Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 16th June 2020


இயற்கைக் குறியீடு 2020

  • இயற்கைக் குறியீடு என்பது ஆசிரியருடனான தொடர்புகள் மற்றும் நிறுவன உறவுகளைக் கொண்ட ஒரு தரவு தளமாகும்.
  • இந்தத் தரவு தளமானது ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ஜெர்மனியக் கல்விப் பிரசுரிப்பு நிறுவனமான “ஸ்பிரின்ஞர் நேச்சர்” என்ற ஒரு சர்வதேச அறிவியல்சார் பிரசுரிப்பு நிறுவனத்தின் ஒரு பிரிவான “நேச்சர் ரிசர்ச்” என்ற பிரிவினால் தொகுக்கப் பட்டுள்ளது.
  • இதில் முதல் 5 இடங்கள் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா ஒட்டுமொத்தமாக 12வது இடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முன்னிலையில் உள்ள 3 நிறுவனங்கள் பின்வருமாறு:
    • அறிவியல்சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்
    • இந்திய அறிவியல் தொழில்நுட்பம்
    • டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம்
  • இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 3 தனிச்சுதந்திர நிறுவனங்கள் முதல் 30 இந்திய நிறுவனங்களிடையே இடம் பிடித்துள்ளன.
  • அவையாவன:
    • கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் - 7வது இடம்
    • பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் – 14வது இடம்
    • கொல்கத்தாவில் உள்ள எஸ்என் போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் - - 30வது இடம்.

அமெரிக்கா மற்றும் ICC

  • அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஒரு நிர்வாக ஆணையை வெளியிட்டு உள்ளார்.
  • இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போர்க் குற்றங்கள் நிகழ்த்தியனவா என்பது குறித்து விசாரணை நடத்தும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராகத் தடை விதிக்கின்றது.
  • ஆனால், அமெரிக்க அரசானது இந்த நீதிமன்றத்தின் ஓர் உறுப்பு நாடாக இல்லை.
  • தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமானது இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்கும் ஒரு தலைமை அமைப்பாகும்.
  • இது சர்வதேசச் சமூகத்திற்கு மிகவும் கடுமையான குற்றங்கள் இழைத்தவர்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்க உதவுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு முதலாவது நிரந்தரமான, ஒப்பந்தம் அடிப்படையிலான, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமாகும்.
  • இதன் நிறுவன ஒப்பந்தமான “ரோம் பிரகடனமானது” 2002 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று நடைமுறைக்கு வந்தது.

அயற்பண்புடைய உயிரினங்களின் இறக்குமதி

  • சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது உயிருள்ள அயற்பண்புடைய உயிரினங்களின் இறக்குமதி குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதிய வழிகாட்டுதல்களின் படி, உயிருள்ள அயற்பண்புடைய உயிரினங்கள் CITES (Convention of International Trade in Endangered Species - அருகிவரும் உயிரினங்களின் மீது சர்வதேச வர்த்தகம் குறித்த ஒப்பந்தம்) என்பதின் பட்டியல் I, II, மற்றும் III-ன் கீழ் மட்டுமே கட்டுப்படுத்தப் படுகின்றன என்று இந்த அமைச்சகம் கூறியுள்ளது.
  • CITESன் பட்டியல் I-ன் கீழ் வர்த்தகம் நடைபெறுவதில்லை.
  • பட்டியல் II-ன் கீழ், வர்த்தகமானது சிறு அளவிலான அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது.
  • பட்டியல் III-ன் கீழ், பட்டியலிடப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான பறவைகள் மற்றும் விலங்கினங்கள் மீது வர்த்தகம் செய்யலாம்.
  • உயிருள்ள அயற் பண்புடைய உயிரினங்கள் என்பவை தமக்குச் சொந்தமான இடத்திலிருந்துப் புதிய இடங்களுக்குச் செல்லும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் என்பதைக் குறிப்பதாகும்.
  • இந்தியாவில் காணப்படும் உயிருள்ள அயற் பண்புடைய உயிரினங்களில் மிகவும் பிரபலமானவை பந்து வகை மலைப்பாம்பு, கருஞ்சிவப்புக் கிளி, கடல் ஆமைகள், சுகர் க்ளைடர் என்ற விலங்கினம் (பெட்டாரஸ் பிரேவிசெப்ஸ்), சிறிய குரங்கு வகை உயிரினம் மற்றும் சாம்பல் வண்ண ஆப்பிரிக்கக் கிளிகள் ஆகியவையாகும்.

“HeiQ Viroblock”

  • “அரவிந்த்” என்று ஜவுளி நிறுவனமானது தனது நெய்யப்பட்ட துணி மற்றும் ஆடைப் பொருட்களுக்காக ஒரு வைரஸ் எதிர்ப்பு ஜவுளித் தொழில்நுட்பத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • “HeiQ Viroblock” என்ற தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தப்படும் ஆடைகள் துடிப்பான வகையில் வைரஸ்களைத் தடுத்து அதன் மூலம் தொடர்பில் இருக்கும் வைரஸ்களைக் கொல்கின்றன. மேலும் அந்த ஆடைகளின் உற்பத்தியின் மூலம் நோய்க் கிருமிகளின் மறுபரிமாற்றத்திற்கான சாத்தியக் கூறைக் குறைக்க இது உதவுகின்றது.
  • “HeiQ Viroblock NPJO3” என்பது ஜவுளி உற்பத்தி நடைமுறைகளின் இறுதி நிலையின் போது நெசவு செய்யப்பட்ட ஆடையுடன் சேர்க்கப்படும் சுவிஸ் நாட்டின் ஒரு நுண்ணறிவு ஜவுளித் தொழில்நுட்பமாகும்.
  • இது மேம்படுத்தப்பட்ட வெள்ளி மற்றும் சிறுமேடு அல்லது வெசிசில் என்ற தொழில்நுட்பத்தின் ஒரு சிறப்புக் கலவையாகும்.

KOI - 456.04

  • கோட்டின்ஜென் (ஜெர்மனி) நகரில் உள்ள சூரியக் குடும்ப ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளேன்க் மையம், சோன்பெர்க் ஆய்வு மையம், கோட்டின்ஜென் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் நாசா ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளது.
  • இது KOI-465.04 என்று பெயரிடப் பட்டுள்ளது. இதன் பெருந்திரள் விண்மீன் கெப்ளர் – 160 என்று அழைக்கப் படுகின்றது.
  • மிகப்பெரிய வெளிக்கோளான KOI-465.04 பூமியிலிருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள தனது விண்மீனைச் சுற்றி வருகின்றது.
  • இது பூமியின் அளவைப் போன்று 2 மடங்கு அளவு குறைவானதாகும்.
  • இது ஒரு சுற்றை நிறைவு செய்ய 378 நாட்களை எடுத்துக் கொள்கின்றது.
  • கெப்ளர் 160 என்ற விண்மீன் ஆனது தனது சுற்றுவட்டப் பாதையில் குறைந்தது 3 கோள்களைக் கொண்டுள்ளது. மற்ற வெளிக்கோள் நட்சத்திரங்கள் வெளியிடாத கண்ணுக்குத் தெரியக் கூடிய ஒளியை இது உமிழ்கின்றது.
  • பெரும்பாலும் வெளிக்கோள் நட்சத்திரங்கள் சூரியனை விட மிகச்சிறியதாக உள்ளதனாலும் மங்கலான ஒளியைக் கொண்டுள்ளதன் காரணமாகவும் இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவை “சிவப்புக் குள்ளக் கோள்” நட்சத்திர வகைப்பாட்டைச் சேர்ந்த வகையில் இருந்து கொண்டு அகச் சிகப்புக் கதிர்களை உமிழ்கின்றன.

Share with Friends