tnprivatejobs.tn.gov.in
- வேலை நாடும் இளைஞர்களையும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் tnprivatejobs.tn.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17-6-2020 அன்று தொடங்கி வைத்தார்.
Mask Day
- கொரோனா பரவலையொட்டி முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீன் 18 கர்நாடக மாநிலம் முழுவதும் “முகக்கவச தினம்” கடைபிடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உலக போட்டி குறியீடு
- மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (IMD) வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உலக போட்டி குறியீட்டில் (World Competitiveness Index) இந்தியா 43 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா 43 இடத்தையே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சுவிட்சர்லாந்தின் லஷானே (Lausanne) நகரில் செயல்படும் மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் 1989ஆம் ஆண்டுமுதல் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- 63 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டம்
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5000 கோடி செலவில் “கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்” என்ற திட்டத்தை ஜூன் 20 அன்று காணொளி காட்சி மூலம்
- பிரதமர் மோடி பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
- புலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.
வெற்றி தின அணிவகுப்பு
- இந்தியா தனது தரைப்படை, கடற்படை, விமானப் படை என்று ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளையும் ரஷ்யாவிற்கு அனுப்ப இருக்கின்றது.
- இந்தியாவின் முப்படைகளும் இதில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
- இரஷ்யாவின் ராணுவ அணிவகுப்பானது ரஷ்ய அதிபரை சிறப்பு விருந்தினராகக் கொண்டு மாஸ்கோவின் சிவப்புச் சதுக்கத்தில் நடத்தப் பெறுகின்றது.
- ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமானது மே 09 அன்று கொண்டாடப்படுகின்றது.
- 1945 ஆம் ஆண்டில் நாசி ஜெர்மனி சரணடைந்ததைக் குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த அணிவகுப்பானது நடத்தப்படுகின்றது.