Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 8th September 2020


கண் தானம் இணைய தளம்

  • கண் தானம் செய்ய விரும்புவோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை, முதல்வர், இ.பி.எஸ்., துவக்கி வைத்து, கண்தானம் செய்தார்.
  • கண் தானம் செய்ய விரும்புவோர், யாரிடம் உறுதிமொழி கொடுப்பது, இறந்தபின் எவ்வாறு, எங்கு, எப்படி கண்களை தானமாக கொடுப்பது போன்ற விவரங்கள், தெரியாமல் உள்ளனர்.
  • இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழகத்தில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டை ஏற்படுத்தவும், www.hmis.tn.gov.in/eye-donor என்ற, புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
  • இந்த இணையதளத்தில், கண் தானம் செய்ய விரும்புவோர், தங்கள் பெயர், இருப்பிட முகவரி,மொபைல் போன் எண், 'இ -- மெயில்' முகவரிபோன்ற, தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதி மொழியை ஏற்க வேண்டும்.
  • அதற்கான சான்றிதழை, நேரடியாக இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழை பதிவு செய்யப்பட்ட, மின்னஞ்சல் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

அமெரிக்க தூதரக ஜூடித் ரேவின் நியமனம்

  • சென்னையில் இருக்கும் அமெரிக்க துணை தூதரகத்தின் அமெரிக்க தூதரக ஜெனரலாக ராபர்ட் ஜி புர்கேஸ் இருந்தார். இவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது தூதரக ஜெனரலாக ஜூடித் ரேவின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை

  • அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து மத்திய மருத்துவக் குழு ஆண்டுதோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அப்போது, மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.
  • விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய்ப் பிரிவு, நெஞ்சக நோய்ப் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சிசு பராமரிப்புப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவ அறுவைச் சிகிச்சை அரங்கம், கண் நோய்ப் பிரிவு, மருந்தகம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி, மருந்தகம் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • ஒவ்வொரு துறையின் செயல் பாடுகளையும் மதிப்பிட்டு மதிப் பெண்கள் வழங்கப்படும். 70 மதிப்பெண்கள் பெற்றால் அந்த மருத்துவமனைக்கு தேசியத் தர உறுதிச் சான்று
  • வழங்கப்படும்.
  • அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சை, கட்டமைப்பு வசதிகளை பாராட்டி மத்திய மருத்துவக் குழு 92 மதிப்பெண்களை வழங்கியுள் ளது.
  • இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தேசிய தர உறுதிச் சான்று இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

“இந்திரா நேவி 2.0”

  • “இந்திரா நேவி 2.0” (INDRA NAVY – 2.0) என்ற பெயரில், இந்தியா மற்றும் ரஷியா நாடுகளுக்கிடையேயான (இரு ஆண்டுகளுக்கொருமுறை (bi-annual) நடைபெறும்) கூட்டு கடற்படைப் பயிற்சி வங்காள விரிகுடாவில் 4-5 செப்டம்பர் 2020 தினங்களில் நடைபெற்றது.

KV Kamath Committee

  • கே.வி.காமத் குழுவின் (KV Kamath Committee) பரிந்துரையின் படி, கட்டுமானம், எஃகு உற்பத்தி, சாலைகள் அமைப்பு, மனை வணிகம், மொத்த வியாபாரம், ஜவுளி, ரசாயனம், நுகா்வுப் பொருள்கள், எஃகு அல்லாத உலோகங்கள், மருந்து உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, ஆபரண கற்கள் மற்றும் நகைகள், சிமெண்ட், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா, சுரங்கம், பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு, வாகன தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள், வாகன விநியோகஸ்தா்கள், விமானப் போக்குவரத்து, சா்க்கரை, துறைமுகம் மற்றும் அது சார்ந்த சேவைகள், கப்பல் போக்குவரத்து, கட்டட கட்டுமானத்துக்கான பொருள்கள், பெருநிறுவன சில்லறை விற்பனையகங்கள் உள்ளிட்ட 26 துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கே.வி.காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசா்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.
  • வங்கிக் கடன் பெற்ற நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை இறுதி செய்யும்போது அந்த நிறுவனத்தின் மொத்த நிலுவை கடன்கள், உறுதியாகத் தெரிந்த நிகர மதிப்பு, வரி- வட்டிக்கு முந்தைய வருவாய், விற்றுமுதல்-கடன் விகிதம் ஆகியவற்றை வங்கிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • 2020 மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, வாராக்கடனாக அறிவிக்கப்பட்டு 30 நாள்கள் கடந்திருக்காத கடன் கணக்குகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த கடன் மறுசீரமைப்புக்குத் தகுதியானவை.
  • ரூ.1,500 கோடிக்கும் அதிகமான கடன் மதிப்பு கொண்ட நிறுவனங்களுக்காக இந்தக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பீடு மேற்கொள்ளப்படாத துறைகள் சாா்ந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் தாங்களாகவே குறிப்பிட்ட மதிப்பீட்டை நிா்ணயித்துக்கொள்ளலாம்.
  • கடன் மறுசீரமைப்புத் திட்டமானது நடப்பாண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள்ளாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 180 நாள்களுக்குள்ளாக அது அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.
  • கரோனா சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்காக கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை அறிவிப்பது தொடா்பாக பரிந்துரைக்க முன்னாள் மூத்த வங்கியாளா் கே.வி.காமத் (KV Kamath) தலைமையிலான ஐந்து நபர் குழுவை ரிசா்வ் வங்கி ஆகஸ்டு 2020 ல் அமைத்தது. இதில் திவாகர் குப்தா (Diwakar Gupta), TN மனோகரன் (TN Manoharan), அஸ்வின் பாரேக் (Ashvin Parekh) மற்றும் சுனில் மேத்தா ( Sunil Mehta ) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு

  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு (International Solar Alliance (ISA)) முதலாவது உலக சோலார் தொழில்நுட்ப உச்சிமாநாடு (World Solar Technology Summit) 8-9-2020 ல் இணையவழியில் நடைபெறுகிறது.
  • 121 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில், பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டின் போது இந்தியாவினால் முன்மொழியப்பட்டு தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையிடம் ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) அமைந்துள்ளது.

“ஜி-20 கல்வி அமைச்சர்கள் இணையதள கூடுகையில்”

  • சவூதி அரேபியா நாட்டினால் 5-9-20020 அன்று நடத்தப்பட்ட “ஜி-20 கல்வி அமைச்சர்கள் இணையதள கூடுகையில்” ( G20 Education Ministers Meet ) இந்தியாவின் சார்பாக, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கலந்துகொண்டார். இந்த கூடுகைக்கு கு சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சர் டாக்டர் ஹமாத் அல்-ஆஷேக் தலைமை தாங்கினார்.

”ஹைசென் புயல்”

  • ”ஹைசென் புயல்” (Typhoon Haishen) என்கிற சக்தி வாய்ந்த புயல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் 7-9-2020 ல் ஜப்பானைத் தாக்கியுள்ளது. ஏற்கனவே ‘மேசக்‘ (Typhoon "Mesaq" ) என்ற சக்தி வாய்ந்த புயலும், ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளை 1-9-2020 அன்று கடுமையாக தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஹைபர்சோனிக்'

  • முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் தொழில்நுட்ப வாகனம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் `ஹைபர் சோனிக்' தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன வாகனங்கள் (எச்எஸ்டிடிவி) உள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் இந்த வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்த வாகனத்தை வெற்றிகரமாகத் தயாரித்தது.
  • ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து வாகனம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. காற்று அழுத்தத்துக்கு ஏற்ப விரைந்து செயல்படும் `ஸ்கிராேேம்ஜெட்' இன்ஜின் சக்தியுடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அக்னி ரக ஏவுகணை பூஸ்டர், ஹைபர்சோனிக் வாகனத்தை விண்ணில் 30 கி.மீ உயரத்துக்கு எடுத்துச் சென்றது. அதன்பிறகு, ஹைபர்சோனிக் வாகனம் அதில் இருந்து தனியாக பிரிந்தது. வாகனம் தனியாக பிரிந்தவுடன் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் உடனடியாக இயங்கியது.
  • வாகனம் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அணுஆயுதங்கள் மற்றும் அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் வாகனமாக இது செயல்படும்.

'விஐ'

  • வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இணைக்கப்பட்டு விட்டன. அதிலிருந்து, இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களின் நெட்வொக்குகளை ஒருங்கிணைப்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வந்தது.
  • இந்த நிலையில், தற்போது நிறுவனத்தின் வா்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நிறுவனத்தின் புதிய பிராண்ட் 'விஐ' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வோடாபோன்-ஐடியா ஆகிய இரு நிறுவனங்களின் முதல் எழுத்தைக் கொண்டு புதிய பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
  • தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பிராண்ட் உலகின் மிகப்பெரிய இரு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டதை குறிப்பது மட்டுமின்றி எதிா்கால பயண இலக்கையும் நிா்ணயிப்பதாக அமைந்துள்ளது.
  • நடப்பாண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 28 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

  • சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ஆசிரியம் கல்வெட்டுகளை சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
  • கல்வெட்டுகள் குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன. ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனி கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டவையாக உள்ளன.
  • சோழர், பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி ஊர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.
  • சோழர், பாண்டியர்களுக்கு பிறகு மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்திலும் ஆங்காங்கே படைகள் இருந்தன. ஆனால் அவர்கள் ஆட்சி நிலையற்று இருந்ததால் நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போனது.
  • இதையடுத்து அவரவர் தங்களது உயிர், உடமைகளை பாதுகாக்க படைகளை வைத்து கொண்டனர். படைவீரர்களுக்கு சில உரிமைகள், வருவாய்களை ஏற்படுத்திக் கொடுத்தனர். தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது.
  • முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர்.
  • பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளார் என்பதை காட்டுகிறது, என்று கூறினர்.

Share with Friends