வருடாந்திர காசநோய் அறிக்கை
- இது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மத்தியக் காச நோய்ப் பிரிவினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
- 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 24.04லட்சம் காச நோயாளிகள் உள்ளனர். இது 2018 ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கையை விட 14% அதிகமாகும்.
- நிக்சய் என்ற முறையின் மூலம் காச நோயாளிகளின் அறிவிப்பு வரிசையை இந்தியா முழுவதும் நிறைவு செய்ய இருக்கின்றது.
- இந்திய அரசானது தேசியக் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் என்பதனை தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டம் என்று மறுபெயரிட்டுள்ளது.
- இது , 2025 ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் காசநோயை ஒழிப்பதின் மீது கவனம் செலுத்துகின்றது
- மிகப்பெரிய மாநிலங்களின் வரிசையில் குஜராத் மாநிலமானது சிறப்பாக செயல்படும் மாநிலமாகத் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
- இதில் இதற்கு அடுத்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை முறையே 2 வது மற்றும் 3வது இடங்களில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இந்துக் கோயில
- கிருஷ்ணர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது இந்துக் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவானது பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடத்தப் பட்டது.
- பாகிஸ்தான் விடுதலை பெற்றதிலிருந்து இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதலாவது இந்துக் கோவில் இதுவாகும்.
- இந்தக் கோவிலின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா மந்தி என்பதாகும்.
வியன்னா ஒப்பந்தம்
- இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50% ஆகக் குறைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- மேலும் இந்தியா புதுதில்லியில் உள்ள இந்தியாவிற்கான பாகிஸ்தான் உயர் ஆணையக அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையையும் 50% ஆகக் குறைக்க வலியுறுத்தியுள்ளது.
- வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதைத் தொடர்ந்து இந்தியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது
உலகளாவியக் கல்விக் கண்காணிப்பு அறிக்கை
- இது யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்படையிலான ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.
- இது புதிய நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் கட்டமைப்பில் கல்வி சார்ந்த இலக்குகளை நோக்கிய ஒரு கண்காணிப்புச் செயல்முறைப் பணியை மேற்கொள்ள வேண்டி பணியமர்த்தப் பட்டிருக்கின்றது.
- இது கல்வி குறித்த உலகச் சமத்துவமின்மை தரவுத் தளத்தையும் உருவாக்கி உள்ளது.
நாசிசத்திற்கு எதிரான வெற்றி
- இந்திய ஆயுதப் படைகளின் முப்படைப் பிரிவானது மாஸ்கோவின் சிவப்புச் சதுக்கத்தில் நடைபெற்ற இரஷ்ய தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது.
- இந்த ஆண்டானது 2வது உலகப் போரின் போது 1945 ஆம் ஆண்டில் நாசி ஜெர்மனிக்கு எதிராக பெற்ற வெற்றியின் 75 வது ஆண்டு தினத்தைக் குறிக்கின்றது.
- இத்தின அணிவகுப்பில் நேரடியாகக் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கும் ஒருவராவார்.
- இந்தியா முதன்முறையாக 2015 ஆம் ஆண்டில் ரஷ்யா அணிவகுப்பில் கலந்து கொண்டது.
- ஆனால் அப்பொழுது இந்த அணிவகுப்பில் இந்தியத் தரைப்படை இராணுவம் மட்டுமே கலந்து கொண்டது.