Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 24th June 2020


NDRF நிதி

  • தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நேரடியாக தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு (NDRF - National Disaster Relief Fund) பங்களிக்க அனுமதிக்கும் வகையிலான ஒரு பரிந்துரைக்கு மத்திய நிதித்துறை அமைச்சகமானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • NDRF ஆனது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
  • இது எந்தவொரு அச்சுறுத்தும் பேரிடர் சூழ்நிலைச் சமயத்திலும் “அவசரகால மீட்பு, நிவாரணம், புனர்வாழ்வு” ஆகியவற்றிற்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் நிதியாகும்.
  • இது மாநிலங்களின் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிகளுக்கு உதவி புரிவதற்காக (கூடுதலாக) அமைக்கப் பட்டுள்ளது.
  • இது “வட்டி ஏதும் பெறப்படாத ஒதுக்கப்பட்ட நிதியம் என்பதின் கீழ் இந்திய அரசின் பொதுக் கணக்கில்” வைக்கப் பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி பாதுகாப்பு நிதியம் அல்லது பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியானது ஒரு பொது அமைப்பு அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்நிதி குறித்து தகவல் எதுவும் பெற முடியாது.

GAFA வரி

  • டிஜிட்டர் நிறுவனங்களுக்கான உலகளாவிய வரி முறைக்கான தீர்வை நோக்கமாகக் கொண்ட பேச்சு வார்த்தையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.
  • அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப் படும் நடவடிக்கை என்று இதை அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • பிரான்ஸ், ஐக்கியப் பேரரசு, ஸ்பெயின், இத்தாலி மற்றும் இதர நாடுகள் ஆகியவை மிகப்பெரிய டிஜிட்டல் நிறுவனங்களின் மீது வரிகளை விதித்துள்ளன.
  • GAFA வரியானது கூகுள் ஆப்பிள் முகநூல் அமேசான் ஆகிய நிறுவனங்களை அடுத்து இந்தப் பெயர் (Google, Apple, Facebook, Amazon- GAFA) - வைக்கப் பட்டுள்ளது
  • இது மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வரியாகும்.

  • தேசியப் பாதுகாப்பு முகமை

  • சீனாவானது ஹாங்காங்கில் சிறப்பு முகமை தேசியப் பாதுகாப்பு அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது
  • இது குற்றவியல் வழக்குகளைக் கையாளும் உரிமை மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு ஆய்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது
  • ஆங்கிலேயரால் சீனாவிற்கு வழங்கப்பட்ட முந்தையக் காலனியான ஹாங்காங் ஆனது 1997 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இருந்து வருகின்றது.
  • ஹாங்காங்கின் வெளியுறத் துறை விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன.

  • சட்டத்தின் ஆட்சிக் குறியீடு

  • இது அமெரிக்காவில் உள்ள ஒரு தனிச் சுதந்திர அமைப்பான உலக நீதித் திட்டத்தினால் வெளியிடப் பட்டுள்ளது
  • தற்பொழுதைய நிலையில் இதில் மொத்தமுள்ள 128 நாடுகளில் இந்தியா 68வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்படுள்ளது.

  • மிகியஸ்

  • இது 2016 ஆம் ஆண்டில் சீனாவினால் செலுத்தப்பட்ட உலகின் முதலாவது  குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
  • இந்தச் செயற்கைக் கோளானது சிக்கலான போட்டான் இணைகளின் ஆதாரமாக விளங்குகின்றது.
  • சமீபத்தில், இது உலகின் மிகவும் பாதுகாப்பான ஒரு தகவல் இணைப்பை ஏற்படுத்துவதற்காக வேண்டி பூமிக்கு ஒளித் துகள்களை அனுப்பியுள்ளது.

  • ஸ்டெகோடான் புதை படிவம்

  • ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது அழிந்து போன யானை சந்ததியின் (முந்தைய) புதை படிவத்தைக் கண்டறிந்துள்ளது.
  • இது ஏறத்தாழ 5 முதல் 8 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புதைபடிவமானது உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்ஷாகி பாக் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இது இமயமலையின் சிவாலிக் வரம்பின் தோக் பதான் பகுதியில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது ஸ்டெகேடான் (மறைந்த பிளாய்ஸ்டோசீன் காலம் வரை காணப்பட்ட, தற்பொழுது அழிந்து போன யானை வகை) ஆக இருக்கலாம் என்று கூறப் படுகின்றது.

  • Share with Friends