பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
- ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.
- ஒலியைக் காட்டிலும் மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் இந்த அதிநவீன ஏவுகணை, 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
- ஒடிஸாவின் பாலாசூா் கடற்கரையில் உள்ள ஒங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்றாா் அவா்.
- இந்தியாவும், ரஷியாவும் இணைந்து பிரமோஸ் ஏரோஸ்பேஸ் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம்தான் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது.
- முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்தும், கடலில் இருந்தும், விமானத்தில் இருந்தும், கடலுக்கு அடியில் இருந்தும் இலக்குகளை நோக்கி ஏவமுடியும்.
"கனக்லதா பாருவா"
- இந்திய கடலோர காவல்படையின் "கனக்லதா பாருவா" என்ற கப்பல் கொல்கத்தாவில் இயக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜிவேஷ் நந்தன் காணொளி காட்சி மூலம் இதை தொடங்கி வைத்தார்.
- இதன் சிறப்பம்சம், சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறனுள்ள ரோந்து கப்பலானது கடத்தல், மீட்பு நடவடிக்கைகளைச் மேற்கொள்ளவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன், முழு வடிவமைப்பும் இந்திய கடலோர காவல்படையால் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரிலையன்சில் ஜெனரல் அட்லான்டிக் முதலீடு
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின், 0.84 சதவீத பங்குகளை, 3,675 கோடி ரூபாய்க்கு, ஜெனரல் அட்லான்டிக் வாங்க உள்ளது.
- ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், இது மூன்றாவது தனியார் பங்கு நிறுவன முதலீடாகும். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த, சில்வர் லேக், 1.75 சதவீத பங்குகளை, 7,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
- அடுத்து, கே.கே.ஆர்., நிறுவனம், 1.28 சதவீத பங்குகளை, 5,550 கோடி ரூபாய்க்கு வாங்கியது.ஜெனரல் அட்லான்டிக் இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்மில், 6,598 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.