப்புபாதை பம்பாயிக்கும் தானேக்கும் இடையில் திறக்கப்பட்டது. தந்தி கம்பி முறை பம்பாயிக்கும் கல்கத்தாவிற்கும் இடையில் திறக்கப்பட்டது.
✓1857 சிப்பாய் கழகம் அல்லது முதல் சுதந்திர போர்.
✓1861 இரவீந்திரநாத் தாகூர் பிறந்தார்.
✓1869 மகாத்மா காந்தி பிறந்தார்.
✓1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
✓1889 ஜவஹர்லால் நேரு பிறந்தார்.
✓1897 சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.
✓1904 திபெத் படையெடுப்பு.
✓1905 கர்சன் பிரபுவின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் வங்கப் பிரிவினை.
✓1906 இந்திய முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்டது.
✓1911 டெல்லி தர்பார்; டெல்லி இந்தியாவின் தலைநகரமானது; ராஜாவும் ராணியும் இந்தியா வருகை தந்தனர்.
✓1916 முதல் உலக போர் ஆரம்பம்.
✓1916 லக்னோ ஒப்பந்தம் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரசால் கையொப்பம் ஆனது.
✓1918 முதல் உலகப்போர் முடிவுபெற்றது.
✓1919 மாண்டேகு ஜேம்ஸ் போர்டு சீர்திருத்தம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை.
✓1920 கிலாபத் இயக்கம் ஆரம்பம்.
✓1927 சைமன் குழு புறக்கணிப்பு. இந்தியாவில் வானொலி ஒளிபரப்பு ஆரம்பமானது.
✓1928 லாலா லஜபதிராய் இறந்தார்.
✓1929 ஆர்வாம் பிரபு உடன்படிக்கை. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
✓1930 சட்ட மறுப்பு இயக்கம் ஆரம்பம். ஏப்ரல் 6 ம் நாள் மகாத்மா காந்தியால் தண்டி யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
✓1931 காந்தி-இர்வின் ஒப்பந்தம்.
✓1935 இந்திய அரசாங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
✓1937 மாகாண சுயாட்சிக்கான காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
✓1939 செப்டம்பர் 1 ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது.
✓1941 இரவீந்திரநாத்தாகூர் இறந்தார். இந்தியாவிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் தப்பிச் சென்றார்.
✓1942 ஆகஸ்டு 8 ம் நாள் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வந்தது, வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
✓1943-44 நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்து கூகுமாத் மற்றும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார். வங்கத்தின் துயரம்.
✓1945 செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் அணிவகுப்பு நடைபெற்றது. சிம்லா மாநாடு நடைபெற்றது.> இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
✓1946 ஆங்கில அமைச்சரவை தூதுக்குழு இந்தியா வந்தது, மத்தியில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது
✓1947 இந்தியா பிரிக்கப்பட்டது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனித் தனியாக டோமினியன் அந்தஸ்து பெற்றது.
✓1948 ஜனவரி 30 ம் நாள் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். அரச ராஜ்யங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
✓1949 காஷ்மீரில் போர் நிறுத்தம். நவம்பர் 26 ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்திடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
✓1950 ஜனவரி 26 ம் நாள் இந்தியா ஜனநாயக குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசியல் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது.
✓1951 முதல் ஐந்தாண்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
✓1952 முதல் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது.
✓1953 டேன்சிங் நார்கே மற்றும் சர் எட்மண்ட் கிலாரி இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்
✓1956 இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
✓1957 இரண்டாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. பைசா மதிப்பிலான நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கோவா விடுதலை பெற்றது.
✓1962 இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 20 ல் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியது.
✓1963 இந்தியாவின் 16 வது மாநிலமாக நாகலாந்து அறிவிக்கப்பட்டது.
✓1964 பண்டித ஜவஹர்லால் நேரு இறந்தார்.
✓1965 இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
✓1966 தாஸ்கண்ட் ஒப்பந்தம், லால் பகதூர் சாஸ்திரி இறந்தார், திருமதி. இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
✓1967 நான்காவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. டாக்டர். ஜாஹிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
✓1969 இந்தியாவின் குடியரசுதலைவராக வி.வி. கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.பெரும் வணிக வங்கிகள் குடியரசு தலைவர் மேலாணையால் தேசியமயமாக்கப்பட்டன.
✓1970 மேகலயா தனி மாநிலமாக ஆக்கப்பட்டது.
✓1971 இமாச்சலபிரதேசம் மாநிலமாக ஆனது. இந்தோ-பாக் போர் ஆரம்பமானது, பங்காளதேஷ் பிறந்தது.
✓1972சிம்லா ஒப்பந்தம். சி. இராஜகோபாலச்சாரி இறந்தார்.
✓1973 மைசூர் மாநிலம் கர்நாடகா மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
✓1974 இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. ஐந்தாவது குடியரசுதலைவராக பக்ருதீன் அலி அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்பட்டது.
✓1975 இந்தியா ’ஆரியப்பட்டா’ என்ற செயற்கைகோளை ஏவியது. சிக்கிம் இந்தியாவின் 22 வது மாநிலமாக ஆனது. அவசரநிலை பிரகடனம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது.
✓1976 இந்தியாவும் சீனாவும் ராஜ்ஜிய உறவை ஏற்படுத்திக்கொண்டன.
✓1977 ஆறாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஜனதா கட்சி மக்களவையில் பெருன்பான்மை பெற்றது. இந்தியாவின் ஆறாவது குடியரசுதலைவராக நீலம் சஞ்சீவி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
✓1979 பிரதம மந்திரி பதவியை மொரஜி தேசாய் இராஜினாமா செய்தார். சரண்சிங் பிரதம மந்திரி ஆனார். ஆகஸ்டு 20 ஆம் நாள் சரண்சிங் பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தார். ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டது.
✓1980 ஏழாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது திருமதி. இந்திராகாந்தி பிரதம மந்திரியாக பதவி ஏற்றார். சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார்; இந்தியா ரோகினி செயற்கைகோள் எஸ்.எல்.வி-3 விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தியது.
✓1982 ஆசியாவில் மார்ச் 2 ஆம் நாள் மிக நீளமான பாலம் திறக்கப்பட்டது. ஆச்சார்ய ஜே.பி கிருபாலனி மார்ச் 19 ஆம் நாள் இறந்தார். இன்சாட் 1ஏ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் குடியரசுதலைவராக கியானி ஜெயில் சிங் ஜுலை 15 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 5 ஆம் நாள் குஜராத்தை தாக்கிய புயலால் 500 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நவம்பர் 15 ஆம் நாள் ஆச்சார்யா வினோபாவோ இறந்தார்.9 வது ஆசியா விளையாட்டுப் போட்டி நவம்பர் 19 ஆம் நாள் தொடங்கப்பட்டது
✓1983 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
✓1984 பஞ்சாப்பில் ப்ளு ஸ்டார் தாக்குதல் நடத்தப்பட்டது. ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு சென்றார்.இந்திராகாந்தி கொல்லப்பட்டார். ராஜீவ்காந்தி பிரதம மந்திரி ஆனார்.
✓1985 ராஜீவ் – லோங்காவால் ஒப்பந்தம் கையொப்பமானது. பஞ்சாப் பொதுத்தேர்தலில் சாண்ட். ஹச்.எஸ். லோங்காவால் கொல்லப்பட்டார். அஸ்ஸாம் ஒப்பந்தம்.7- வது ஐந்தாண்டு திட்டம் துவங்கப்பட்டது.
✓1986 மிசோரம் ஒப்பந்தம்.
✓1987 ஆர். வெங்கட்ராமன் குடியரசுதலைவரானார்.இந்தியாவின் துணை குடியரசுதலைவராக சங்கர் தயால் ஷர்மா தேர்வுசெய்யப்பட்டார். போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சனை.
✓1989 ராமசேனா பண்டிகை அயோத்தியில் கொண்டாடப்பட்டது; இந்தியாவின் முதல் ஐ.ஆர்.பி.எம். ’அக்னி’ ஏவுகனை ஒரிசாவிலிருந்து மே 22 ம் நாள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திரிசூல் ஏவுகனை ஜுன் 5 ம் நாள் சோதனை செய்யப்பட்டது. செப்டம்பர் 27 ம் நாள் இரண்டாவது ஏவுகனை ‘பிருத்தீவ்’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராஜீவ்காந்தி தேர்தலில் தோல்வியுற்று, நவம்பர் 29 ம் நாள் பதவியை ராஜினாமா செய்தார். ஜவஹர் ரோஜ்கார் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.தேசிய முன்னணி தலைவர் வி.பி. சிங் 7- வது பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.டிசம்பர் 2 ம் நாள் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது.9 வது மக்களவை உருவாக்கப்பட்டது.
✓1990 இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து மார்ச் 25 ம் நாள் நாடு திரும்பியது. பிப்ரவரி 14 ம் நாள் இந்தியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 320 ரக விமானம் விபத்துக்குள்ளானது.ஜனதா தளம் பிளவுபட்டது. பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டது. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டார். மண்டல் கமிஷன் அறிக்கையை வி.பி. சிங் அமுல்படுத்துவதாக அறிவித்தார்,அயோத்தியில் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி பிரச்சினையால் கலவரம் உருவானது.
✓1991 ஜனவரி 17 ம் நாள் வளைகுடா போர் தொடங்கியது. ராஜீவ்காந்தி மே 21 ம் நாள் கொல்லப்பட்டார்.ஜுன் 20 ம் நாள் 10 வது மக்களவை ஏற்படுத்தப்பட்டது.பி.வி. நரசிம்மராவ் பிரதம மந்திரி ஆனார்.
✓1992 ஜனவரி 29 ம் நாள் இந்தியாவும் இஸ்ரேலும் முழு நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டது. ஏப்ரல் 23 ம் நாள் பாரத ரத்னா விருது மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற சத்தியஜித்ரே இறந்தார். ஜீலை 25 ம் நாள் சங்கர் தயால் சர்மா குடியரசுதலைவராக தேர்வுசெய்யப்பட்டார். முதல் முதலாக ஐ.என்.எஸ். ”சக்தி” என்ற நீர்முழ்கி கப்பல் கட்டப்பட்டு பிப்ரவரி 7 ம் நாள் பயன்படுத்தப்பட்டது.
✓1993 ஜனவரி 7 ம் நாள் அயோத்தியில் 67.33 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஆனை பிறப்பிக்கப்பட்டது. பாரதிய ஜனதா பேரணிக்கு அதிகபட்சமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. மும்பை வெடிகுண்டு தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர். இன்சார்ட் 2 பி முழு பயன்பாட்டிற்கு வந்தது. மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.
✓1994 விமான போக்குவரத்து தனியாருக்கு அனுமதிக்கப்பட்ட்து. காட் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. பிளேக் நோய் தாக்குதல்.பிரபஞ்ச அழகியாக சுஷ்மிதாசென்னும், உலக அழகியாக ஐஸ்வர்யாராயும் தேர்வு செய்யப்பட்டனர்.
✓1995 முதல் தலித் முதலமைச்சராக மாயாவதி உத்திரபிரதேச மாநிலத்தில் பொறுப்பேற்றார். மகாராஷ்ரா மற்றும் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா தளம் கர்நாடகத்திலும், காங்கிரஸ் ஒரிஸாவிலும் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் (த) உருவாக்கப்பட்டது. மாயாவதி அரசு கவிழ்ந்ததற்கு பின் உத்திரபிரதேச மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது.இன்சாட் 2சி மற்றும் ஐ.ஆர்.எஸ்.ஐ - சி ஏவப்பட்டது.
✓1996 பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் மீது ”ஹவாலா” வழக்கு தொடரப்பட்டது. மார்ச் 21 ம் நாள் பி.எஸ்.எல்.வி டி3 ஐ.ஆர்.எஸ்.பி-3 விண்ணில் செலுத்தப்பட்டது, இந்நிகழ்வு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சகாப்தமாகும். ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 11 வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 127 பிரதிநிதிகளுடன் தனிப்பெரும்பான்மை பெற்றது.
✓1997 ஆகஸ்டு 15 ம் நாள் இந்தியா 50 வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது.
✓1998 அன்னை தெரசா இறந்தார். அடல் பிகாரி வாஜ்பேயி இந்திய பிரதம மந்திரியாக ஆனார். பொக்ரானில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. (பொக்ரான் II)
✓1999 டிசம்பர் 24 ம் நாள் இந்திய விமானம் ஐ.சி-814 தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாருக்கு கடத்தப்பட்டது. இந்திய அரசு பிணையாளிகளை மீட்பதற்காக மூன்று போராளிகளை விடுவித்தது. பாகிஸ்தானால் ...சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி கே. நாச்சிகெடாவை எட்டு நாள்கள் காவலுக்கு பின் பாக்கிஸ்தான் விடிவித்தது.இந்திய இராணுவம் ஜம்மு & காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள கார்கில் பகுதியின் எல்லையை தாண்டி ஊடுருவி ”ஆப்பரேஷன் விஜய்” என்ற பெயரில் பாகிஸ்தான் ஊடுருவல் செய்தவர்கள் மீது, தாக்குதல்நடத்தியது போரில் வெற்றி பெற்றது.
✓2000 அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டன் மார்ச் மாதத்தில்இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டார். சட்டீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் மக்கள் தொகை 1 பில்லியனை தாண்டியது.
✓2001 ஜீலை 2001 இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆக்ரா உச்சி மாநாடு நடைபெற்றது இந்தியாவில் மோசமான இயற்கை சீற்றம் ஏற்பட்டது குஜராத்தில் ஜனவரி 2001 ல் பூகம்பம் ஏற்பட்டது. மார்ச் மாதத்தில் டெஹெல்கா.காம் என்ற இணையதளம் வெளியிட்ட ஆயுதபேர காட்சிகள் இராணுவ அதிகாரிகள் ,மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சிக்கலில் தள்ளியது.இந்தியாவின் 6 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் மாதத்தில் கணக்கெடுக்கப்பட்டது.(சுதந்திரம் பெற்றதிலிருந்து).ஆகஸ்டு மாதத்தில் என்ரன் நிறுவனம் இந்திய ஆற்றல் துறையிலிருந்து விலகியது. ஜி.எஸ்.எல்.வி. செயற்கை கோள் ஏப்ரல் மாதத்திலும் பி.எஸ்.எல்.வி – சி3 அக்டோபர் மாதத்திலும் ஏவப்பட்டது.
✓2002 71 வயதான ஏவுகனை விஞ்ஞானி அவுல் பகீர் ஜெயினுலப்தீன் அப்துல் கலாம், இந்தியாவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்திய காலத்தில் நடைபெற்ற கொடூரமான மதக்கலவரத்தில் ஒன்றான ”கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்” பிப்ரவரி 27 ம் நாள் குஜராத்தில் நடைபெற்றது. ஏப்ரல் மாதத்தில் தேசிய நீர்வளக் கொள்கையானது நீர் வள மேலாண்மை மற்றும் நிலைத்த பயன்பாட்டிற்கான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது.
✓2003 அணுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் முடிவெடுக்கும்/நிலைப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஏர் மார்ஷல் தேஜா மோகன் அஷ்தானா, முதல் தலைமை…… தளபதியாக (SFC)அறிவிக்கப்பட்டார். மேம்படுத்தப்பட்ட பன்பயன்பாட்டு தொலைதொடர்பு செயற்கைகோள் இன்சாட் 3எ பிரெஞ்சு குயானாவிலுள்ள கொருஉ விண்வெளித் தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜுன் மாதத்தில், பொருளாதார குற்றங்களை ஒழிக்கும் நோக்கோடு மத்திய புலனாய்வுத் துறையின் பொருளாதார புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டது. இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட தொலைதொடர்பு செயற்கைகோளான இன்சாட் 3இல் பிரெஞ்சு குயானாவிலுள்ள கொருஉ விண்வெளித்தளத்திலிருந்து ஐரோப்பிய விண்கலத்தின் உதவியுடன் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
✓2004 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்தியது. காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி பிரதமராக வாய்ப்பு பலமாக இருந்தும், விரும்பாததால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் தலைமையின் கீழ் அரசு அமைத்தது.
இந்திய அளவில் சில முக்கிய தினங்கள்
✓ ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்
✓ஜனவரி 15 இராணுவ தினம்
✓ஜனவரி 26 இந்திய குடியரசு தினம்
✓ஜனவரி 30 தியாகிகள் தினம்
✓பிப்ரவரி 24 தேசிய காலால் வரி தினம்
✓பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்
✓ஏப்ரல் 05 தேசிய கடற்படை தினம்
✓மே 11 தேசிய தொழில் நுட்ப தினம்
✓ஆகஸ்டு 09 வெள்ளையனே வெளியேறு தினம்
✓ஆகஸ்ட 15 சுதந்திர தினம்
✓ஆகஸ்ட 29 தேசிய விளையாட்டு தினம்
✓செப்டம்பர் 05 ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
✓அக்டோபர் 08 இந்திய விமானப்படை தினம்
✓அக்டோபர 10 தேசிய அஞ்சல் தினம்
✓நவம்பர் 14 குழந்தைகள் தினம்
✓டிசம்பர் 18 சிறுபான்மையினர் உரிமை தினம்
✓டிசம்பர 23 விவசாயிகள் தினம்
உலக அளவில் சில முக்கிய தினங்கள்:
-
✓ஜனவரி 10 உலக சிரிப்பு தினம்
✓ஜனவரி 26 சர்வதேச சுங்கவரி தினம்
✓ஜனவரி 30 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
✓மார்ச் 08 சர்வதேச மகளிர் தினம் மற்றும் சர்வதேச எழுத்தறிவு தினம்
✓மார்ச 15 உலக ஊனமுற்றோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம்
✓மார்ச 21 உலக வன நாள் மற்றும் சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்
✓மார்ச 22 உலக தண்ணீர் தினம்
✓மார்ச 23 உலக வானிலை ஆய்வு தினம்
✓மார்ச 24 உலக காசநோய் தினம்
✓ஏப்ரல் 07 உலக ஆரோக்கிய தினம்
✓ஏப்ரல 17 உலக இரத்த உறையாமை தினம்
✓ஏப்ரல 18 உலக மரபு தினம்
✓ஏப்ரல 22 பூமி தினம்
✓ஏப்ரல 23 உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
✓மே 01 சர்வதேச தொழிலாளர் தினம்
✓மே 03 பத்திரிகை சுதந்திர தினம்
✓மே 08 உலக செஞ்சிலுவை தினம்
✓மே 12 சர்வதேச செவிலியர் தினம்
✓மே 15 சர்வதேச குடும்ப நாள்
✓மே 22 சர்வதேச உயிர் பண்ணம தினம்
✓மே 24 காமன் வெல்த் தினம்
✓மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்
✓ஜுன் 05 உலக சுற்றுச் சூழல் தினம்
(3 வது ஞாயிறு ) தந்தையர் தினம்
✓ஜுலை 01 சர்வதேச கேளிக்கை தினம்
✓ஜுலை 11 உலக மக்கள் தினம்
(3வது ஞாயிற்று கிழமை) தேசிய ஐஸ் கிரீம் தினம்
✓ஆகஸ்டு 06 ஹீரோசிமா தினம்
✓ஆகஸ்ட 09 நாகசாகி தினம்
✓செப்டம்பர் 08 உலக எழுத்தறிவு தினம்
✓செப்டம்பர 16 உலக ஓசோன் தினம்
✓செப்டம்பர 26 காது கோளாதோர் தினம்
✓செப்டம்பர 27 உலக சுற்றுலா தினம்
✓அக்டோபர் 01 சர்வதேச முதியோர் தினம்
✓அக்டோபர 03 உலக குடியிருப்பு (உறைவிடம்) தினம்
✓அக்டோபர 04 உலக விலங்கு நல தினம்
✓அக்டோபர 12 உலக பார்வை தினம்
✓அக்டோபர 16 உலக உணவு தினம்
✓அக்டோபர 24 ஐக்கிய நாடுகள் தினம்
✓அக்டோபர 30 உலக சிக்கன நாள்
✓நவம்பர் 14 நீரிழிவு நோய் தினம்
✓நவம்பர 29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்
✓டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம்
✓டிசம்பர 03 உலக ஊனமுற்றோர் தினம்
✓டிசம்பர 10 சர்வதேச ஒளிபரப்பு தினம் மனித உரிமை தினம்
- வரலாறு
- தமிழக அரசின் விருதுகள்
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas)
- தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு (Pandyas)
- இந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்
- வேதகாலம் (Vedic Period)
- தென்னிந்திய வரலாறு (South Indian History)
- வரலாற்றுக்கு முந்தைய காலம் (South Indian History)
- சமணமும் பௌத்தமும் (Jainism-Buddhism)
- பேரரசுகளின் தோற்றம் (Origins Of Empires)
- குஷாணப் பேரரசு (Cushion Empire)
- இராசபுத்திர அரசுகள் (Rajputs)
- அரேபியர்கள்-துருக்கியர்கள் (Arabs-Turks)
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire)
- தக்காண அரசுகள் (Deccan)
- CA-அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு