சர்வதேச யோகா தினம்
- 6வது சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்பட்டது.
- சர்வதேச யோகா தினதிற்கான ஐநாவின் கருப்பொருள் “Yoga for Health – Yoga at Home”. மேலும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கருப்பொருள் “Yoga at Home – Yoga with Family”.
- மேலும் இதே நாளில், உலக நீர்நிலையியல் தினமும், தந்தையர் தினமும் (ஜீன் மூன்றாவது ஞாயிறு) ஜூன் 21-இல் அனுசரிக்கப்படுகிறது
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (MCC)
- மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்து வரும் குமார் சங்ககாரா பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடியடைவதை தொடர்ந்து அடுத்த தலைவராக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளேர் கோனரின் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் 233 ஆண்டுகால வரலாற்றில், முதலாவது பெண் தலைவராக கிளேர் கோனர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள்
- 4 வது ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் 1 லிருந்து 10 வரை பஹரைன் (Bahrain) நாட்டில் நடைபெறவுள்ளது.
- 3வது ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2017ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
“விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம்”
- 6வது சர்வதேச யோகா தினதை முன்னிட்டு, நாக்கோவிலில் செயல்பட்டு வரும் ‘விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானா’ நிறுவனதின் சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டடுள்ளது.
- இதனை இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்தார்.
- இந்தியாவுக்கு வெளியேயான, உலகின் முதலாவது யோகா பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்யமந்திரி ஷ்ராமிக் யோஜனா
- Mukhyamantri SHRAMIK Yojna
- ஜார்க்கண்ட் மாநில அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஒருபகுதியாக, நகரத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் முக்யமந்திரி ஷ்ராமிக் யோஜனா எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- [SHRAMIK – Shahri Rozgar Manjuri For Kamgar]
- மேலும், கடந்த மாதம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப அழைத்து செல்ல, இந்திய ரயில்வே “ஷ்ராமிக் சிறப்பு” (shramik special) என்ற பெயரில் ரயில்களை இயங்கியது குறிப்பிடத்தக்கது.