சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தீம்
- ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெவேரை எதிர்த்து ஆடிய டொமினிக் முதல் இரண்டு செட்களையும் 4-6, 2-6 என இழந்தார்.
- மூன்றாவது செட்டில் உத்வேகம் பெற்ற டொமினிக் 6-6, 6-3, 7-6 என தொடர்ந்து புள்ளிகளை அள்ளி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றுள்ளார்.
- இந்த போட்டி மொத்தமாக 4 மணி நேரம் நடைபெற்றது. முன்னதாக காலிறுதியில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் பந்தை நடுவரை நோக்கி அடித்தமைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
- ரோஜர் ஃபெடரர் மாற்றம் நடால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒசாகா
- இறுதிப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் (31 வயது, 27வது ரேங்க்) மோதிய நவோமி ஒசாகா (22 வயது, 9வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.
- இரண்டாவது செட்டிலும் அசரென்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் அதை 3-0 ஆக அதிகரிக்க கேம் பாயின்ட் சர்வீஸ் போட்ட நிலையில், அவர் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
- எனினும், பதற்றமின்றி விளையாடிய ஒசாகா தனது வியூகங்களை மாற்றி அசரென்காவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
- ஒசாகாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசரென்கா திணற, தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்த ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 1 மணி, 53 நிமிடம் போராடி வென்று 2வது முறையாக யுஎஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- முன்னதாக, 2018ல் அவர் இங்கு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது அவரது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவர் தனது 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலித்துறை முக்கிய திட்டங்கள்
- பெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்டங்கள் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்
- இந்த திட்டங்களில் துர்காபூர்-பாங்கா பிரிவு உட்பட பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் ஆலைகளும் அடங்கும்.
- இவற்றை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்கள் அமைக்கின்றன.இந்நிகழ்ச்சியில் பிஹார் முதல்வரும் கலந்து கொண்டார்.
- பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 193 கி.மீ தூரத்துக்கு தூர்காபூர் பாங்கா பைப்லைன் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ளது. இத்திட்டத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
- பீகாரில் அதிகரித்து வரும் எல்பிஜி சிலிண்டர் தேவையை, பாங்காவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி சிலிண்டர் ஆலை நிறைவேற்றும். இந்த ஆலை ரூ.131.75 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சிலிண்டர்களில் கேஸ் நிரப்ப முடியும். இந்த ஆலை மூலம் பீகாரில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு ஏற்படும்.
- பிஹாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில், ரூ.136.4 கோடி மதிப்பீட்டில் இந்த எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையை எச்பிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது. இதற்கு பிரதமர் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பல மாவட்டங்களின் எல்பிஜி சிலிண்டர் தேவைகளை இந்த ஆலை நிறைவேற்றும்.
ஆத்மநிர்பர் பாரத் அரைஸ் (ARISE) - அடல் புதிய இந்தியா சவால்கள்
- இந்தத் திட்டமானது இந்திய எம்எஸ்எம்இ மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஏற்படுத்த முயலுகின்றது.
- இந்த முன்னெப்பானது எம்எஸ்எம்இ சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான புத்தாக்கங்களை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்த உதவவுள்ளது.
- இந்தத் திட்டமானது பின்வரும் 4 அமைச்சகங்கள் மற்றும் இஸ்ரோவினால் செயல்படுத்தப்படவுள்ளது. அவையாவன:
- மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்
- மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
- மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா
- பிரதமர் டிஜிட்டல் முறையில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா மற்றும் இ-கோபாலா செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார்.
- பிகாரில் சீதாமாரியில் மீன் அடைகாக்கும் வங்கி, கிஷன்கஞ்சில் நீர்வாழ்வு நோய்கள் பரிந்துரை ஆய்வகம் (Aquaris Disease Refemali) ஆகியவற்றை நிறுவுவதையும் அவர் அறிவித்தார்.
- இந்தியாவில் மீன்வளத்தின் நிலையான வளர்ச்சி.
- 2024-25 ஆண்டு வாக்கில் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன்னாக உயர்த்துதல்.
- மீன்வளத் துறையில் மீன்பிடித்தலுக்குப் பிந்தைய இழப்புகளை 10% ஆகக் குறைத்தல்
- இது மீன்வளர்ப்போரின் நேரடி பயன்பாட்டிற்கான இன மேம்பாட்டுச் சந்தை மற்றும் தகவல் தளம் போன்றவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இது மீன் வளர்ப்போர் கால்நடைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க உதவும்.
- இந்தச் செயலியின் மூலம் அவர்கள் நோய் இல்லாத ஜெர்ம் பிளாசத்தை (germplasm - முளைமக் கூழ்) வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
- மேலும், கால்நடைகளுக்கான முதலுதவி, செயற்கைக் கருவூட்டல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றிற்கான தரமான இனப்பெருக்கச் சேவைகள் கிடைக்குமா என்பதையும் இவர்கள் அறியலாம்.
நோக்கங்கள்
இ-கோபாலா செயலி
"TOPலிருந்து TOTAL"
- ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளும் "பசுமை நடவடிக்கையின் TOPலிருந்து TOTAL" என்ற திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட உள்ளன.
- இந்த நடவடிக்கையானது பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டமானது தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிலிருந்து (TOP - Tomato, Orion and Potato) அடுத்த 5 மாதக் காலத்திற்கு அனைத்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
- மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகமானது இந்தத் திட்டத்தின் கீழ் போக்குவரத்துச் செலவினத்திற்கான 50% தொகையை மானியமாக அளிக்க உள்ளது.
- பசுமை நடவடிக்கையானது வெண்மைப் புரட்சி என்பதின் வரிசையில் 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
- இது மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தைத் தளத்தின் மூலம் விவசாயிகளை நுகர்வோருடன் இணைப்பதன் மூலம் TOP வகை காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதின் மீது கவனம் செலுத்துகின்றது.
தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர்
- குஜராத்தில் உள்ள ஆயுர்வேத நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்குவதற்கான, ஆயுர்வேத நிறுவன மசோதா, ராஜ்யசபாவில் செய்யப்பட்டது.
- குஜராத்தில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதுகலை ஆயுர்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆயுர்வேத மஹாவித்யாலயா, ஆயுர்வேத மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றை ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒன்றிணைக்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது.
- அந்த நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்கவும், மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா கடந்த மார்ச் மாதம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.