Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 6th June 2020


”ஒளிரும் தமிழ்நாடு” மாநாடு

  • தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) சாா்பில் நடைபெறும் ஒளிரும் தமிழ்நாடு எனும் காணொலி மாநாட்டை முதல்வா் பழனிசாமி 06-06-2020 அன்று தொடக்கி வைத்தார்.

மான்கிபாத் வானொலி உரை - நித்ரா

  • பிரதமர் மோடி அவர்களால் மான்கிபாத் வானொலி உரையில் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நித்ரா 'ஐக்கிய நாடுகளவை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சங்கத்தின் (United Nations Association for Development and Peace (UNADAP) )ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சம் சிறுமி நேத்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    "நகர் வன்” திட்டம் (‘Nagar Van’ scheme)

    • "நகர் வன்” திட்டம் (‘Nagar Van’ scheme) என்ற பெயரில் இந்தியாவில் 200 நகர்புற காடுகளை (Urban forests) உருவாக்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு, உலக சுற்றுசூழல் தினம் 2020 கொண்டாட்டத்தின் போது அறிவித்துள்ளது.

    BAFTA

    • புகழ்பெற்ற ‘பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை அகதமியின்’ (British Academy of Film and Television Arts(BAFTA)) தலைமைப் பொறுப்பிற்கு இந்திய வம்சாவளி ’கிரிஷ்னேண்டு மஜூம்தார்’ (Krishnendu Majumdar) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த பொறுப்பை வகிக்கும் முதல் இந்தியர் இவராவர்.

    அவசர சட்டம் - மத்திய அரசு

    • கடன் செலுத்த தவறியவர்களுக்கு சலுகையாக, திவால் சட்டத்தை திருத்தி மத்திய அரசு அவசர சட்டம் வெளியிட்டுள்ளது.
    • அதன்படி, கொரோனா தொடர்பாக ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25 அல்லது அதற்கு பிறகு ஓராண்டுவரை கடனை திருப்பி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.

    ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி

    • 20வது ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • கடைசியாக ஜோர்டானில் நடைபெற்ற 19வது ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டியில் ஜப்பான் அணி முதல் இடத்தையும் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    • இதற்கு முன்னதாக 1980 ஆம் ஆண்டில் இந்தியாவில் (கோழிக்கோட்டில்) இந்த போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    • இதுவரை இந்திய மகளிர் அணி இந்த கோப்பையை பெற்றதில்லை, இரண்டு முறை (1980 & 1983) இரண்டாம் இடத்தை மட்டும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share with Friends