- தெலுங்கானாவில், ஹைதராபாத் நகர காவல்துறையினர், ஹைதராபாத் நகர பாதுகாப்பு கவுன்சிலுடன் இணைந்து, உள்நாட்டு வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் STREE (She Triumphs through Respect, Equality, and Empowerment) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
உலக உணவு விருது
- சிறு விவசாயிகளுக்கு விளைச்சலை பெருக்க உதவியதற்காக அமெரிக்க வாழ் இந்தியரான பேராசிரியர் ரத்தன் லாலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான உலக உணவு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
- உலக உணவு விருதானது வேளாண் துறையில் நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படுகின்றது.
- மேலும் இவருக்கு 2018 ஆம் ஆண்டுக்கான கலிங்கா உலக மண் விருது (Glinka world soil Prize) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பழங்குடி மாணவர்களுக்கான விடுதிகளுக்கு ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் மாநிலம் எனும் பெருமையை ஒடிசா பெற்றுள்ளது.
I-FLOWS (Integrated Flood Warning System)
- IFLOWS-Mumbai என்ற பெயரில் மும்பைக்கான அதிநவீன ஒருங்கிணைந்த வெள்ள எச்சரிக்கை முறையை சமீபத்தில் மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இணைந்து தொடங்கி வைத்துள்ளனர்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த ஐடி பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மேற்குவங்க அரசு Karmo Bhumi எனும் வலைதளத்தை தொடங்கியுள்ளது.
பால ஷ்ராமிக் வித்யா யோஜனா
- 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி வழங்க பால ஷ்ராமிக் வித்யா யோஜனா என்ற திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
- சுற்றுலா அமைச்சகமானது இந்த இணையவழித் தொடரின் மூலம் சத்தீஸ்கரின் மறைத்து வைக்கப்பட்ட புதையல்களை வெளிப்படுத்துகிறது.
- இதில் கீழே உள்ளவை உள்ளடங்கும்
- கர்கபட் - பெருங்கற்காலப் புதைகுழி
- திபாடிஹ் - ஆம் நூற்றாண்டுக்கு முந்தையக் கோயில் வளாகம்.
- கோத்துல் - ஒரு பழங்காலப் பழங்குடியினர் கல்வி முறை
- சோனாபாய் - சத்தீஸ்கரின் பிரபலமான அலங்காரப் படைப்புகள்
மரபணு மாற்றப்பட்ட விதைகள்
- தற்போது இவை அங்கீகரிக்கப் பட்டவை இல்லை என்றாலும், விவசாயிகள் தற்போதைய காரீப் பருவத்தில், மக்காச்சோளம், சோயாபீன், கடுகு, கத்திரிக்காய் மற்றும் களைக்கொல்லி எதிர்ப்புப் பருத்தி ஆகிய பயிர்களுக்கு வேண்டி மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பெருமளவில் விதைப்பார்கள்.
- மரபணுப் பொறியியலானது விதைகளில் ஓர் அன்னிய மரபணுவை அறிமுகப் படுத்துவதன் மூலம் மரபணுத் தடைகளை மீறி விரும்பிய விளைவுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அன்னிய மரபணுவானது ஒரு தாவரம், ஒரு விலங்கு அல்லது ஒரு மண் பாக்டீரியம் ஆகியவற்றிலிருந்து கூட தேர்ந்தெடுக்கப் படலாம்.
- பிடி பருத்தி மட்டுமே இந்தியாவில் அனுமதிக்கப்படும் ஒரே மரபணு மாற்றப்பட்ட பயிராகும்.
- இந்தியாவில், மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு என்பது மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வணிக ரீதியாகப் பயிரிட அனுமதிக்கும் ஓர் உச்ச அமைப்பாகும்.
- சனிக் கோளின் நிலவான டைட்டன் ஆனது முன்பை விட வேகமாக சனிக் கிரகத்தை விட்டு விலகிச் செல்கிறது.
- இதை நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இத்தாலிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
- இந்தத் தரவு நாசாவின் காசினி விண்கலத்திலிருந்துப் பெறப்பட்டது.
- காசினி விண்வெளிக் கலம் அல்லது காசினி-ஹ்யூஜென்ஸ் திட்டம் என்பது நாசா, இத்தாலிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒரு கூட்டு விண்வெளித் திட்டமாகும்.
- சனி, அதன் நிலவுகள் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் வளையங்களைப் ஆராய்வதற்காக இந்தப் பணி தொடங்கப்பட்டது.
- சனிக் கோளைச் சுமார் 82 நிலவுகள் சுற்றி வருகின்றன.
- பூமியின் நிலவானது ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து 1.5 அங்குலம் என்ற அளவில் அதை விட்டு விலகிச் செல்கின்றது.
கடன் தன்மையின் விற்பனை
- இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் “கடன் தன்மையின் விற்பனை” மற்றும் “நிலையானச் சொத்துக்களின் பங்குமயமாக்கல்” ஆகியவற்றிற்கான ஒரு வரைவுக் கட்டமைப்பை வெளியிட்டது.
- இந்த நடவடிக்கையானது சரியான விலைக் கண்டுபிடிப்பை உறுதி செய்யக் கூடிய வங்கிக் கடன்களுக்கான வலுவான ஒரு இரண்டாம் நிலைச் சந்தையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அடுத்து வரவிருக்கும் அழுத்தத்திற்கு ஒரு குறிகாட்டியாகவும் இதை பயன்படுத்தப்படலாம்.
- இதில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்குப் பொருந்தும்.
- இதில் அகில இந்திய நிதி நிறுவனங்களான எக்ஸிம் வங்கி, நபார்டு வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியன அடங்கும்.
- இதில் டாக்டர் ஹர்ஷ வர்தன் தலைமையிலான ஒரு குழுவான இந்தியாவில் வீட்டுவசதி நிதிப் பாதுகாப்புச் சந்தை மேம்பாட்டுக் குழுவின் பரிந்துரைகளும் அடங்கும்.
- கோவிட்-19 காரணமாக இந்த விருதுகள் ரத்து செய்யப்படுவதாக ரமோன் மகசேசே விருதை வழங்கும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மணிலா அறக்கட்டளையானது அறிவித்துள்ளது.
- இந்த விருதானது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- இந்த விருது தங்கள் துறையில் தனித்துவத்தை அடைந்த நபர்கள் மற்றும் பிறருக்கு தாராளமாக உதவும் நபர்கள் ஆகியோரை அங்கீகரித்து அவர்களைக் கௌரவிக்கிறது.
- பத்திரிகை, அரசுச் சேவை, பொதுச் சேவை, இலக்கியம் மற்றும் புதுமையான தொடர்பு என ஐந்து பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகின்றது.
- மகசேசே 1953 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியானார்.
DBO உடன் இணைப்பு
- 255 கி.மீ நீளமுள்ள தர்புக்-ஷியோக்-தெளலத் பெக் ஓல்டி (DS-DBO - Darbuk-Shyokh-Daulat Beg Oldie) என்ற அனைத்து வானிலைக்கும் ஏற்ற சாலை நிர்மாணிக்கப்படுவது என்பதற்கான உடனடிக் காரணம் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையிலான மோதலே ஆகும் என்று கூறப்படுகிறது.
- பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட இந்தச் சாலையானது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்குக் கிட்டத்தட்ட இணையாகச் செல்கின்றது. மேலும் இது லே பகுதியை DBO பகுதியுடன் இணைக்கிறது.
- லடாக்கில் இருந்து இந்தியப் பகுதியின் வடக்கு திசையின் எல்லையில் டி.பி.ஓ பகுதி உள்ளது.
- இது உலகின் மிக உயர்ந்த விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. இது முதலில் 1962 ஆம் ஆண்டுப் போரின் போது கட்டப்பட்டது.
- 2008 ஆம் ஆண்டில், இந்திய விமானப் படையானது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியுடன் சேர்த்து மிகுந்த அளவில் இருக்கும் தனது மேம்பட்ட இறங்குதள மைதானங்களில் ஒன்றாக இதை மேம்படுத்திப் புதுப்பித்தது.