இந்திய & ஜப்பான் - ராணுவ ஒப்பந்தம்
- இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது. அத்துடன், இந்தியா, நேபாளம் போன்ற அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
- இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்மூலம் இரு நாடுகளும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் மற்றும் ஜப்பான் தூதர் சுசுகி சடோஷி ஆகியோர் கையெழுத்திட்டனர் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- இரு நாடுகளுக்கு இடையில் நெருங்கிய ராணுவ ஒத்துழைப்பு, இரு நாட்டு ராணுவ தளவாடங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளுதல், ரகசிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல் உட்பட அனைத்து அம்சங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்தி உள்ளது.
- இதுபோன்ற ராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த நாடுகளில் உள்ள ராணுவ வசதிகளை இந்தியா இணைந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- அங்குள்ள விமான தளங்கள், துறைமுகங்களை இந்தியா தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும். அதேபோல் அந்த நாடுகளும் இந்தியாவில் உள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
- சீனாவும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாதார் துறைமுகங்களில் தனது நிலையை பலப்படுத்தி இருக்கிறது. அங்கு தனது போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தி உள்ளது.
- மேலும், கம்போடியா போன்ற சிறிய நாடுகளிலும் தனது ராணுவ நிலைகளை ஏற்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு அருகில் மட்டும் 6 முதல் 8 போர்க் கப்பல்களை சீனா நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
4வது முறையாக சாம்பியன் பட்டம்
- வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தது.
- இதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில், பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், டேரன் சேமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது.
அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயா்
- சா்வதேச விண்வெளிக் கலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுக்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக, அமெரிக்காவின் நாா்த்ராப் குருமன் நிறுவனம் தனது சிக்னக் விண்கலத்தை தயாா் செய்து வருகிறது.
- அந்த விண்கலத்துக்கு இந்திய வம்சாவளியைச் சோந்த கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டியிருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
- இந்தியாவின் பஞ்சாம் மாநிலத்தில் பிறந்த கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்கலத்தின் மூலம் கடந்த 1997-ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றாா்.
- அதனைத் தொடா்ந்து, 2003-ஆம் ஆண்டு விண்வெளி சென்று திரும்பிய கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில், அதிலிருந்த கல்பனா சாவ்லாவும், மற்ற 6 விண்வெளி வீரா்களும் உயிரிழந்தனா்.
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம்
- பிகார் மாநிலம் புர்ணியாவில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அளித்த 75 ஏக்கர் நிலத்தில் ரூ.84.27 கோடி செலவில் இது அமைந்துள்ளது. அரசுத் துறையில் மிகப் பெரிய விந்து உற்பத்தி நிலையமாக இது இருக்கும். ஆண்டுக்கு 50 லட்சம் விந்து தொகுப்புகள் இங்கு உருவாக்கப்படும்.
- பிகாரில் உள்ள உள்நாட்டு மீன்வளங்களைப் பாதுகாப்பதில் இது புதிய வடிவத்தை அளிக்கும். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விந்து தேவைகளை இது பூர்த்தி செய்யும்.
- ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐ.வி.எப். ஆய்வகத்தை பாட்னாவில் கால்நடை பராமரிப்புப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- 100 சதவீத மானிய உதவியுடன் நாடு முழுக்க மொத்தம் 30 இ.டி.டி மற்றும் ஐ.வி.எப். ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. உள்நாட்டு இனங்களின் மேன்மையான இனங்களை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கி, உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும் இது இருக்கும்.
- ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் பிகாரில் பெருசராய் மாவட்டத்தில் பரோனி பால் ஒன்றியத்தில் செயற்கைக் கருவூட்டலுக்கு பாலினம் தேர்வு செய்த விந்தணு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- செயற்கைப் புலனறிதல் மூலமாக, பாலினம் தேர்வு செய்யப்பட்ட விந்தணு பயன்படுத்துவதால் பெண் இனங்கள் மட்டுமே உருவாகும் (90 சதவீதம் வரையில் துல்லியத்தன்மை இருக்கும்) இதனால் நாட்டில் பால் உற்பத்தி இரட்டிப்பாகும்.
”மத்ஸ்ய சம்பட யோஜ்னா ”
- மீன்வளத்துறைக்கான ”மத்ஸ்ய சம்பட யோஜ்னா ” (PM Matsya Sampada Yojana) திட்டத்தை பிரதமர் மோடி 10-9-2020 அன்று தொடங்கி வைத்தார்.
- அடுத்த 3-4 ஆண்டுகளில் எங்கள் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மீன்வளத் துறைக்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமானது, 2020 முதல் 5 ஆண்டு காலத்திற்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- முக்கிய அம்சங்கள் :
- 2024-25 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன்னாக உயர்த்துதல்
- மீன்வளத் துறையின் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை 10% ஆகக் குறைத்தல்
- மீன்வளத் துறையில் 55 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குதல்
Important days
- சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) - செப்டம்பர் 8 / மையக்கருத்து - 'கோவிட்-19 சூழல் மற்றும் அதற்கு அப்பால் எழுத்தறிவு மற்றும் கற்றல்' ("Literacy teaching and learning in the COVID-19 crisis and beyond")
- இமாலய தினம் (Himalyan Day) - செப்டம்பர் 9
- உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) - செப்டம்பர் 10 விருதுகள்
பன்றி இறைச்சிப் பண்ணை
- இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சிப் பண்ணையை ரூ. 209 கோடி மதிப்பில் மேகாலயாவில் 10-9-2020 அன்று மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி தொடங்கி வைத்தார்.
- தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆத்ம நிர்பார்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் ஒதுக்கிய ரூ. 209 கோடியில் இந்த பன்றி இறைச்சி பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
கிஷான் இரயில் சேவை
- தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது கிஷான் இரயில் சேவை ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருந்து தில்லிக்கு 9-9-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- வேளாண் பொருள்களை ஏற்றிச்செல்வதற்கான , நாட்டின் முதல் கிஸான் ரயில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தேவலாலியில் இருந்து பிகார் மாநிலம் தானாபூருக்கு தொடக்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரபேல் போர் விமானங்கள்
- பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் 10-9-2020 அன்று முறைப்படி இணைக்கப்பட்டது
- அரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இந்த 5 விமானங்களும் இணைக்கப்பட்டன.
- பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி ப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பரிமாண வறுமை குறியீடு ஒருக்கமைப்பு குழு
- நிதி அயோக் அமைத்துள்ள பல்பரிமாண வறுமை குறியீடு ஒருக்கமைப்பு குழுவின் ( Multidimensional Poverty Index Coordination Committee ) தலைவராக சன்யுக்தா சமாதர் (Ms Sanyukta Samaddar) நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலக பல்பரிணாம வறுமைக் குறியீட்டில், இந்தியா 62 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.