Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 15th September 2020


அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா - 2020

  • விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், வேளாண் துறையில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
  • அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா - 2020 திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.
  • அரசின் அமைப்புகள் அதிகமான தலையீடுகளை உண்டாக்குமோ என்ற அச்சமின்றி தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் வேளாண்துறையில் அதிகமான முதலீடுகளை செய்ய முடியும் என்பதாகும்.

இஸ்ரேல், யு.ஏ.இ. & பக்ரைன் - ஒப்பந்தம்

  • இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
  • இந்நிலையில் கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் திடீரென அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரகம் இணைந்துள்ளது.
  • வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு யு.ஏ.இ. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இரு நாடுகளும் தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்கவும் தூதரங்களை ஏற்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.
  • இருநாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாயின.இந்நிலையில் இன்று இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, யு.ஏ.இ. வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

குஜராத் - ஆயுர்வேத நிறுவனங்கள்

  • குஜராத்தில் உள்ள ஆயுர்வேத நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்குவதற்கான, ஆயுர்வேத நிறுவன மசோதா, ராஜ்யசபாவில் செய்யப்பட்டது.
  • குஜராத்தில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதுகலை ஆயுர்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆயுர்வேத மஹாவித்யாலயா, ஆயுர்வேத மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றை ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒன்றிணைக்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • அந்த நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்கவும், மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா கடந்த மார்ச் மாதம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

முதல் முறையாக காணொலி மூலம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்

  • கரோனா நெருக்கடி காரணமாக, ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
  • அந்த அமைப்பின் வரலாற்றில், உலகத் தலைவா்கள் நேரடியாக வராமல் காணொலி மூலம் நடைபெறும் முதல் பொதுச் சபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி முறையில் பங்கேற்கின்றனா்.
  • கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக, அவா்கள் நேரடியாக நியூயாா்க் வருவது தவிா்க்கப்பட்டுள்ளது. தலைவா்கள் முன்கூட்டியே பதிவு செய்த உரைகள், இந்த பொதுச் சபையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

MPக்களின் சம்பளம் 30% குறைவு

  • 2020ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் திருத்த மசோதா, மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆட்சேபனைகளை மீறி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • பிரதமர் (PM Narendra Modi) மற்றும் அவரது அமைச்சர்கள் குழு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2020-2021 நிதியாண்டிற்கான தங்கள் சம்பளத்தை 30% குறைத்து பெறுவார்கள்.மேலும், 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டி நிதியையும் நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • பல எம்.பி.க்கள் ஏற்கனவே தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியான, ஆண்டுக்கு ரூ. 5 கோடி என்ற அளவிலான, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக பயன்படுத்த உறுதி அளித்திருந்தனர்.

விமான சட்டத் திருத்த மசோதா

  • விதி மீறலுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் விமான சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • மேலும், விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மீவுளிர் விண்முகில் LSQ14 fmgன் வெடிப்பு

  • சமீபத்தில் ஒரு வழக்கமற்ற மீவுளிர் விண்முகில் வெடிப்பானது (supernova explosion) பூமியிலிருந்து நூறு மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உணரப்பட்டது.
  • இந்த வெடிக்கும் நட்சத்திரமானது LSC14fmg மீவுளிர் விண்முகில் வெடிப்பு என அழைக்கப் பட்டது. v
  • இது மிகவும் மெதுவாக ஒளிர்வானதாக மாறியது. இது இதற்கு முன்னர் எப்பொழுதும் நிகழ்ந்திராத வகையில் நிகழ்ந்த பிரகாசமான வெடிப்புகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.
  • இந்த வெடிக்கும் நட்சத்திரமானது டைப் 1a மீவுளிர் விண்முகில் எனப்படுகின்றது. அதிலும் குறிப்பாக "சூப்பர் சந்திரசேகர் குழுவின் உறுப்பினராகவும் இது கருதப் படுகின்றது.
  • டைப் Ia மீவுளிர் விண்முகிலானது இருண்ட ஆற்றல் எனப்படும் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான ஒன்றாக ஒரு முக்கியக் கூறாக விளங்குகின்றது. இருண்ட ஆற்றல் ஒரு அறியப்படாத ஆற்றலாக விளங்குகின்றது. இது தற்போதைய பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்குக் காரணமாக விளங்குகின்றது.

மாநில ஸ்டார்ட் அப் தரவரிசை 2019

  • குஜராத் மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவை மாநில ஸ்டார்ட் அப் தரவரிசை - 2019ல் சிறப்பான செயல்பாடு கொண்டவைகளாக பெயரிடப் பட்டுள்ளன.
  • கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் வணிகம் மற்றும் நிதியை ஈர்ப்பதற்காக வலுவான புத்தாக்கத் தொழில்முனைவுத் திறனில் முன்னிலையில் செயல்படும் மாநிலங்களாக உள்ளன.
  • ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், தமிழ்நாடு, அசாம், தில்லி, மத்தியப் பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை நாட்டில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சூழலமைப்பைக் கொண்ட மாநிலங்களாக உள்ளன. தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது இந்தத் தரவரிசையைத் தயாரித்துள்ளது.

தென் இந்தியாவின் முதலாவது கிசான் இரயில்

  • இந்தியாவின் 2வது மற்றும் தென் இந்தியாவின் முதலாவது கிசான் இரயிலானது அனந்தப்பூர் மற்றும் புது தில்லி ஆகியவற்றிற்கிடையேத் தொடங்கி வைக்கப் பட்டது.
  • இந்த இரயிலானது வேளாண் விளைபொருட்களை ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூரிலிருந்து புது தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் இரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்கின்றது.
  • முதலாவது கிசான் இரயில் சேவையானது ஆகஸ்ட் 07 அன்று மகாராஷ்டிராவில் உள்ள தேவ்வாலி மற்றும் பிகாரில் உள்ள தனப்பூர் ஆகியவற்றிற்கிடையே ஒரு வாராந்திர சேவையாகத் தொடங்கப்பட்டது. பின்னர் இது வாரத்திற்கு இருமுறை மேற்கொள்ளப்படும் சேவையாக மாற்றப்பட்டது.

Share with Friends