Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 29th September 2020


அந்த்யோதயா திவாஸ்

  • தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனாவின் நிறுவன தினமானது (செப்டம்பர் 25) 'அந்தியோதயா திவாஸ் ஆக அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது "கௌசல் சே கல் பதலேங்" (Kaushal Se Kal Badlenge) என்ற கருத்துருவின் கீழ் அனுசரிக்கப்பட்டது. இந்தத் திட்டமானது தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது 15 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மீது கவனம் செலுத்துகின்றது.

IoT சாதனங்களுக்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுண் செயலி

  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது இணையப் பொருட்கள் சாதனங்களுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுண்செயலியான "மௌசிக்" என்ற ஒன்றை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது. இது டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பான வன்பொருள் கட்டமைப்பிற்கான பிரதாப் சுப்பிரமணியம் மையத்தில் கருத்தாக்கம் செய்யப்பட்டு, வடிவமைக்கப் பட்டு, மேம்படுத்தப்பட்டு உள்ளது.
  • இந்த நுண்செயலி உருவாக்கத்தில் வடிவமைப்பு, கட்டுருவாக்கம் மற்றும் பிந்தைய சிலிகான் பொருத்துதல் (design, fabrication and past-silicon boot-up) ஆகிய 3 படிநிலைகள் உள்ள ன. இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக்கப் பட்டது.

பிரித்திவி - II ஏவுகணை சோதனை

  • இந்தியாவானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அணு ஆயுதத் திறன் கொண்ட, நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரித்திவி - || என்ற தனது ஏவுகணையின் இரவு நேரச் சோதனையை மேற்கொண்டது.
  • இது 350 கிலோ மீட்டர் தாக்கி அழிக்கும் வரம்பு கொண்டதாகவும் உள்ளது.
  • இது நடமாடும் (எடுத்துச் செல்லக் கூடிய) ஏவு வாகனத்திலிருந்து ஏவு திறன் கொண்டதாகவும் உள்ளது.
  • இது 500 முதல் 1000 கிலோ கிராம் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
  • இது திரவ உந்து விசை இரட்டை இயந்திரத்தினால் செயல்படும் திறன் கொண்டது.
  • ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் டிஆர்டிஓவினால் மேம்படுத்தப்பட்ட முதலாவது ஏவுகணை இதுவாகும்.

இந்தியாவிற்கு எதிரான வோடபோன் வழக்கு

  • வோடபோன் நிறுவனமானது தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றமான நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ரூ. 20,000 கோடி நிலுவைத் தொகை வழக்கில் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய அரசானது 2007 ஆம் ஆண்டில் வோடபோன் நிறுவனத்திடமிருந்து நிலுவை வரிகளையும் மூலதன இலாபத்தில் ரூ.7990 கோடி ரூபாயையும் வழங்குமாறு கோரியது. வோடபோன் நிறுவனம் இது குறித்து மும்பை (பம்பாய்) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் வருமான வரித் துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.
  • அதன்பின், இந்நிறுவனம் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  • இந்திய உச்சநீதிமன்றமானது 2012 ஆம் ஆண்டில் வருமான வரிச் சட்டம், 1961 எனும் சட்டத்தின் படி வோடபோன் குழுமத்தின் இடையீடு சரி என்று தீர்ப்பு வழங்கியது.
  • ஆனால் அதே ஆண்டில் மத்திய அரசானது இது போன்ற ஒப்பந்தங்களில் முன்தேதியிட்ட காலத்திற்கான வரி குறித்த அதிகாரங்களை வருமான வரித் துறைக்கு வழங்குவதற்காக நிதிச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது.
  • இந்த வழக்கு அப்பொழுது "முன்தேதியிட்ட காலத்திற்கான வரி வழக்கு" (retrospective taxation cana) என்று அறியப் பட்டது.

ஜிம்மெக்ஸ் 2020 (Jimex)

  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இருதரப்புக் கடல் பயிற்சியான "ஜிம்மெக்ஸ்" ஆனது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது.
  • ஜிம்மெக்ஸ் ஆனது இந்த இரு நாடுகளுக்கிடையே உயரிய நிலையில் ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை மற்றும் உயர்நிலை கூட்டுச் செயல்பாட்டுத் திறன்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுகின்றது.
  • இந்தப் பயிற்சியானது கடல்சார் ஒத்துழைப்பின் மீது சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் கடைசிப் பதிப்பானது 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

மாற்றுத் திறனாளி விளையாட்டு மையம்

  • மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் மாற்றுத் திறனாளி விளையாட்டுகளுக்கான மையத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.
  • மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் மாற்றுத் திறனாளி விளையாட்டுக்களுக்கான மையம் அமைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த மையமானது சமூகப் பதிவுகள் சட்டம், 1850 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்தியர்களின் சராசரி உடல் எடை, உயரம் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு

  • இந்தியர்களின் சராசரி உடல் எடை, ஐந்து கிலோ அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
  • 2010ம் ஆண்டு, இந்தியாவில் ஆண்களின் சரியான எடை 60 கிலோ எனவும், பெண்களின் எடை 50 என்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்தது.
  • இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆண்களுக்கான சரியான எடையை 65 ஆக உயர்த்தியுள்ளது.
  • அதேபோல பெண்களுக்கான உகந்த எடை 55 எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆண்களுக்கு ஏற்ற உயரம் 5. 8 அடி எனவும், பெண்களுக்கு 5. 3 சரியான உயரம் என்றும் தெரிவித்துள்ளது.

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா., மனிதாபிமான விருது

  • கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை தன்னாலான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியது;
  • தமிழக மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவிலிருந்து வர விமானம் ஏற்பாடு செய்து தந்தது; உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.இந்நிலையில், அவரது சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது' சோனு சூட்டுக்கு வழங்கப்பட்டது.
  • கடந்த 28ம் தேதி அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். இவ்விருதினை இதற்கு முன், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர்.

Share with Friends