Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 12th June 2020

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் 18வது அமர்வு

  • சமீபத்தில் இந்திய அரசானது லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசங்களுக்காக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் 18வது அமர்வைத் தொடங்கி வைத்துள்ளது.
  • இந்தத் தீர்ப்பாயமானது பொதுப் பணியாளர்களின் பணிநிலைமைகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க இருக்கின்றது
  • CAT ஆனது ஒரு உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போன்றே தனது அதிகாரத்தைப் பயன்படுத்த அதிகாரமளிக்கப் பட்டுள்ளது.
  • இது நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டம் 1985 என்ற சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கை

  • மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது தனது வருடாந்திர அறிக்கை 2019-20 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் 22 மாநிலங்களில் ஏறத்தாழ 11,467 ஹெக்ட்டேர் வன நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கு வேண்டி மடை மாற்றப் பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்தப் பயன்பாட்டு மாற்றமானது வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 என்ற சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • மேற்கொள்ளப்பட்ட மொத்தப் பயன்பாட்டு மாற்றங்களில் மூன்றில் 1 பங்கு மாற்றங்கள் ஒடிசாவில் உள்ள திட்டங்களுக்காக மேற்கொள்ளப் பட்டுள்ளன.
  • ஆனால் அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் ஹரியானாவில் உள்ளன.

உலகில் மிகவும் அதிகச் செலவுமிக்க நகரங்கள்

  • மெர்ஸரின் 2020 ஆம் ஆண்டின் வாழ்வாதாரச் செலவு என்ற ஆய்வின்படி, உலகில் மிகவும் அதிகச் செலவுமிக்க 60வது நகரம் மும்பை ஆகும்.
  • மேலும் இது ஆசியாவில் அதிகச் செலவுமிக்க 19வது நகரமாக உள்ளது.
  • இந்தியாவில் மிகவும் அதிகச் செலவுமிக்க நகரம் மும்பை ஆகும்.
  • இதர இந்திய நகரங்களிடையே, உலக அளவில் மும்பையைத் தொடர்ந்து தில்லி 101வது இடத்திலும் அதற்கு அடுத்து சென்னை 143வது இடத்திலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • மிகவும் குறைந்த செலவுமிக்க இதர நகரங்கள் பெங்களூரு (171) மற்றும் கொல்கத்தா (185) ஆகியவையாகும்.
  • இந்த ஆய்வானது 209 நகரங்களைக் கொண்டு தனது தரவரிசையை மேற்கொண்டு உள்ளது.
  • இந்த ஆய்வினால் தயாரிக்கப்பட்ட உலகப் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து துர்க்மெனிஸ்தானில் உள்ள அஸ்காபத் 2வது இடத்திலும் உள்ளன.
  • 3வது இடமானது அதற்கு முந்தைய ஆண்டைப் போலவே ஜப்பானின் டோக்கியோ மற்றும் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் ஆகிய நகரங்களினால் தக்க வைக்கப்பட்டுள்ளது.
  • இதில் நியூயார்க் 6வது இடத்திலும் சீனாவின் ஷாங்காய் 7வது இடத்திலும் உள்ளன.
  • இதில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் மற்றும் ஜெனீவா நகரங்கள் முறையே 8வது மற்றும் 9வது இடங்களில் உள்ளன.
  • இதில் பெய்ஜிங் 10வது இடத்தில் உள்ளது.

குங்குமப்பூ மற்றும் ஹீங்க் பொருள் உற்பத்தி

  • இமாலய உயிரிவளத் தொழில்நுட்ப மையமானது இந்தியாவில் குங்குமப்பூ மற்றும் ஹீங்க் பொருள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக வேண்டி இமாச்சலப் பிரதேச வேளாண் துறையுடன் இணைய இருக்கின்றது.
  • குங்குமப்பூ மற்றும் ஹீங்க் ஆகியவை உலகில் மிகவும் விலை மதிப்பற்ற மற்றும் மதிப்பு மிக்க நறுமணப் பொருட்களாகும்.
  • அதிக அளவிலான குங்குமப் பூவானது இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப் படுகின்றது.
  • தற்பொழுது குங்குமப் பூ உற்பத்தியானது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே மேற்கொள்ளப் படுகின்றது
  • தற்பொழுது குங்குமப்பூ சாகுபடியானது உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது
  • இதே போன்று , நாட்டில் ஹீங்க் பொருளானது உற்பத்தி செய்யப் படுவதில்லை.
  • ஹீங்க் ஆனது ஒரு நிரந்தரமான வாழ்நாள் கொண்ட செடியாகும்
  • இது நடுதல் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வேரிலிருந்து ஒலியோ – கோந்து என்ற பிசின் ஆனது உற்பத்தி செய்யப் படுகின்றது.

QS உலகப் பல்கலைக்கழகங்கள் தரவரிசை

  • உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையின் 17வது பதிப்பானது வெளியிடப் பட்டு உள்ளது.
  • இது குவாக்குரேலி சைமண்ட்ஸ் என்ற மையத்தினால் வருடாந்திரமாக வெளியிடப்படும் ஒரு பல்கலைக்கழகத் தரவரிசையாகும்
  • இதற்கு முன்பு , இது டைம்ஸ் உயர் கல்வி QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை என்றழைக்கப்பட்டது.
  • சர்வதேசத் தரவரிசை வல்லுநர் குழுவின் ஒப்புதலைப் பெற்ற ஒரே சர்வதேசத் தரவரிசை இதுவாகும்
  • இது உலகில் முன்னணியில் உள்ள 1000 பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது.
  • இதில் முதல் 200 இடங்களில் இந்தியாவிலிருந்து 3 பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அவையாவன: மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (172), பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (185), தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (193) ஆகியன ஆகும்.
  • மொத்தம் , இந்தப் பட்டியலில் 21 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளன.

கொரியப் பிரச்சினை

  • கொரிய நாடானது வடகொரியா-தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான நேரடித் தொடர்பு இணைப்பு (ஹாட்லைன் ) உள்பட தென்கொரியாவுடனான அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்துள்ளது.
  • இது கொரியத் தீபகற்பத்தில் வட பகுதியில் அமைந்துள்ள கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும்
  • இந்த நாடானது வடக்கில் அம்னோக் மற்றும் துமென் நதிகளுடன் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளாலும் , தெற்கில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டு இருக்கும் கொரியப் படைகள் விலக்கப்பட்ட எல்லை மண்டலத்துடன் (இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதி) தென் கொரியாவாலும் சூழப்பட்டுள்ளது.

பூமியின் ஆழமான பகுதியில் சீனா

  • சீனாவின் ஆளில்லா நீர்மூழ்கி அமைப்பானது உலகின் மிக ஆழமான பகுதியான மரியானா அகழிக்கு 10,907 மீட்டர்) சென்றுள்ளது.
  • இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளின் கிழக்கில் அமைந்துள்ளது
  • சேலஞ்சர் ஆழப் பகுதியானது மரியானா அகழியில் அமைந்துள்ளது. மரியானா அகழியானது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பிற்கு கீழ் 7 மைல்கள் ஆழத்தில் அமைந்துள்ளது.

பவளப் பாறை முக்கோணப் பகுதி தினம் – ஜுன் 09

  • இது பவளப் பாறை முக்கோணப் பகுதியின் ஒரு மிகப்பெரிய அனுசரிப்பாகும்.
  • இது உலகில் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியமான மையமாகும்.
  • இது காங்கோ படுகை மற்றும் அமேசான் மழைக் காடுகளுடன் இணைந்து நமது பூமியில் அமைந்த 3 மிகப்பெரிய சூழலியல் மண்டலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
  • இது ஆசிய – பசிபிக் பகுதிகளில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள் மற்றும் திமோர் லெஸ்டி ஆகிய 6 நாடுகளின் பெருங்கடல்களில் காணப்படுகின்றது.

NEET (நீட்) இடஒதுக்கீடு

  • நீட் நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் கிடையக முறையின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ளக இட ஒதுக்கீட்டை வழங்க தமிழ்நாடு அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.
  • இந்த ஆணையமானது ஓய்வுபெற்ற நீதிபதியான கலையரசன் என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
  • கல்வித்துறையில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/பொதுப் பிரிவினர்களுக்கு இருக்கும் செங்குத்து இடஒதுக்கீட்டிற்குள் கிடையக இடஒதுக்கீடானது நன்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

ANANYA

  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு மையமானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிருமிநாசினித் தெளிப்பானை உருவாக்கியுள்ளது.
  • இந்தத் தெளிப்பான் “ANANYA” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது நீரினால் செயல்படும் ஒரு தெளிப்பான் ஆகும்

கோவிட் BEEP

  • சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கோவிட் BEEP என்ற ஒரு கருவியைத் தொடங்கி வைத்தார்.
  • இது கோவிட் – 19 நோயாளிகளுக்கான முதலாவது உடலியல் அளவீட்டுக் கண்காணிப்பு அமைப்பாகும்.
  • BEEP என்பது தொடர் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் முக்கியத் தகவல் கண்டறிதலுக்கான உயிரி மருத்துவ ECIC ESIC கவசமாகும்.
  • இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது கம்பியற்ற மற்றும் விலை குறைந்த அளவீட்டுக் கண்காணிப்பு அமைப்பாகும்
  • இது ஐஐடி -ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் ESIC மருத்துவக் கல்லூரி, ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.

Share with Friends