Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 18th September 2020


விஸ்வகர்மா விருது

  • அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு, விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது. சமூக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக, இந்த விருது வழங்கப்படுகிறது.
  • கொரோனா பேரிடர் காலத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில், இந்தாண்டுக்கான விருது பட்டியல் தயாரிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில், அரசு துறையின் பணிகளுக்கு உதவிய பிரிவில், தமிழகத்தில் உள்ள ஜோசப் இன்ஜி., கல்லுாரி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இம்மாதம், 17ம் தேதி, டில்லியில் நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், விருதுகளை வழங்கினார்.

ஐ.நா.,வின், குழுவில் 17 பேர் தேர்வு

  • சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இளைஞர்களை ஊக்குவித்து, கவுரவிக்கும் வகையில், இளையோருக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழு தேர்வு செய்யப்படுகிறது.
  • இந்தாண்டின் இளையோருக்கான, நிலைத்த வளர்ச்சிக் குழுவில், இந்தியா, பாக்., சீனா உள்ளிட்ட, நாடுகளைச் சேர்ந்த, இளம் தலைவர்கள், 17 பேர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர்.
  • அவர்கள், சுற்றுச்சூழல், வேளாண், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம், சமூக மேம்பாட்டிற்கு சீரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். அவர்கள், மேலும் பல இளைஞர்களை ஊக்குவித்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்பார்கள்.
  • டில்லியைச் சேர்ந்த, 'பிரிட்டிஷ் பள்ளி' மாணவரான, உதித் சிங்கால், தனது, 'கிளாஸ் 2 சாண்ட்' திட்டத்தின் மூலம், கழிவு பாட்டில்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளார்.
  • 'சிலிக்கா' பிளாஸ்டிக் ஆதிக்கத்தால், பழைய கண்ணாடி பாட்டில்களுக்கு, நல்ல விலை கிடைப்பதில்லை. இதையடுத்து, உதித் சிங்கால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, உயர்தரமான 'சிலிக்கா' மணலாக மாற்றுகிறார்.
  • இந்த வகையில், 8,000 பாட்டில்கள் மூலம், அவர், 4,815 கிலோ சிலிக்கா மணலை தயாரித்துள்ளார்.

உலகின் மிக தூய்மையான கடற்கரை

  • நாட்டில் மிக தூய்மையான மற்றும் சர்வதேச அளவில் சுற்றுசூழலுக்கு உகந்த கடற்கரைகள் எவை என்பதை அங்கிகரிக்க பிரபல சுற்றுசூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிந்துரைக்கும் கடற்கரைகளுக்கு நீல கொடி அந்தஸ்து வழங்கப்படும்.
  • இதன்படி, இந்தியாவில், குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், டாமன் மற்றும் டையூவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோடு மற்றும் பதுபித்ரி, கேரளாவில் உள்ள கப்பாடு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ருஷிகொண்டா, ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை மற்றும் அந்தமான் நிகோபார் தீவில் உள்ள ராதாநகர் 8 கடற்கரைகள் இந்த பெருமைமிகுந்த நீல கொடி அந்தஸ்துக்கான பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

Namma Chennai செயலி

  • பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) நடவடிக்கை மேற்கொள்ளும்.
  • இது நல்ல திட்டம் என்பது மட்டுமில்லாமல், இந்த செயலி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
  • கொரோனா (COVID-19 Pandemic) காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.
  • மேலும் கொரோனா குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது. தற்போது "Namma Chennai" செயலி மூலம் மக்கள் தங்கள் குறைகளையும் புகார்களையும் தெரியப்படுத்தலாம்.
  • அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு, மழைநீர் தேக்கம், குப்பை தேக்கம், சேதமடைந்த சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது சுகாதாரம் போன்றவை சார்ந்த குறைகையும், புகார்களையும் சென்னை மக்கள் தெரியப்படுத்தலாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

ஹாய்சென் சூறாவளி (Typhoon)

  • ஹாய்சென் சூறாவளியானது ஜப்பானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடந்தது.
  • கடந்த ஒரு வாரத்திற்குள் அந்நாட்டில் கரையைக் கடக்கும் இரண்டாவது சூறாவளி இதுவாகும்.
  • இந்தச் சூறாவளியானது நான்காம் வகைச் சூறாவளியாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
  • இதன் பொருள் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட வீடுகளானது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதைக் குறிக்கின்றது.
  • குறிப்பிட்ட ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படும் முதலாவது சூறாவளி "சூறாவளி எண் 1' எனக் குறிப்பிடப் படுவதன் காரணமாக இது ஜப்பானின் "சூறாவளி எண் 10" ஆகக் குறிப்பிடப் படுகின்றது.
  • ஹாய்சென் என்ற பெயரானது சீன நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டதாகும். இதற்கு சீன மொழியில் "கடல் தெய்வம்" என்று பொருள்படும். இவை அது ஏற்படும் இடத்தைப் பொறுத்து டைபூன்கள் அல்லது சூறாவளிகள் என்று அழைக்கப் படுகின்றன.

YSR ஆசாராத் திட்டம்

  • ஆந்திரப் பிரதேசமானது -YSE ஆசாராத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இது நவ ரத்னாலு என்பதைச் செயல்படுத்துதலின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வறுமையை ஒழித்தல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் என்ற நோக்கத்துடன் தொடங்கப் பட்டு உள்ளது.
  • இந்தத் திட்டமானது பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனானது நான்கு தவணைகளில் வழங்கப் படவுள்ளது.
  • "நவ ரத்னாலு என்ற திட்டமானது ஆந்திரப் பிரதேசத்தின் 2019 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

சூழலியல் அச்சுறுத்தல் பதிவேடு

  • இது வருடாந்திர தீவிரவாத மற்றும் அமைதிக் குறியீடுகளை வெளியிடும் ஒரு கொள்கை வகுக்கும் அமைப்பான பொருளாதார மற்றும் அமைதி மையத்தினால் (IEF - Institute for Economics and P=ss=) தொகுக்கப் பட்டுள்ளது.

  • முக்கிய அம்சங்கள்

  • அடுத்த 20 ஆண்டுகளில், அதாவது 2050 ஆம் ஆண்டுவாக்கில் 141 நாடுகள் குறைந்தது 1 சூழலியல் அச்சுறுத்தலையாவது எதிர்கொள்ளும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், சாட், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான சூழலியல் அச்சுறுத்தல்களைக் கொண்ட 19 நாடுகள் உலகில் குறைந்த அமைதியுள்ள 40 நாடுகளில் உள்ளடங்கும்.
  • ஆப்பிரிக்காவின் துணை சகாராப் பகுதி, தெற்கு ஆசியா, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகியவை அதிக எண்ணிக்கையிலான சூழலியல் அச்சுறுத்தல்களை எதிர் கொள்கின்றன.
  • 2020 ஆம் ஆண்டுவாக்கில், மொத்தம் 5.4 பில்லியன் மக்கள் (உலகின் கணிக்கப் பட்ட மக்கள் தொகையில் பாதிக்கும் மேல்) அதிக மற்றும் தீவிரமான நீர்ப் பிரச்சினையுள்ள இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 59 நாடுகளில் வசிக்க உள்ளனர்.
  • 2.5 பில்லியன் மக்கள் 2050 ஆம் ஆண்டுவாக்கில் உணவுப் பாதுகாப்பு நிச்சயமற்றத் தன்மையினால் பாதிக்கப்படவுள்ளனர்.
  • ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற அதிக இடர்களைத் தாங்கும் தன்மையுள்ள பகுதிகள் சூழலியல் அச்சுறுத்தல்களின் அதிகப்படியான தாக்குதல்களிலிருந்து விடுபடாமல் இருக்கும்.
  • சுவிடன், நார்வே, அயர்லாந்து, ஐஸ்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளாது.
  • ஒட்டு மொத்தமாக 16 நாடுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளாது.

Share with Friends