Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 7th June 2020


தமிழ்நாடு மின்சார வாரியம் - தலைவர்

  • மின்சார வாரியத் தலைவராக பதவிவகித்து வந்த விக்ரம் கபூர் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது

சுமேரு பாக்ஸ்

  • SUMERU-PACS (Personal Protective Equipment (PPE))
  • சுமேரு பாக்ஸ் என்ற பெயரில் தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை அணிவோர் வியர்வை பிரச்சனை இன்றி இலகுவாக உணர்வதற்கான கருவியை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கண்டுபிடித்துள்ளது.
  • இந்த கருவியானது சிவாஜி படத்தில் ரஜினி அணிந்துவரும் AC- Dress போன்ற ஒரு அமைப்பு ஆகும்.

மேரா விதான் (MeraVetan)

  • அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக MeraVetan என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்: கிரீஸ் மர்மு (Girish Chandra Murmu)

Bimal Julka Committee

  • திரைப்பட கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்காக விமல் ஜீல்கா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமீபத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
  • விமல் ஜீல்கா மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோடார் (Sodar)

  • பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக சோடார்( ‘Sodar’) என்ற மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலக உணவு பாதுகாப்பு தினம்

  • உலக உணவு பாதுகாப்பு தினம் - World Food Safety Day
  • ஐக்கிய நாடுகள் சபை (WHO) மற்றும் அதன் துணை அமைப்பான உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (FAO) இணைந்து ஜூன்-7 – ஐ உலக உணவு பாதுகாப்பு தினமாக அறிவித்தள்ளன.
  • இந்த ஆண்டுக்கான கருப்பொருள் – உணவு பாதுகாப்பு, அனைவரின் கடமை (Food Safety, Everyone’s Business)

  • World Food Day

  • உலக உணவு தினம் அக்டோபர்-16 இல் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share with Friends