Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 8th June 2020


அகழாய்வு - தமிழ்நாடு

  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் 8-6-2020 அன்றூ கண்டெடுக்கப்பட்டன.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மனித எலும்பு 8-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு

  • சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு ( Environment Performance Index ) 2020ல் இந்தியா 168 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் யேல் பல்கலைக்கழகத்தின் (Yale University) மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
  • முதல் மூன்று இடங்களை முறையே, டென்மார்க், லக்‌ஷம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பருவநிலை மாற்ற பிரிவில் இந்தியா உலகளவில் 106 ஆவது இடத்தையும் தெற்காசிய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
    • 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா 177 வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

BS-6 மாசு

  • BS-6 மாசு நெறிமுறைகளுடன் வெளிவரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்துவமான வண்ணங்கள் கொண்ட இலக்கத்தகடு (நம்பர் ப்ளேட்) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • எந்த எரிபொருள் வகையினதும் BS -6 மாசுக் கட்டுபாட்டு நெறிமுறை வாகனங்களுக்கான பதிவு விவரங்களை எடுத்துச் செல்லும் தற்போதைய ஸ்டிக்கரின் மேல் 1 செ.மீ அகலமுள்ள பச்சை நிறத்துண்டு ஒன்றைக் கட்டாயமாக்குகிறது, அதாவது பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயு (CNG)வில் இயங்கும் வாகனங்களுக்கு வெளிர் நீல வண்ண ஸ்டிக்கர் மற்றும் டீசல் வாகனம் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.
  • இப்போது BS – 6 வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் மீது 1 செ.மீ மேலே பச்சை நிறத் துண்டு இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
    • BS-6 மாசு கட்டுப்பாடுத் தரநிலைகள் ஏப்ரல் 1, 2020 முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

’மிஷன் சாகர்’ (Mission Sagar)

  • ’மிஷன் சாகர்’ (Mission Sagar) எனும் திட்டத்தின் கீழ் கோவிட்-19 பாதிக்கப்பட்ட இந்தியாவின் நட்பு தீவு நாடுகளான மாலத்தீவு, மெளரிசியஸ் , மடகாஸ்கர், காமரோஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மே 2020 தொடங்கியது.
    • SAGAR - Security and Growth for All in the Region

இந்தியா & பூட்டான்

  • இந்தியா மற்றும் பூட்டான் இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை 3-6-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பரஸ்பர நலன், அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பொருத்தமான வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தாகும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன், பத்தாண்டு காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும்.

உலக மூளை இரத்தக்கட்டு நோய் தினம்

  • உலக மூளை இரத்தக்கட்டு நோய் தினம் (World Brain Tumor Day) 2020 – ஜீன் 8
  • உலக பெருங்கடல்கள் தினம் (World Oceans Day) - ஜீன் 8
    • மையக்கருத்து 2020 - நீடித்த பெருங்கடல்களுக்கான கண்டுபிடிப்பு (Innovation for a Sustainable Ocean)

Share with Friends