Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 1st June 2020


Paytm மூலம் பேருந்து கட்டணம்

  • தமிழக அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர்

  • தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக பதவிவகித்து வந்த எஸ்.நாகராஜன் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புதுமை முயற்சிகள் நிறுவனத்தின் இயக்குநராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, புதிய இயக்குனராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அஜய் யாதவ் முன்னதாக சா்க்கரைத் துறை கூடுதல் இயக்குராக பதவிவகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே-ஃபான் (K-FON)

  • கேரளத்தில் ஏழை மாணவா்களுக்கான இலவச இணைய வசதி (கே-ஃபான்) திட்டம் (Kerala Fibre Optic Network (K-FON)) , 2020 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

”எனது வாழ்க்கை எனது யோகா”

  • மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை இணைந்து நடத்தும் ”எனது வாழ்க்கை எனது யோகா” (My Life My Yoga) என்ற வீடியோ போட்டியை பிரதமர் நரேந்திர மோடி மே-31 அன்று தொடங்கி வைத்தார்.
  • வரும் ஜூன் 21ல், கொண்டாடப்பட உள்ள சர்வதேச யோகா தினதை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

FSSAI

  • Food Safety and Standards Authority of India (FSSAI)
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பதவிவகித்து வந்த பவன் அகர்வால் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள logistics பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து FSSAI-இன் புதிய தலைமை செயல் அதிகாரியாக அருண் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • FSSAI-இன் தலைவர்(Chairperson) – ரீட்டா டியோடியா(Rita teotia ) உள்ளார்.

ஃபால்கன்-9 ரக ராக்கெட்

  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சோ்ந்த இரு வீரா்களை அந்த நாட்டின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
  • தனியாா் நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளி வீரா்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்பெஸ் -எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஃபால்கன்-9 ரக ராக்கெட், ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து 30-5-2020 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
  • டக் ஹா்லீ, பாப் பேன்கென் ஆகிய இரு நாசா வீரா்களை ஏந்தி, சா்வேதச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி அந்த ராக்கெட் செலுத்தப்பட்டது.

கிரண்ஜீத் கவுர்

  • இந்திய நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை கிரண்ஜீத் கவுர் (Kiranjeet Kaur) Enobosarm ($C_{19}H_{14}F_{3}N_{3}O_{3}) என்ற ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக நான்கு ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற தடை செய்யப்பட்டுள்ளார்.

Narendra Modi – Harbinger of Prosperity & Apostle of World Peace

  • நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர் என்ற பெயரிலான பிரதமர் மோடி பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா, அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

உலக பால் தினம்

  • பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால், பால் ஓர் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கருப்பொருள்: உலக பால் தினத்தின் இருபதாம் ஆண்டு (20th Anniversary of World Milk Day)
  • மேலும் இதேநாளில் உலக பெற்றோர்கள் தினமும் அனுசரிக்கப்படுகிறது.
Share with Friends