Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 June 2020 15th June 2020


ஷகர் மித்ரா

  • ஷகர் மித்ரா என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கூட்டுறவு துறையின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் தொழிற்பயிற்சி திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த திட்டமானது தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் (National Cooperative Development Corporation – NCDC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மரியானா ட்ரெஞ்சில் - சேலஞ்சர் முனை

  • விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தவரான கேத்ரின் சல்லிவன்.
  • தற்போது கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

நாசா - முதல் பெண்

  • நாசாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூதர்ஸ் என்ற பெண் விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • 2024–ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FIFA தரவரிசை

  • சமீபத்திய ஃபிஃபா தரவரிசையில் இந்தியா கால்பந்து அணி தனது 108 வது இடத்தைத் பிடித்துள்ளது.
  • இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே பெலிஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே நாடுகள் பெற்றுள்ளன.

“Naoroji: Pioneer of Indian Nationalism”

  • சுகந்திர போராட்ட வீரர் தாதாபாய் நெளரோஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “Naoroji: Pioneer of Indian Nationalism” என்ற பெயரில் வரலாற்று ஆசிரியர் தின்யார் பட்டேல் எழுதியுள்ளார்.
  • உலக இரத்த தானம் வழங்குவோர் தினம் இரத்தத்தில் உள்ள வகைகளை கண்டுபிடித்த கார்ல் லான்ட்ஸ்டைனர் பிறந்த தினமான ஜூன்-14, உலக இரத்த தானம் வழங்குவோர் தினமாக 2005 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  • இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: பாதுகாப்பான இரத்தம் உயிர்களைப் பாதுகாக்கிறது (Safe Blood Saves Lives)

NIRF

  • முதல் 50 இடங்களில் ஏறத்தாழ அனைத்துப் பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுடன் தமிழ்நாடு மாநிலமானது இந்திய உயர் கல்வியில் அதிகப் பங்களிக்கும் ஒரு முன்னிலை மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது இந்தியாவின் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கல்லூரிகளுடன் பொறியியல் கல்லூரிப் பட்டியலில் ஒரு தலைமை மாநிலமாகத் திகழ்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்புத் தரவரிசையின்படி, (NIRF – National Institutional Ranking Framework) நாட்டின் முன்னிலையில் உள்ள 100 பொறியியல் கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.
  • தொடர்ந்து 5வது முறையாக நாட்டின் சிறந்த பொறியியல் கல்லூரி என்ற அங்கீகாரத்துடன் நாட்டின் முன்னிலையில் உள்ள ஒரு கல்வி நிறுவனமாக ஐஐடி-மதராஸ் திகழ்கின்றது.
  • திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 இதர பொறியியல் கல்லூரிகளிடையே 9வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • கல்லூரிகளின் தரவரிசையில் இந்தியாவில் உள்ள முதல் 100 மானுடவியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றில் ஒரு பங்கு கல்லூரிகளைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு தரவரிசையில், தமிழ்நாட்டில் இருந்து 35 கல்லூரிகள் இடம் பெற்றன. இந்த ஆண்டில் மொத்தமுள்ள 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.
  • முதன்முறையாக இந்த ஆண்டின் முன்னிலை பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மதராஸ் மருத்துவக் கல்லூரியானது 12வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டு உள்ளது.

மேட்டூரிலிருந்து நீர் திறப்பு

  • தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே பழனிசாமி குறுவை நீர்ப் பாசனப் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையிலிருந்து டெல்டாப் பகுதிக்கு நீரினைத் திறந்து விட்டார்.
  • வழக்கமான ஜுன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப் படுவது தற்பொழுது 17வது முறையாகும்.
  • மேட்டூர் அணை வரலாற்றில் 16 முறை (ஆண்டுகள்) மேட்டூர் அணையிலிருந்து வழக்கமான ஜுன் 12 ஆம் தேதியன்று நீர் திறக்கப்பட்டுள்ளன.
  • இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டில் (12 ஆண்டுகளுக்கு முன்பு) மேட்டூர் அணையிலிருந்து நீரானது வழக்கமான ஜுன் 12 அன்று திறந்து விடப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதியிலிருந்து தற்பொழுது வரை (2020 ஜுன் 12) இந்த அணையானது கடந்த 305 நாட்களாக 100 கன அடி நீரைக் கொண்டுள்ளது.
  • 2005-06 ஆம் ஆண்டில், 427 நாட்களாக மேட்டூர் அணையின் நீரின் அளவானது 100 கன அடிக்குக் கீழே செல்லவில்லை.
  • இதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் நீர்ப்பாசன வசதியைப் பெற இருக்கின்றன.

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம்

  • இடஒதுக்கீடு குறித்த உரிமையானது ஓர் அடிப்படை உரிமையல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • இது தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரியில் ஒபிசி பிரிவினருக்கு (இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர்) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பல்வேறு வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரித்து வருகின்றது.
  • இடஒதுக்கீட்டு உரிமையானது ஓர் அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இடஒதுக்கீட்டுப் பயன்கள் அளிக்கப்படாதது எந்தவொரு அரசியலமைப்பு உரிமையின் மீதான விதிமீறலும் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • ஒரு பொதுப் பிரச்சினைக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வந்திருப்பதை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.
  • உச்சநீதிமன்றமானது மதராஸ் உயர்நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்து அங்கேயே இதற்குரிய நிவாரணத்தைப் பெறுமாறு மனுதாரர்களிடம் கூறியுள்ளது.
  • இந்த மனுக்கள் 2020-21 ஆம் ஆண்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான பாடப் பிரிவுகளுக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கு வேண்டி தமிழ்நாட்டினால் வழங்கப்பட்ட இடங்களில் 50% இடங்கள் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று கூறுகின்றது.
  • தமிழ்நாட்டில் ஒபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 69% இடஒதுக்கீடும் அதற்குள் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%ற்கும் மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Share with Friends