மணலூர் அகழாய்வு
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூர் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உலை கண்டுபிடிக்கப்பட்டது. மணலூரில் தோண்டப்பட்ட ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன உலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலை உலோகங்கள் மற்றும் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தூதர் : இந்தியா - பின்லாந்து
- பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாரை வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. வெளியுறவுத்துறை இணைச் செயலாளராக ரவீஷ் குமார் தற்போது பணியாற்றி வருகிறார்.
பனிப்பாறை
- 1900 அடி நீளமுள்ள ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
"SPHERE"
- சமீபத்தில் மிகப்பெரிய தொலைநோக்கியின் "SPHERE" என்ற உபகரணமானது AB ஆரிஜி நட்சத்திர அமைப்பில் ஒரு புதிய கோள் உருவாகியுள்ளதைக் கண்டறிந்து உள்ளது. ஒரு நட்சத்திரம் உருவாகியுள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டது மனித வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இது தெற்கு ஐரோப்பிய ஆய்வு மைத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய தொலைநோக்கியானது வடக்கு சிலியில் உள்ள தெற்கு ஐரோப்பிய ஆய்வு மையத்தில் அமைந்துள்ளது.
உலக சைக்கிள் தினம்
- உலகம் முழுவதும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதியை உலக சைக்கிள் தினமாக கொண்டாட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் அறிவித்தது. 47 உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாக உள்ள தில்லியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.