Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 10th June 2020

புதிய கோள்

  • உலகில் முதல் முறையாக ஒரு கோள் உருவாவதை படம் பிடித்துள்ளதாக பிரான்சு நாட்டை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
  • அவர்கள், பூமியிலிருந்து 520 ஒளியாண்டு தொலைவில் உள்ள ‘ஆரிகா’ (Auriga) பால்வெளித் திரளிலுள்ள ‘AB Aurigae’என்ற நட்சத்திரத்தினருகில் ஒரு புதிய கோள் உருவாவதைப் European Southern Observatory’s Very Large Telescope (ESO’s VLT) தொலைநோக்கி மூலம் படம்பிடித்துள்ளார்கள்.

Kepler-160 & KOI-456

  • சூரியன் மற்றும் பூமியை ஒத்த, கெப்ளர் - 160 (Kepler-160) எனும் நட்சத்திரம் மற்றும் ”KOI-456” எனும் கோளையும் ஜெர்மனியைச் சேர்ந்த Max Planck Institute for Solar System Research (MPS) , University of Göttingen, அமெரிக்காவின் University of California, மற்றும் NASA வின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

‘ரிமோட்’ வெண்டிலேட்டர்’

  • கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வெண்டிலேட்டரை போலந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.தொலைவில் இருந்து கொண்டு இதை டாக்டர்கள் இயக்க முடியும்.

இந்தியாவில் பரவும் கொரோனா

  • இந்தியாவில் பரவும் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து, இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
  • இந்த ஆய்வின் படி, இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற ”பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள்” மற்றும் ”தெற்காசிய பிராந்தியங்களில்” தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
  • இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.

ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி போட்டியில் பங்கேற்க தடை

  • ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
  • அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
  • இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.

செவ்வாய் கிரகம்

  • செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது.
  • இதில் சர்வதேச அளவில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியின் அதிபா் பியொ் குரூன்ஸிஸா மாரடைப்பால் மரணமடைந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
  • 56 வயதான அவா், 2005-ஆம் ஆண்டு முதல் புரூண்டியில் ஆட்சி செலுத்தி வந்தாா்.

லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ்

  • கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்துப் பகுதி ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவங்கள் படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
  • இதனால், இருநாட்டு எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.அதே நேரத்தில், பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் திரும்பப் பெறப்படவில்லை.
  • லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் கடந்த மே மாத தொடக்கத்தில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
  • முக்கியமாக, பாங்காங் ஏரி பகுதியில் மே 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.
  • இதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் சில இடங்களில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்தது.
  • அவா்கள் கூடாரம் அமைத்து தங்கினா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது.
  • இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது.
  • இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தற்போது 3 இடங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பதற்றம் சற்று தணித்துள்ளது.

”புராஜக்ட் பிரித்வி” (Project Prithvi)

  • ”புராஜக்ட் பிரித்வி” (Project Prithvi) என்ற பெயரில் நாடுதழுவிய நீடித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme-UNDP) , ஹிந்துஸ்தான் கோகோகோலா நிறுவனம் (Hindustan Coca-Cola Beverages Pvt Ltd (HCCB)) மற்றும் ஹைதராபாத்தைச் சேரத ‘ரிசைக்கால்’ ("Recykal") ஆகியவை இணைந்து இந்தியாவில் அமல்படுத்தவுள்ளன.
  • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் (2020-2021) ஒரு லட்சத்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
  • ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அனைத்து என்சிஇஆர்டி தொலைக்காட்சி சேனல்களிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி (NCERT) யும், ரோட்டரி இந்தியாவும் (Rotary India) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளன.
  • இதன் படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை மின் கற்றல் மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் வித்யா தான் 2.0 என்ற திட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி-யிடம் அளிக்கும்.மின் கற்றலுக்கான இந்தப் பாடங்கள் மத்திய அரசின் தேசிய அலைபேசி செயலியான தீக்ஷா மூலமாகவும் கிடைக்கும்.

Share with Friends