இந்திக கால்பந்து சம்மேளனம் விருது 2020
- இந்திய கால்பந்து அணியில், இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்துவும், சிறந்த வீராங்கனைகான விருதுக்கு சஞ்சுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கால்பந்து இந்திக கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
- மேலும் இந்த பட்டியலில் வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருதுக்கு அனிருத் தபாவும், வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை விருதுக்கு ரதன்பாலா தேவியும் தேர்வாகி உள்ளனர். சிறந்த நடுவராக அஜித் குமாரும் (மணிப்பூர்), சிறந்த உதவி நடுவராக பி.வைரமுத்துவும் (தமிழ்நாடு) தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பருவநிலை தொடர்பான வட்ட மேஜை மாநாடு
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியா குட்டரஸ் தலைமையில், சர்வதேச பருவநிலை இலக்கு தொடர்பான வட்ட மேஜை மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
- இதில், இந்தியா சார்பில், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பங்கேற்று பேசியதாவது:அதிக மழையும், அதிக வெப்பமும், பீஹாரின் பருவநிலை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிலத்தடி நீர் குறைந்து வருகிறது.
- வெள்ளம், வறட்சி என, பல சவால்களை சந்திக்கும் நிலையில் பீஹார் உள்ளது.இதையொட்டி, 'ஜல் ஜீவன் ஹரியாளி அபியான்' என்ற திட்டத்தின் கீழ், நீராதார சேமிப்பு மற்றும் பசுமை பராமரிப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- வேளாண் சாகுபடியில் பருவநிலை மாற்றங்களை சமாளிக்கவும், நீர் மற்றும் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சூரிய மின் சக்தி, துாய்மையான எரிபொருள், பல்லுயிரி பாதுகாப்பு முறைகளால், பீஹார் ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது.
- இயற்கை வனப் பகுதிகள் தவிர்த்து, சமூக பங்களிப்புடன் மரக் கன்று நடும் திட்டங்களை பரவலாக்கி, பசுமை மாநிலமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உலக வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் இருக்க வேண்டும் என, ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இதை அடைவதற்கு, பசுமை திட்டங்கள் மூலம், கரியமில வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில், பீஹார், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
ஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு
- ஐ.என்.எஸ்., என்றழைக்கப்படும், 'இந்திய பத்திரிகைகள் சங்கத்தின்' புதிய தலைவராக, ஆதிமூலம் லட்சுமிபதி, ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
- அகில இந்திய அளவில், 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புதான் ஐ.என்.எஸ். என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம். இதன் 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது.
- இதில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளுக்குப்பின், தற்போதுதான் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரள சுகாதாரத் துறைக்கு முதல் முறையாக ஐநா விருது
- கேரள மாநிலம், தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் அது தொடர்பான இலக்குகளை நோக்கிய நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, சர்வதேச விருது பெற்றுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையின் UN Interagency Task Force (UNIATF) விருது, இந்த வருடம் கேரள மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.நா-வின் விருது, ஒரு நாட்டின் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- 2019-ம் ஆண்டில், தொற்றில்லா நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், மனநல சிகிச்சைக்குக் கொடுத்த முக்கியத்துவத்துக்காகவும் தொற்றில்லா நோய்களைச் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் நிறுவி அதில் வெற்றி பெற்றதற்காகவும் அந்த அமைச்சகங்களைக் கௌரவிக்க வழங்கப்படும் விருது, ஐ.நா-வின் இந்த விருது.
- கேரளா அரசு, ஐ.நா-வின் இந்த விருதைப் பெறுவது இதுதான் முதல்முறை. ஐ.நா அமைப்பு கேரள மாநிலத்தைத் தவிர உலகில் வேறு 6 அமைச்சகங்களுக்கும் இந்த விருதை வழங்கியுள்ளது.
- கேரளா அரசின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கும் மாநில நுரையீரல் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், புற்றுநோய் சிகிச்சைத் திட்டம் மற்றும் பக்கவாத நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
4வது உலக ஆயுர்வேத மாநாடு
- உலக ஆயுர்வேத மாநாட்டின் 4வது பதிப்பானது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் காணொலி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்த நிகழ்வின் கருத்துரு. -கொள்ளை நோய்த் தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதத்திற்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள் என்பதாகும்.
- இந்த மாநாட்டின் நோக்கம் ஆயுர்வேத நோய்த் தடுப்பு மாதிரியை “சுகாதாரம் என்பது ஒன்று மற்றும் -ஆயுர்வேதத்தின் மூலம் நோய்த் தடுப்பாற்றல்" என்று பெயரிடப் பட்ட ஒரு தீர்வாக உலக அளவில் எடுத்துக் காட்டுவதாகும்.
பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகள் குற விதிகள் : (CAROTAR - 2020)
- சுங்கம் (வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகளின் விதிகள் குறித்த நிர்வாகம்) விதிகள், 2020 ஆனது (CAROTAR - 2020) 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. . இது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்பட்டது.
- இது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA - Free trade agreements) கீழ் இறக்குமதிகள் குறித்த முன்னுரிமை விகிதங்களை அனுமதிப்பதற்காக “உற்பத்தியாகும் நாடுகளின் விதிகளின் அமலாக்கத்திற்கான வழிகாட்டுதல்களை நிர்ணயிக்கின்றது இந்தப் புதிய விதிகள், FTA-ன் கீழ் வரிச் சலுகைகளின் தவறான பயன்பாட்டிற்கான எந்தவொரு முயற்சிகளையும் ஆய்வு செய்யும் சுங்கங்களின் திறனை வலுப்படுத்த இருக்கின்றது.
- தற்பொழுது இறக்குமதியாளர் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகளின் தரநிலைமை பூர்த்தி செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு முன்பு அதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும்.
- இறக்குமதியாளர் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்சத் தகவல்கள் குறித்த ஒரு பட்டியலானது பொது வழிகாட்டுதலுடன் விதிகளில் கூறப்பட்டுள்ளது. இறக்குமதியாளர் தற்பொழுது உற்பத்தியாகும் நாடுகள் சான்றிதழில் உள்ளவாறு நுழைவுக் கட்டணத்தில் பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகள் குறித்த தரவைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
CAROTAR விதிகள்
i-ATS - தானியங்கி இரயில் கண்காண
- தில்லி மெட்ரோ இரயில் கழகமானது மெட்ரோவிற்காக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட தகவல் தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை தொழில்நுட்பமான "i-ATS" (Automatic Train Supervision) என்பதைத் தொடங்கி உள்ளது.
- i-ATS என்பது இரயில் இயக்கத்தை மேலாண்மை செய்யும் கணினி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். இந்த முறையானது சில குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் மெட்ரோ சேவைகள் போன்ற அதிக அடர்வான செயல்பாடுகளுக்கான தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகின்றது.
- உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட i-ATS தொழில்நுட்பமானது, இது போன்ற தொழில்நுட்பத்தைக் கையாளும் அயல்நாட்டு வணிகர்கள் மீது இந்திய மெட்ரோக்கள் சார்ந்து இருப்பதை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்.
- இது பல்வேறு விநியோகஸ்தர்களின் சமிக்ஞை அமைப்புகள் மற்றும் இரயில் கட்டுப்பாட்டு அமைப்புடன் பணியாற்ற இருக்கின்றது. . கூடுதலாக, இது இந்திய இரயில்வேயில் அறிமுகப்படுத்துதலுக்குப் பொருந்தும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்
- சமீபத்தில் 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் மோசமான முறையில் செயல்பட்டதற்காக அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை செய்யப் பட்டு உள்ளனர்.
- மாநிலங்களவையின் தலைவர் அந்த அவையின் விதிகள் புத்தகத்தின் விதி எண் 255 என்பதின் கீழ் தனது பார்வையில் எந்தவொரு உறுப்பினர் தவறாக நடந்து கொள்கிறாரோ அவரை அவை நடவடிக்கையிலிருந்து உடனடியாக வெளியேற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
- அந்த அவையானது அந்த அமர்வின் மீதமுள்ள காலத்திற்கு முழுவதும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவை நடவடிக்கையில் அந்த உறுப்பினர் பங்கேற்பதிலிருந்துத் தடை செய்வதற்கான தீர்மானத்தை (motion) ஏற்றுக் கொள்ளும். சபாநாயகரைப் போல் மாநிலங்களவையின் தலைவர் அவையின் உறுப்பினரைத் தடை செய்வதற்கான எந்தவொரு அதிகாரத்தையும் கொண்டிருக்க வில்லை. மாநிலங்களவையானது மற்றொரு தீர்மானத்தின் மூலம் அந்தத் தடையை நீக்கலாம்.