முதல் பெண் இருதயநோய் நிபுணர்
- இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் மற்றும் அனைத்திந்திய இதய பவுண்டேசன், புது தில்லி (All India Heart Foundation (AIHF)), தேசிய இதய நிறுவனம் (National Heart Institute(NHI)) ஆகியவற்றின் நிறுவனருமான டாக்டர் எஸ். பத்மாவதி தனது 103 வயதில் காலமானார். இவர், ’இருதயவியலின் தாய்’ (“GodMother of Cardiology”) எனவும் அழைக்கப்படுகிறார்.
"சாவ்னி கோவிட்"
- ”சாவ்னி கோவிட் : யோதா சன்ரக்ஷன் யோஜனா” (“Chhavni COVID: Yodha Sanrakshan Yojana” ) என்ற பெயரில் இந்தியா முழுவதும் 62 இராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளில் பணிபுரியும் 10000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான குழு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (Life Insurance Corporation (LIC)) மூலம் தொடங்கியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் எதிர்பாரா உயிரிழப்பு நேரிடும் தருணத்தில், பயனர்கள் ரூ.5இலட்சம் இழப்பீடு பெறுவர்.
European Investment Bank
- உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மெட்ரோ (Kanpur Metro ) இரயில் திட்டத்தில் 650 மில்லியன் யூரோ முதலீடு செய்வதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி (European Investment Bank ) அறிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி
- முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) 31-8-2020 அன்று மரணம் அடைந்தார்.
- இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை பதவி வகித்தவர்.
- இவரது உயரிய மக்கள் சேவையை மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது.
- காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1982-ம் ஆண்டில் 47-வது வயதிலேயே இவர் நிதி மந்திரி ஆனார்.
- இந்திராகாந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய மூன்று பிரதமர்களிடம் மந்தியாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 5 முறையும், மக்களவை உறுப்பினராக 2 முறையும் இருந்திருக்கிறார்.
- முதன் முதலாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக மேற்கு வங்காள மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியில் இருந்து கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிராடி கிராமத்தில் கடந்த 1935-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவருடைய தந்தை பெயர் கமடா கிங்கர் முகர்ஜி, தயார் பெயர் ராஜலட்சுமி முகர்ஜி. பெற்றோர் சுதந்திர போராட்ட வீரர்கள் ஆவார்கள்.
- இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்.
- அந்த சமயத்தில் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காங்கிரசில் ஓரங்கட்டப்பட்டதால், அதில் இருந்து விலகிய பிரணாப் முகர்ஜி ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
- பின்னர் ராஜீவ் காந்தியுடன் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, 1989-ம் ஆண்டு அந்த கட்சியை காங்கிரசுடன் இணைத்தார்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
- கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு சுப்ரீம் கோர்ட்டு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு ரூபாய் அபராதத்தைத் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய முன்னாள் தூதா் கே.எஸ்.பாஜ்பாய்
- இந்திய முன்னாள் தூதா் கே.எஸ்.பாஜ்பாய் 30-8-2020 அன்ற் காலமானாா் .கடந்த 1952-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு பணியில் சோ்ந்த காத்யாயனி சங்கா் பாஜ்பாய் , அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கான இந்திய தூதராக பணிபுரிந்துள்ளாா்.
- கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, அவா் பாகிஸ்தானில் இந்திய தூதராக பணியாற்றினாா்.
World’s Largest Solar Tree
- உலகின் மிகப்பெரிய சோலார் மரம் (World’s Largest Solar Tree) மேற்குவங்க மாநிலம் துர்க்காப்பூரில் , ’இந்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்’ (Council of Scientific and Industrial Research (CSIR)) மற்றும் மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Mechanical Engineering Research Institute (CMERI)) நிறுவப்பட்டுள்ளது.
’மெட்பாட்’ (‘MEDBOT’)
- ’மெட்பாட்’ (‘MEDBOT’) என்ற பெயரில் தொலை கட்டுப்பாட்டு மருத்துவ தள்ளுவண்டியை (remote-controlled medical trolley ) இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.
அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜனா
- அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜனா (Atal Bimit Vyakti Kalyan Yojana) என்ற பெயரிலான பணியாளர் மாநில காப்பீட்டு திட்டத்தின் (Employees’ State Insurance (ESI) scheme) கீழ் வரும் தொழிலாளர்களுக்கு வேலையின்மை பயன் வழங்கும் திட்டத்தின் கால அளவை 30 ஜீன் 2021 வரையில் ஓராண்டிற்கு பணியாளர் மாநில காப்பீட்டு கழகம் (Employees’ State Insurance Corporation (ESIC)) நீட்டித்துள்ளது.
- 1 ஜூலை 2018 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் பிமிட் வியாகி கல்யாண் திட்டத்தின் கீழ் , பணியாளர் மாநில காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு வேலையில்லா காலங்களில், வேலையின்மை நன்மையாக, வாழ்நாளில் ஒரு முறை 90 நாட்கள் வரை பண உதவி இழப்பீடாக வழங்கப்படுகிறது.
”ஐ.என்.எஸ் விராட் ” (INS Viraat ) போர்க்கப்பல்
- உலகின் நீண்ட காலம் பயன்பாட்டிலிருந்த போர்க்கப்பல் எனும் கின்னஸ் உலக சாதனைக்குரிய ”ஐ.என்.எஸ் விராட் ” (INS Viraat ) போர்க்கப்பல் குஜராத்திலுள்ள அலாங் ( Alang ) எனுமிடத்தில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் உடைக்கப்படவுள்ளது.
- 1987 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விராட் கடந்த மார்ச் 2017 ல் தனது 30 ஆண்டுகால சேவையினின்று ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.