AICTE
- ஜூன் 4, 2020 அன்று, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் எஸ். பூரி ஆகியோர் இணைந்து நகர்ப்புற கற்றல் பயிற்சி திட்டத்தை (TULIP- The Urban Learning Internship Program) உருவாக்கியது 4 "ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் ஆயிரக்கணக்கான புதிய பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தொழல் பயிற்சி வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவுடன் (AICTE) உருவாக்கியது.
- மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தலைமையகம் - புது தில்லி
- செயலாளர் - ஸ்ரீ அமித் கரே
- அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு (AICTE)
- தலைமையகம் - புது தில்லி
- தலைவர் - அனில் சஹஸ்ரபுதே
இந்தியா & பூடா
- ஜூன் 3, 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, சுற்றுச்சூழல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் பூடானுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- பூடான் : தலைநகரம் - திம்பு (பூட்டானின் மிகப்பெரிய நகரம்) நாணயம் - பூட்டானிய நகுல்ட்ரம் (BTN)
"தேஜஸ்-என்" போர் விமான சோதனை வெற்றி
- அதிநவீன "தேஜஸ்-என்" போர் விமான சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, அதை உள்நாட்டில் தயாரிக்க, விமான மேம்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. 4 இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம், விண்ணில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது.
- கோவா கடற்பகுதியில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான, ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில், இந்த விமானம் சோதித்து பார்க்கப்பட்டது.
- இத்திட்டத்திற்கு, 7,000-8,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில், இவ்விமானம், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFL - தேசிய உரங்கள் நிறுவனம்
- ஜூன் 3, 2020 அன்று, தேசிய உரங்கள் நிறுவனத்தின் (NFL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (சி.எம்.டி) கூடுதல் பொறுப்பை ஸ்ரீ வீரேந்திர நாத் தத் ஏற்றுக்கொண்டார் அவர் அக்டோபர் 2018 முதல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்தியாவில் இயற்கை எரிவாயு துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர் மற்றும் இயற்கை எரிவாயு வணிகத்தில் முக்கிய பணிகளைக் கையாண்டார். தேசிய உரங்கள் நிறுவனம் தலைமையகம் - நொய்டா, உத்தரபிரதேசம்
உலக சுற்றுச்சூழல் தினம்
- உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது.
- உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது 1974 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து, உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவலாக கொண்டாடப்படுகிறது.
காமன்வெல்த் சிறு கதை பரிசு
- ராஞ்சியைச் சேர்ந்த 29 வயதான இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே, “The Great Indian Tee and Snakes” எனும் சிறுகதைக்காக 2020-ஆம் ஆண்டின் ஆசிய பிராந்தியாத்தின் காமன்வெல்த் சிறுகதை பரிசினை வென்றுள்ளார்.
- மேலும் சில பிராந்திய வெற்றியாளர்கள்.,
- Africa – Innocent Chizaram Ilo
- Canada and Europe – Reyah Martin
- Caribbean – Brian S Heap
- Pacific – Andrea E Macleod