புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட டாடாவுக்கு அனுமதி
- மத்திய அரசின் பொதுப்பணித் துறை இந்த வளாகம் கட்டுவதற்கு ரூ. 940 கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவாக டெண்டர் கேட்பு மனு தாக்கல் செய்த டாடா நிறுவனத்துக்கு நாடாளுமன்ற வளாகம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டரில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றது. மொத்தம் ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைய உள்ளது.
- புதிய கட்டிடத்தை டாடா புராஜெக்ட் நிறுவனம் கட்ட உள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தனது டெண்டர் கேட்பு மனுவில் ரூ. 865 கோடி குறிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவான தொகை கோரியிருந்ததால் டாடா புராஜெக்ட் நிறுவனத்துக்கு இத்திட்டப் பணியை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு
- அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்த அண்ணா பல்கலை. சட்டத்தில் 2 திருத்தங்கள் செய்வதற்கான சட்ட முன்வடிவுகளை உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிமுகம் செய்தார்.
- அண்ணா பல்கலை.யின் 13 உறுப்பு கல்லூரிகள், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எம்ஐடி) ஆகியவற்றை உள்ளடக்கி, ஆராய்ச்சி மீது கவனம் செலுத்தும் வகையில் அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், தமிழகத்தில் உள்ள இதர பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை கண்காணிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் என்றும் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டம் ஜூன் 26ல் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- இந்த மசோதா கூட்டுறவு சங்க பதிவாளர்களின் அதிகாரத்தை பறிக்காமல், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதற்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் - 5
- கொரோனா வைரசுக்கு எதிராக, ஸ்புட்னிக் - 5 என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக, ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த, ஆர்.டி.ஐ.எப்., எனப்படும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி நிறுவனம் இதை தயாரிக்க உள்ளது.
- இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்து, தயாரிப்பது தொடர்பாக, மத்திய அரசுடன், ரஷ்ய அரசு பேச்சு நடத்தி வந்தது.
- இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய மற்றும் தயாரிக்க, பிரேசில், இந்தியா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
- கொரோனா வைரசுக்கு எதிராக, ரஷ்யா உருவாக்கியுள்ள, 'ஸ்புட்னிக் - 5' தடுப்பூசியை பரிசோதனை செய்ய மற்றும் தயாரிக்க, இந்தியாவைச் சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ் லேபாரடீஸ்' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தேசிய பொறியாளர்கள் தினம் - செப்டம்பர் 15
- இந்தத் தினமானது இந்தியாவின் சிறந்த பொறியாளரான மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரய்யா அல்லது M.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த நாள் நினைவாகவும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அனுசரிக்கப் படுகின்றது.
- இவர் இந்தியாவின் சிறந்த பொறியாளர், அணை கட்டமைப்பாளர், பொருளாதார வல்லுநர், சிறந்த தலைவர் ஆவார்.
- மேலும் இவர் கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த தேசக் கட்டமைப்பாளர்களில் ஒருவராகவும் மதிப்பிடப் படுகின்றார். மேலும் இவர் 1912 முதல் 1918 வரை மைசூரின் திவானாகவும் விளங்கினார்.
- இவர் மைசூரில் உள்ள கிருஷ்ணா ராஜ சாகர் அணையின் கட்டுமானத்திற்குப் பொறுப்பு வகித்த தலைமைப் பொறியாளராக விளங்கினார். . மேலும் இவர் ஹைதராபாத் நகரத்திற்கான வெள்ளப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை வடிவமைப்பாளராகவும் விளங்கினார்.
- இவர் 1903 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் முதன்முதலில் அமைக்கப்பட்ட ஒரு தானியங்கி வெள்ளத்தடுப்பு வாயில்களை வடிவமைத்து அதற்கான காப்புரிமையைப் பெற்றார். . மேலும் இவர் மைசூர் மாகாணத்தை அப்போதைய ஒரு மாதிரி மாகாணமாக" மாற்றினார்.
- சமூகத்திற்கு இவருடைய தலைசிறந்த பங்களிப்பின் காரணமாக, இந்திய அரசு இவருக்கு 1955 ஆம் ஆண்டில் 'பாரத் ரத்னா' விருதினைவழங்கியது. . மேலும் இவருக்கு ஐந்தாம் ஜார்ஜ் அரசரினால் பிரிட்டீஷ் நைட்வுட் பட்டமும் வழங்கப் பட்டது.
இந்தி திவாஸ் - செப்டம்பர் 14
- இது இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி ஏற்றுக் கொள்ளப் பட்டதை அனுசரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்திய அரசியலமைப்பின் சரத்து 343 என்பதின் கீழ், தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப்பட்ட இந்தியானது (120 மொழிகளினால் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவம்) அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
- இந்த முடிவானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார சுதந்திரக்குறியீடு - 2020
- இந்தியாவானது கனடாவின் பிரேசர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட "உலகளாவிய பொருளாதார சுதந்திரக் குறியீடு - 2020 என்பதற்கான வருடாந்திர அறிக்கையில்" 105வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
- இது புதுதில்லியில் உள்ள ஒரு கொள்கை வகுக்கும் குழுவான சிவில் சமூக மையத்துடன் இணைந்து இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
- இது உலகின் பொருளாதார சுதந்திரக் குறியீட்டின் 24வது பதிப்பாகும்.
- இதில் முன்னிலையில் உள்ள 5 நாடுகள் : ஹாங்காங், சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா.
- இதில் கீழ் நிலையில் உள்ள 5 நாடுகள் - ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஜிம்பாவே, அல்ஜீரியா.
வாழும் கோள் அறிக்கை 2020
- இது உலக வனவிலங்கு நிதியம் (WWF - woria wildlife Funa) மற்றும் இலண்டனின் விலங்கியல் சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
- 1970 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலக வனவிலங்கு எண்ணிக்கையில் 58% குறைந்துள்ளதாக இது கண்டுபிடித்து உள்ளது.
- பூமியின் பனியற்ற நிலப்பரப்பில் 75% நிலப்பரப்பானது ஏற்கெனவே மாற்றம் அடைந்துள்ளது. பெரும்பாலான பெருங்கடல்கள் மாசுபாடு அடைந்துள்ளன.
- இந்தக் காலகட்டத்தின் போது 85%ற்கும் மேற்பட்ட ஈரநிலங்கள் அழிக்கப் பட்டு உள்ளன.
- உலக அளவில் நிலப் பயன்பாட்டின் காரணமாக அதிகமான பல்லுயிர்ப் பெருக்க இழப்பானது ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 57.9% என்ற அளவிலும் வட அமெரிக்காவில் 52.5% என்ற அளவிலும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 51.2% என்ற அளவிலும் ஆப்பிரிக்காவில் 45.9% என்ற அளவிலும் ஆசியாவில் 43% என்ற அளவிலும் காணப்படுகின்றது.
- மிக அதிக வனவிலங்கு எண்ணிக்கை அழிப்பானது 94% என்ற அளவில் இலத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
- உலகின் மொத்த நிலப்பரப்பில் 24% என்ற அளவுடன் 45,000 உயிரின வகைகளுடன் மிகப்பெரிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடான இந்தியாவானது ஏற்கெனவே 5 தாவர இனங்களை இழந்துள்ளது.
- இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் 12% வனப்பாலூட்டிகளையும் 19% ஈரிட வாழ்விகளையும் 3% பறவை இனங்களையும் இழந்துள்ளது.
- இந்தியாவில் முதுகெலும்புள்ள உயிரினங்களின் எண்ணிக்கையானது 50% என்ற அளவில் குறைந்து வருகின்றது.
முக்கிய அம்சங்கள்
உலக முதலுதவி தினம் - செப்டம்பர் 12
- உலக முதலுதவி தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
- முதலுதவி தினமானது ஒவ்வொரு நாளிலும் மற்றும் நெருக்கடிக் காலங்களிலும் முதலுதவி என்பது எவ்வாறு உயிர்களைக் காப்பாற்றுகின்றது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
- சர்வதேச செஞ்சிலுவைக் கூட்டமைப்பு மற்றும் மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன இணைந்து 2000 ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிமுகப்படுத்தியது.
WSIS விருது 2020
- மேற்கு வங்காள மாநில அரசானது தனது சம்பூஜ் சாதி என்ற திட்டத்திற்காக WSI5 விருது 2020 என்பதை {Worna Summit on the Information Society - தகவல் சமூகம் மீதான உலக மாநாடு) வென்றுள்ளது.
- கன்யா ஸ்ரீ திட்டத்திற்குப் பிறகு, மற்றொரு மேற்கு வங்காள மாநில அரசுத் திட்டமானது மின் ஆளுகை வகையின் கீழ் ஓர் உலகளாவிய பரிசை வென்று உள்ளது.
- 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றில் பயிலுகின்ற அரசால் நிர்வகிக்கப் படும்.
- அரசால் ஆதரவளிக்கப்படும், நிதியுதவி அளிக்கப்படும் பள்ளி மாணவர்கள் மற்றும் மதராசா பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன .
- இது பள்ளி இடைநிற்றல் பிரச்சினையை, அதிலும் குறிப்பாக வங்காள மாநிலத்தின் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றல் பிரச்சினையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும் இது குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு வரை அவர்கள் பள்ளி கல்வியைத் தொடரச் செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- 2017 ஆம் ஆண்டில் இலக்காகக் கொண்ட நிபந்தனையுடன் கூடிய பணப் பரிமாற்றத் திட்டமான கன்யாஸ்ரீ பிரகல்பா திட்டமானது ஐக்கிய நாடுகளின் விருதைப் பெற்றுள்ளது.
13 மில்லியன் ஆண்டுகள் பழமையான - மனிதக் குரங்கினம்
- 2015 ஆம் ஆண்டில் உத்தரகண்ட்டின் ராம்நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடைவாய்ப் பல் புதைபடிவமானது பண்டைய நீண்டைய கைகளை உடைய முந்தைய காலக் குரங்கு வகையைச் சேர்ந்ததாகும்.
- இந்தப் புதை படிவமானது 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு இடம்பெயர்ந்த பெரிய வகை மனிதக் குரங்குகளின் (மனிதக் குரங்குகள், ஆப்பிரிக்கக் குரங்கு வகை, ஓரங்குட்டான்கள், போனோபோன்கள், மனிதர்கள்) இடப்பெயர்வைப் புரிந்து கொள்ள ஆதாரமாக விளங்குகின்றது.
- இந்தப் புதை படிவமானது கீழ் கடைவாய்ப் பல்லின் ஒரு முழு பகுதியாகும். இது இதற்கு முன்பு அறியப்படாத பேரினம் மற்றும் உயிரினங்கள் வகையைச் சேர்ந்தது ஆகும். இது தற்பொழுது கபி ராம்நகரென்சிஸ் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- ஏறத்தாழ 1 நூற்றாண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனிதக் குரங்கினம் இதுவாகும்.
- இது குறைந்தது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனிதக் குரங்கு வகைக்கு முந்தைய காலக் கட்டத்தைச் சேர்ந்தது ஆகும்.