Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 20th June 2020


இந்தியா - ஐ.நா

  • 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிளுக்கு 8-வது முறையாக இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
  • மேலும், மெக்சிகோ, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியநாடுகளும் தற்காலிக உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. ஒரு இருக்கை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.
  • வரும் 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு இந்தியா உட்பட ஐந்து நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினராக செயல்படும்.
  • மேலும்., ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர்.
  • கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.

NIPFP

  • தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(NIPFP) புதிய தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் உா்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் விஜய் கேல்கர் இப்பதவியை வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவர் ஜூன் 22 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.

வசந்த் ராய்ஜி

  • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி 13-6-2020 அன்று மும்பையில் காலமானார்.
  • கிரிக்கெட்டர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முகம் கொண்டிருந்தவர் வசந்த் ரய்ஜி. இவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை 1939ம் ஆண்டில் அப்போதைய கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) அணிக்காக களமிறங்கி தொடங்கினார்.
  • வசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.

German Book Trade

  • 2020 Peace Prize of the German Book Trade
  • 2020ஆம் ஆண்டுக்கான German Book Trade-இன் அமைதி பரிசானது நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வ்பள்ளி ராதாகிருஷ்ணனுக்கு (1961) பிறகு இந்த பரிசை பெறும் இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • உலக பாலைவனமாகுதல் மற்றும் வறட்சிக்கெதிரான தினம்

World Day to Combat Desertification and Drought

  • மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
  • இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
  • கருப்பொருள்: உணவு, உணவளி, நாரிழை – நுகர்விற்கும் நிலத்திற்குமிடையேயான தொடர்பு

Share with Friends