Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 17th June 2020


உலகக் காற்று தினம் – ஜுன் 15

    இது 2009 ஆம் ஆண்டில் ஐரோப்பியக் காற்று ஆற்றல் மன்றம் (EWEA - European Wind Energy Association) மற்றும் உலகளாவியக் காற்று ஆற்றல் ஆணையம் (GWEC - Global Wind Energy Council) ஆகியவற்றினால் ஏற்படுத்தப்பட்டது.

‘உலக முதியோர் கொடுமைப்படுத்தல் விழிப்புணர்வு தினம் – ஜுன் 15

  • இது ஜுன் 15 அன்று ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அவர்களின் குரலை உயர்த்துதல்” என்பதாகும்.
  • இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனமானது “கோவிட் – 19னின் போதும் அதற்குப் பிறகும் முதியோர்களைப் பாதுகாத்தல்” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.

நாடு தழுவிய அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI)

  • தேசிய மனித உரிமைகள் ஆணையமானது முன்பு பரிந்துரைக்கப்பட்ட நாடு தழுவிய அனைவருக்குமான அடிப்படை வருமானத்தின் (UBI - Universal basic income) செயல்படுத்துதலானது மத்திய அரசின் “ஆய்வு மற்றும் ஆலோசனையின்” கீழ் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திடம் கூறியுள்ளது.
  • இது குடிமக்களின் வருமானம், வளம், வேலைவாய்ப்பின் நிலை ஆகியவற்றைப் பொறுத்து அல்லாமல் நாடு/இதரப் புவியியல் பகுதி/மாநிலத்தில் உள்ள குடிமக்கள் என்ற அடிப்படையில் நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் நிதியுதவி வழங்கும் ஒரு திட்டமாகும்.
  • 2016-17 ஆம் ஆண்டின் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையானது வறுமையை ஒழிக்கும் ஒரு முயற்சியாகவும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு மாற்றாகவும் வேண்டி UBIயின் கருத்தாக்கம் குறித்து கூறியுள்ளது.
  • UBIயின் பின்னணியில் இருக்கும் முக்கிய நோக்கம் குடிமக்களிடையே சமத்துவத்தை அதிகரிப்பதும் வறுமையை ஒழிப்பது (அ) குறைப்பதாகும்.

‘கத்தி சல்லீவன்

  • சமீபத்தில் அமெரிக்க விண்வெளி வீராங்கனை மற்றும் கடல் ஆய்வு நிபுணரான கத்தி சல்லீவன் என்பவர் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியான சேலஞ்சர் முனை ஆழப் பகுதியை அடைந்தார்.
  • இதன் மூலம் புவியில் மிக ஆழமான பகுதியை அடைந்த முதலாவது பெண்மணியாக இவர் வெடுத்துள்ளார்.
  • 1984 ஆம் ஆண்டில், இவர் தனது முதலாவது விண்வெளி நடைப் பயணத்தை மேற்கொண்டார். இவர் விண்வெளியில் நடந்த முதலாவது பெண்மணியாக அப்போது உருவெடுத்துள்ளார்.
  • தற்பொழுது சேலஞ்சர் முனை ஆழப் பகுதியை அடைந்ததன் மூலம், விண்வெளியில் நடந்த முதலாவது பெண்மணி மற்றும் புவியில் ஆழமான பகுதியை அடைந்த முதலாவது பெண்மணி என்ற இரண்டு சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
  • பெருங்கடலில் மிகவும் ஆழமான பகுதியை அடைந்த முதலாவது பெண்மணியாகவும் இவர் உருவெடுத்துள்ளார்.
  • சேலஞ்சர் முனை ஆழப் பகுதியானது மரியானா ஆழியின் தெற்குப் பகுதியில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
  • இது மைக்ரோனேசியக் கூட்டாட்சி நாடுகளின் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ளது.

iFLOWS

  • iFLOWS என்பது வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையை வழங்கும் ஒரு அமைப்பாகும்.
  • இது மும்பையில் தொடங்கப் பட்டுள்ளது.
  • iFLOWS என்பது ஒருங்கிணைந்த வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பாகும்.

பி.கே. மொகந்தி குழு

  • இந்திய ரிசர்வ் வங்கியானது தனியார் துறை வங்கிகளின் உரிமை குறித்த வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்வதற்காக உள்ளகப் பணிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவானது இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநரான P.K. மொகந்தி அவர்களால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.
  • இது கூட்டுறவு முறைமையின் மூலம் அல்லாத நிதியியல் சொத்துக்களை வைத்துள்ள நிறுவனம் மூலமாக துணை நிதியியல் நிறுவனங்களை வைத்திருப்பதற்கான விதிமுறைகளை ஆய்வு செய்ய இருக்கின்றது.

DDMA

  • தில்லி துணை நிலை ஆளுநரான அனில் பைஜால் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (DDMA - Delhi Disaster Management Authority) அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக ஒரு வல்லுநர் ஆலோசகக் குழுவை அமைத்துள்ளார்.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டமானது தேசிய, மாநில, மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விரிவான சட்டப்பூர்வச் செயல் திட்டங்களை வழங்குகின்றது.
  • மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது மாநில முதலமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது.
  • ஆனால் தில்லியைப் பொறுத்தவரை, தில்லி துணைநிலை ஆளுநர் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஆவார். தில்லியின் முதலமைச்சர் இந்த ஆணையத்தின் துணைத் தலைவர் ஆவார்.

Share with Friends