75-வது ஆண்டு வெற்றி விழா
- இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழா மாஸ்கோ நகரில் ஜூன் 26 அன்று நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
- ஆண்டுதோறும் மார்ச் 9 ஆம் தேதியை வெற்றி தின விழாவாக கொண்டாடி வந்தது ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூன் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் மார்டின்
- அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் 160 ஓட்டுகளில் 93 ஓட்டுகள் பெற்று பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சிதா சானு
- தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதை இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு பெறவுள்ளார்.
2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்
- ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளன.
- 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
- 2019 உலகக் கோப்பைப் போட்டி பிரான்சில் நடைபெற்றது. 24 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியை அமெரிக்கா, 4-வது முறையாக வென்றது.
- ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளன.
- 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
- 2019 உலகக் கோப்பைப் போட்டி பிரான்சில் நடைபெற்றது. 24 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியை அமெரிக்கா, 4-வது முறையாக வென்றது.
ஐ.சி.சி. உயர்மட்ட நடுவர் குழு
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார்.
- இக்குழுவில் இடம் பிடித்த 3-வது இந்தியர் நிதின் மேனன் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோர் இந்த நடுவர் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
- இதில் இளம் வயது நடுவர் நிதின் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய புள்ளியியல் தினம்
- இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் PC மஹலனோபிஸ் (PC Mahalanobis) அவர்களின் பிறந்த தினமான ஜீன் 29 தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- கருப்பொருள்: நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம்
- உலக புள்ளியியல் தினமானது அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- மேலும்
- ஜீன் 29 = சர்வதேச வெப்பமண்டல தினம்
- ஜீலை 29 = புலிகள் தினம்
- ஆகஸ்ட் 29 = தேசிய விளையாட்டு தினம்
- செப் 29 = உலக இருதய தினம் மற்றும் தேசிய காப்பி தினம்
- அக்டோபர் 29 = உலக பக்கவாத தினம்