Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 4th June 2020


டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா

  • திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் தொழில் துறை சார்பில் ₹235 கோடி செலவில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் 1-6-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.

ஏழைகளுக்கான நல்லெண்ண தூதர்

  • மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு அறிவித்துள்ளது.
  • மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் சிறுமி நேத்ராவுக்கு வழங்கப்பட்டது.
  • சமீபத்தில் பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது முடிதிருத்தும் தொழிலாளி மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம்

  • பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம் என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடனுதவி நகர்புற மற்றும் ஊர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை

  • ஜூன்-1, 2020 அன்று சிக்கிம், ஒடிஷா மற்றும் மிஷோராம் மாநிலங்கள் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைந்துள்ளன, இதன்மூலம் இத்டதிட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
  • இத்திட்டம் அடுத்த ஆண்டுக்குள் (மார்ச் 2021) இந்திய மாநிலங்கள் அனைத்திலும் அமுல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

G-7 உச்சி மாநாடு

  • அமெரிக்காவில் நடைபெற உள்ள 46வது ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
  • ஜீன் மாதத்தில் நடைபெறவிருந்த இந்தமாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அழைப்பை ஏற்று மோடி ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியல்

  • சமீபத்தில் StartupBlink என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள, தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • மேலும், இந்நிறுவனம் வெளியிட்டுள்ள, தொழில் துவங்க உகந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு (14), டெல்லி(15), மும்பை(22) இடத்தையும் பிடித்துள்ளன.
  • மேலும், கடந்த ஆண்டு உலக வங்கி வெளியிட்ட, தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 63வது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம்

  • 1976 ஆம் ஆண்டு ஜூன்-2ம் தேதி, பாலியல் தொழிலாளர்கள் பிரான்சு நாட்டில் போராட்டம் நடத்தி சில உரிமைகளை பெற்றனர்,
  • இந்த போராட்டம் மூலம் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஆண்டுதோறும் ஜீன்-2 சர்வதேச பாலியல் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Share with Friends