Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 13th June 2020


பாலைவனத் துரத்தல் நடவடிக்கை

  • சமீபத்தில் இராஜஸ்தான் காவல் துறையானது ராணுவ நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் 2 குடிமக்கள் பாதுகாப்புப் பணியாளர்களைக் கைது செய்துள்ளது. இந்தத் தகவல்கள் பாலைவனத் துரத்தல் நடவடிக்கை என்பதின் கீழ் பெறப் பட்டுள்ளன .
  • இது 2019 ஆம் ஆண்டில் ராணுவ நுண்ணறிவுப் பிரிவினால் தொடங்கப்பட்ட ஒரு உளவு எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
  • இவர்கள் அலுவல்சார் ரகசியச் சட்டம் , 1923 என்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்
  • துபாக் நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் ISI (Inter-Service Intelligence – பணிகளுக்கு இடையேயான நுண்ணறிவு என்ற அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு ராணுவ நுண்ணறிவு நடவடிக்கையாகும்
  • இந்த நடவடிக்கையானது இந்தியாவைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கழிவு நீர் உற்பத்தி அடிப்படையிலான வகைப்பாடு

  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது ரயில் நிலையங்களில் உற்பத்தியாகும் கழிவு நீரின் அளவைப் பொறுத்து, அவற்றை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என்ற நிறங்களாக வகைப்படுத்தியுள்ளது.
  • சிவப்பு ஒரு நாளைக்கு 100 கிலோ லிட்டர்கள் (KLD - KiloLitres per Day) (அ) அதற்குச் சமமான அளவில் கழிவு நீர் உற்பத்தியாகும் ரயில் நிலையங்கள்
  • ஆரஞ்சு என்ற அளவிற்கும் அதிகமாக அதே சமயம் 100 KLD என்ற அளவிற்கும் குறைவாகக் கழிவுநீர் உற்பத்தியாகும் ரயில் நிலையங்கள்
  • பச்சை : 10 KLD என்ற அளவிற்கும் குறைவாக கழிவு நீர் உற்பத்தியாகும் ரயில் நிலையங்கள்

5வது தேசிய நிறுவனத் தரக் கட்டமைப்பு (NIRF)

  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக தேசிய நிறுவனத் தரக் கட்டமைப்பை (NIRF- National Institutional Ranking Framework ) வெளியிட்டுள்ளது.
  • இதில் ஐஐடி -மதராஸ் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில்  ஐஐஎஸ்சி-பெங்களூரு தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இதில் மூன்றாவது இடத்தை ஐஐடி -தில்லி கைப்பற்றியது.
  • ஐஐடி -மதராஸ் ஆனது சிறந்த பொறியியல் கல்லூரியாக உருவெடுத்துள்ளது.
  • பல்கலைக்கழகப் பிரிவில் , ஐஐஎஸ்சி-பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • முதலாவது NIRF தரவரிசையானது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • NIRF ஆனது பொறியியல், பல்கலைக்கழகம், மேலாண்மை, கல்லூரி, மருத்துவம், மருந்தகம், சட்டம், பல்மருத்துவம் மற்றும் கட்டிடக்கலை ஆகிய 10 பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்துகின்றது.
  • முதன்முறையாக , இந்த ஆண்டின் பட்டியலில் பல் மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப் பட்டுள்ளன.

சர்வதேச மதச் சுதந்திர அறிக்கை (IRF) 2019

  • சமீபத்தில், அமெரிக்க உள் துறையானது இந்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது உலகம் முழுவதும் மதச் சுதந்திரத்தின் நிலை குறித்து ஆய்வு செய்கின்றது.
  • IRF (International Religious Freedom) அறிக்கையானது மதச் சுதந்திரத்தின் நேர்மறை வளர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உதாரணங்கள் குறித்து நாடுகளைப் பட்டியல் படுத்துகின்றது.
  • நிகரகுவா , நைஜீரியா, சீனா ஆகியவை எதிர்மறை உதாரண நாடுகளாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
  • இந்தியாவில் மதம் சார்ந்த சுதந்திரத்தின் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் காட்டுவதற்காக இந்தியாவிற்கான ஓர் அறிக்கை என்ற அறிக்கையை இது வெளியிட்டுள்ளது
  • இதற்கு முன்பு , சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் ஒரு அறிக்கையானது இந்தியாவின் மதச் சுதந்திரத்தை “கவனத்தில் கொள்ள வேண்டிய நாடு” என்ற பிரிவில் மிகக் குறைந்த நிலையைக் கொண்டுள்ள ஒரு தரநிலைக்குக் கீழிறக்கியிருந்தது.
  • இது நாட்டில் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விவகாரங்கள் குறித்து, அதாவது ஜம்மு காஷ்மீரின் நிலை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவை குறித்து எடுத்துக் காட்டுகின்றது.

மானிய நிதியுதவி

  • நிதி ஆணையத்திற்கான குறிப்புரை விதிகள் மாநிலங்களுக்கு மானிய நிதியுதவி வழங்குவதற்கு வேண்டி அதற்கு பரிந்துரை செய்துள்ளன.
  • இந்த நிதியுதவி பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.
    • வருவாய்ப் பற்றாக்குறை மானியம்
    • உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியுதவி
    • பேரிடர் மேலாண்மை நிதியுதவி
  • 2020-21 ஆம் ஆண்டிற்காக வேண்டி, இந்த ஆணையமானது வரிகளின் பகிரப்படக் கூடிய தொகுதியில் 41% நிதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்துள்ளது.
  • மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை நிர்ணயிப்பதற்காக நிதி ஆணையம் பின்வரும் தகுதிநிலைகளைப் பின்பற்றுகின்றது.
  • அவையாவன:
    • வருவாய்ப் பற்றாக்குறைக்கு 45%
    • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு 15%
    • நிலப்பகுதிக்கு 15%
    • காடுகள் மற்றும் சூழலியலுக்கு 10%
    • மக்கள்தொகைச் செயல்பாடுகளுக்கு 12.5%
    • வரி வசூல் முயற்சிகளுக்கு 2.5%

Share with Friends