ஊது உலை
- திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
- மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது.
- இதுவரை கிடைக்காத பெயராக, ‘அகூரவன்‘ என்ற, தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது, ஒரு இனக்குழுவின் தலைவர் பெயராக இருக்கலாம்.
திரங்கா (Tiranga) கார்
- கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்யும் சமயத்தில், சுகாதார பணியாளர்களையும் கோவிட்-19 தொற்றிக்கொள்ளும் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, திரங்கா (Tiranga) என்ற காரை கேரளா பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கேரள மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கோவிட்-19 வைரஸ் தாக்கிய நோயாளிகளை வேகமாக கண்டறியவும், நோயாளிகளை பாதுகாப்பாக பரிசோதிக்கவும் பயன்படுத்தப்படும் இந்த காரில் 3 சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள், பொது அறிவிப்பின் மூலம் மக்களை பரிசோதனைக்கு அழைக்கிறார்கள்.
இ-பஞ்சாயத்து புரஸ்கார் பரிசு
- e-Panchayat Puraskars 2020
- மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருதின் முதல் பரிசை ஹிமாச்சலப் பிரதேசம் பெற்றுள்ளது.
- மேலும் இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் மாநிலமும், மூன்றாவது பரிசை மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் பெற்றுள்ளன.
Kill Corona
- கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய பிரதேச மாநில அரசு Kill Corona எனும் விழிப்புணர்வை தொடங்கியுள்ளது
“இந்திய காசநோய் அறிக்கை 2020”
- காசநோயை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்கள் பெற்றுள்ளன.
- மேலும் சிறிய மாநிலங்கள் பட்டியலில் நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பி.சி. மஹாலனோபிஸ் விருது
- மத்திய அரசு, மாநில அரசு/யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வப் புள்ளியியல் நிபுணர்களின், சிறந்த சாதனையை அங்கீகரிக்க, ‘அதிகாரப்பூர்வப் புள்ளியியலில் பேராசிரியர்.பி.சி.மகலனோபிஸ் தேசிய விருதை’ திட்ட அமலாக்கத்துறை(MoSPI) உருவாக்கியுள்ளது.
- இந்தியாவில் தேசியப் புள்ளியியல் அமைப்பில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர். சக்கரவர்த்தி ரங்கராஜனின் சிறப்பானப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவருக்குப் பேராசிரியர் பி.சி.மகலனோபிஸ் தேசிய விருது வழங்கப்பட்டது.
- புள்ளியியல் துறையில் தங்களின் வாழ்நாள் பங்களிப்பை அளித்தற்கு, தேசிய மருத்துவப் புள்ளியல் கழகத்தின் (NIMS) முன்னாள் இயக்குநர் டாக்டர்.அரவிந்த் பாண்டே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ICMR) மற்றும் மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர். அகிலேஷ் சந்திரா குல்ஸ்ரேஷ்தா ஆகியோருக்குக் கூட்டாக, ‘புள்ளியியலில் பேராசிரியர் பி.வி. சுகாத்மே தேசிய விருது 2020’ வழங்கப்பட்டது.
மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில்
- வாங்கும் சக்தியை (PPP) அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சீனா, அமெரிக்கா, இந்தியா பிடித்துள்ளன.
- 2017ஆம் ஆண்டு தரவுகளின் படி இந்த பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
- PPP = Purchasing Power Parity