திரங்கா (Tiranga) கார்
- கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்யும் சமயத்தில், சுகாதார பணியாளர்களையும் கோவிட்-19 தொற்றிக்கொள்ளும் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, திரங்கா (Tiranga) என்ற காரை கேரளா பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கேரள மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கோவிட்-19 வைரஸ் தாக்கிய நோயாளிகளை வேகமாக கண்டறியவும், நோயாளிகளை பாதுகாப்பாக பரிசோதிக்கவும் பயன்படுத்தப்படும் இந்த காரில் 3 சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள், பொது அறிவிப்பின் மூலம் மக்களை பரிசோதனைக்கு அழைக்கிறார்கள்.
முக்யமந்திரி மாத்ரு புஷ்டி உபார்
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்குவதற்காக திரிபுரா அரசு முக்யமந்திரி மாத்ரு புஷ்டி உபார் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திரா ரசோய் யோஜ்னா -Indira Rasoi Yojana
- மலிவு விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் வகையில் ராஜஸ்தான் அரசு இந்திரா ரசோய் யோஜ்னா (Indira Rasoi Yojana)” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
eBloodServices
- மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஜூன் 25 அன்று இந்திய செஞ்சிலுவை சங்கம் (Indian Red Cross Society – IRCS) உடன் இணைந்து ‘eBloodServices’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- இந்த செயலியின் மூலம் தொலைபேசியில் இரத்தம் கிடைக்கும் நிலவரம் எளிதில் தெரியும். ஒரு ஆர்டர் வழங்கப்பட்டவுடன், இரத்த வங்கி கோரிக்கையை 12 மணி நேரம் செயலில் வைத்திருக்கும். ஒரே நேரத்தில் நான்கு யூனிட் ரத்தம் வரை ஆர்டர் செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது.
“தமிழக சிறைத்துறை”
- தமிழக சிறைத்துறை (Tamil Nadu Prison Department) சிறை-சீர்திருத்தத்துறை (Department of Prisons and Correctional Services ) என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
- மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.