இந்தியா
- ஐ.சி.சி.எஸ் சுஜய் ( Indian Coast Guard Ship ‘Sujay’ ) என்ற ரோந்துக் கப்பல், கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் 8-6-2020 அன்று இணைக்கப்பட்டது. இந்த ரோந்துக் கப்பல் , இதற்கு முன்னர் ஒடிஸா மாநிலம், பாராதீப் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்தது.
FSSAI
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கான உணவு பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index (SFSI)) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும், சிறிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா யூனியன் பிரதேசங்களில் முதல் மூன்று இடங்களை முறையே சண்டிகர், டெல்கி மற்றும் அந்தமான் தீவுகள் ஆகியவையும் பெற்றுள்ளன.
online waste exchange programme
- இந்தியாவின் முதல் ஆன்லைன் கழிவு மாற்று திட்டம் (online waste exchange programme) ஆந்திர மாநில அரசினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மை உடைய மற்றும் மட்கா கழிவுகளை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வது அல்லது அழிப்பதற்கான இந்தத் திட்டத்தை ஆந்திர பிரதேச சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (Andhra Pradesh Environment Management Corporation or APEMC )செயல்படுத்துகிறது.
”குரோ-பாட்”
- ”குரோ-பாட்” (Coro-bot) என்ற பெயரில் உலகின் முதல் இணையதளம் வழியாக கட்டுப்படுத்தப்படும் ரோபோவை மகாராஷ்டிர மாநிலம் தானே வைச் சேர்ந்த பொறியாளர் பிரதிக் திரோட்கர் (Pratik Tirodkar) என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்குவதுடன் , அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காயிர்செயின் (Gairsain)
- உத்தர்காண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக காயிர்செயின் (Gairsain) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு ’ஃபராரிசென்’ (Bhararisen) என்ற பெயரும் உண்டு. ஏற்கனவே அம்மாநிலத்திற்கு தலைநகராயிருந்த டேராடூன் (Dehradun) அம்மாநிலத்தின் குளிர்கால தலைநகராக இருக்கும்.