Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 19th June 2020


பவளப் பாறைகள் வெளுத்தல்

  • ஏறத்தாழ 21 தீவுகளில் பரவியுள்ள மன்னார் வளைகுடா ஆனது வாழ்வாதாரம் தொடர்பாக ஏற்படும் மனித அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
  • இந்தத் தீவுகள் மற்றும் பவளப் பாறைகள் கூட்டாக இணைந்து மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவை அமைக்கின்றன.
  • GOMல் (Gulf of Mannar) உள்ள பவளப்பாறைகள் பெரும்பாலும் கோடைக் காலத்தில் நீரின் வெப்பநிலை 30° செல்சியசிற்கு மேல் செல்லும் போது வெளுத்துப் போகின்றன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் நீரின் வெப்பநிலை குறைந்த பின் இவை மீண்டும் மீட்சி பெறுகின்றன.
  • சமீபத்திய ஒரு ஆய்வின்படி ஆம்பன் மற்றும் நிசர்கா புயல்கள் மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளை அதிக அளவில் வெளுத்துப் போவதிலிருந்துப் பாதுகாத்துள்ளன.
  • இந்த 2 குறைந்த காற்றழுத்தத் தாழ்வுகளுடன் கூடிய புயல் காற்றுகள் கோடைக் காலத்தில் கடல் நீரின் வெப்பநிலையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளன.
  • தற்பொழுதைய காலநிலையானது இதே நிலையில் நீடித்தால் பவளப் பாறைகள் எந்தவொரு இறப்பும் ஏற்படாமல் ஜூலை மாத இறுதியில் முழுவதும் மீட்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • கடலில் கழிவுநீர் குறைவாகக் கலத்தல், தொழிற்சாலை மனித நடவடிக்கைகள், பொது முடக்கத்தின்போது மீன் பிடிக்கத் தடை ஆகியவை மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பவளப் பாறையின் வளம், மற்றும் பவளப் பாறைகள் வேகமாக மீட்சி பெறுதல் ஆகியவற்றிற்கு உதவி புரிகின்றன.

உலகப் போட்டிக் குறியீடு

  • சமீபத்தில் மேலாண்மை வளர்ச்சி மையமானது இந்தக் குறியீட்டை வெளியிட்டு உள்ளது.
  • இதில் இந்தியா 43வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தத் தரவரிசையானது சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள வணிகப் பள்ளியினால் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பகுதியின் மீதான காலநிலை மாற்றம் குறித்த முதலாவது ஆய்வு

  • மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகமானது இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இது எதிர்வரும் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் புவி வெப்பமடைமாதலின் தாக்கம் குறித்த இந்தியாவின் முதலாவது தேசியக் கணிப்பு ஆகும்.
  • இது 2022 ஆம் ஆண்டில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் (IPCC - Intergovernmental Panel on Climate Change) அடுத்த அறிக்கையின் ஒரு பகுதி ஆகும்.
  • இந்தக் கணிப்புகள் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானவியல் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள காலநிலைக் கணிப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இது தற்போதைய நிலையில் மனித நடவடிக்கைகள் பசுமை இல்ல வாயுக்களைத் தொடர்ந்து உமிழ்ந்து கொண்டிருந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது 5° செல்சியஸ் என்ற அளவில் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தியாவின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது 1976 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்துடன் ஒப்பிடப்படும் போது 2100 ஆம் ஆண்டின் இறுதியில் 4.4° செல்சியஸ் என்ற அளவிற்கு அதிகரிக்கும்.
  • நாட்டின் சராசரி வெப்பநிலையானது 1900 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடப்படும் போது 0.7° செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்து உள்ளது.

கேலோ இந்தியா மாநில சிறப்புமிகு மையங்கள்

  • மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமானது ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் திறனை வலுப்படுத்துவதற்காக வேண்டி “கேலோ இந்தியா மாநில சிறப்புமிகு மையங்கள்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது 8 மாநிலங்களில், அரசால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு மையங்களை அடையாளம் கண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட இருக்கும் 8 மையங்கள் அருணாச்சலப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ளது.

சிச்சோதோரக்ஸ் சிகுசிருமென்சிஸ்

  • “சிச்சோதோரக்ஸ் சிகுசிருமென்சிஸ்” (Schizothorax sikusirumensis) என்ற ஒரு புதிய வகை மீன் இனமானது அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மீன் இனத்தின் பெயரானது இந்த மீன் இனம் காணப்படும் நதிகளின் பெயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இவை சிர்ரம் மற்றும் சிகு ஆகிய 2 நதிகளாகும்.

2020 இந்தியக் கைபேசி பணவழங்கீட்டுச் சந்தை அறிக்கை

  • எஸ் பி உலகளாவிய சந்தை நுண்ணறிவு என்ற நிறுவனமானது இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைபேசி மூலம் கட்டணம் செலுத்துதல் மற்றும் அட்டை மூலமான பணப் பரிமாற்றங்கள் ஆகியவை பண வழங்கல் (ஏடிஎம்) இயந்திரங்களிலிருந்து பணம் எடுப்பதைக் காட்டிலும் அதிகரித்து உள்ளது.
  • கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகம் மூலமான பணம் செலுத்துதலில் முன்னிலை வகிக்கின்றன.

Share with Friends