Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 27th September 2020


வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

  • பார்லிமென்டில், மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன.
  • 'விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கு, இந்த மசோதா வழி வகுக்கும்' என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
  • இந்த மசோதாக்கள், பார்லிமென்ட் விதிமுறைகளை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி, இவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
  • இந்த மசோதாக்களை எதிர்த்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து, பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளம் கட்சி விலகியது.
  • இந்நிலையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்த மசோதாக்களுக்கும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் அளித்தார்.
  • இதையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளன.

சர்வதேச 20 ஓவர் போட்டி - விக்கெட் கீப்பர்

  • ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே இவ்விரு ஆட்டங்களிலும் சேர்த்து 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் அவரின் விக்கெட் எண்ணிக்கை 92 ஆக (114 ஆட்டத்தில் 42 கேட்ச், 50 ஸ்டம்பிங்) உயர்ந்தது.
  • இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் தோனி விக்கெட் கீப்பிங்கில் 91 பேரை (98 ஆட்டத்தில் 57 கேட்ச் மற்றும் 34 ஸ்டம்பிங்) ஆட்டம் இழக்கச் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

  • ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே ஆங்கிலமும், உருதுவும் அலுவல் மொழிகளாக உள்ளன. தற்போது, மேலும் 3 மொழிகள் அலுவல்கள் மொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு உரிமை குறித்த கொள்கை

  • இந்திய உச்ச நீதிமன்றமானது எதிர்ப்பு உரிமை மற்றும் சாத்தியமான தடைகள் ஆகியவை “நாடு தழுவிய கொள்கை" கிடையாது என்றும் அவை சூழ்நிலையைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் வேறுபாடும் என்றும் கூறியுள்ளது.
  • நீதியரசர் எஸ்கே கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோரைக் கொண்ட அமர்வானது டிசம்பரில் நடைபெற்ற சிஏஏ-விற்கு எதிரான போராட்டங்கள் குறித்த மனுக்களை விசாரிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளது.
  • இந்த அமர்வு, எதிர்ப்பு உரிமையானது ஒன்று கூடும் உரிமை போன்ற இதர பொது உரிமைகளுக்கு எதிராக சமநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

“கிரிட்டக்யா” ஹேக்கத்தான்

  • "KRITAGYA" (கிரிட்டாக்யா) ஹேக்கத்தான் ஆனது தேசிய வேளாண் உயர் கல்வித் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி ஆணையத்தினால் திட்டமிடப் பட்டு உள்ளது.
  • இது பெண்களுக்கு உகந்த கூறுகளுடன் சிறப்புக் கவனம் செலுத்துவதுடன் வேளாண் நடைமுறையை மேம்படுத்துவதற்கான சாத்தியமான தொழில்நுட்பத் தீர்வுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2020

  • இந்த மசோதாவானது நிறுவனங்கள் சட்டம், 2013 என்ற சட்டத்தைத் திருத்தக் கோருகின்றது.
  • இது தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் மீதான சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மசோதாவானது சில பிரிவுகளைச் சேர்ந்த பொது நிறுவனங்களின் அயல்நாட்டு அதிகார வரம்புகளில் சில பிரிவுகளைச் சேர்ந்த பங்குகளைப் பட்டியலிடுவதற்கு மத்திய அரசிற்கு அதிகாரம் வழங்குகின்றது.
  • இந்த மசோதாவானது ரூ.50 இலட்சம் வரை சிஎஸ்ஆர் பொறுப்புடைமை (சமூக நிறுவனப் பொறுப்புடைமை) உள்ள நிறுவனங்களுக்கு சிஎஸ்.ஆர் குழுக்களை அமைப்பதிலிருந்து ஒரு ஆண்டுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த மசோதாவானது குற்றங்களில் 3 மாற்றங்களைச் செய்துள்ளது.
  • சில குற்றங்களுக்கான தண்டனையை நீக்கியுள்ளது.
  • சில குற்றங்களுக்கான சிறைத் தண்டனையை நீக்கியுள்ளது.
  • சில குற்றங்களில் செலுத்தப்பட வேண்டிய அபராதத் தொகையைக் குறைத்து உள்ளது.
  • மேலும் இது, அறநெறியில் தொழில் தொடங்குதல் மற்றும் நேர்மையான முறையில் தொழில் தொடங்குதலை ஊக்குவிக்கும் பல்வேறு குற்றங்களைக் குற்றமற்றதாக ஆக்கியுள்ளது.

உலகின் முதலாவது வணிக ரீதியிலான விமானம்

  • ஹைட்ரஜன் விமானமானது ஏர் பஸ்ஸினால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளது.
  • இது முதலாவது வணிக ரீதியிலான ஹைட்ரஜனால் செயல்படுத்தப்படும் விமானமாகும்.
  • ஏர்பஸ் ஆனது "ZERON' என்ற குறியீட்டுப் பெயரின் கீழ், சுழிய உமிழ்வுகளுக்கான 3 கருத்தாக்கங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • டர்போபான் வடிவமைப்பு (Turbcfan aesign) - 120 முதல் 200 பயணிகள் அமரும் வகையில் 0 கலப்பு இறக்கை பாக வடிவமைப்பு (Eiented wing body design)- 200 பயணிகள் அமரும் வகையில் 0 டர்போபிராப் வடிவமைப்பு (Turboprop design) - 200 பயணிகளுக்கு மேல் அமரும் வகையில் .
  • இந்த விமானங்கள் 2035 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும். இதற்கு முன்பு, ரஷ்யத் தயாரிப்பு நிறுவனமான டுபோலேவ் ஆனது TL-154" எனப்படும் விமானத்தின் முன்மாதிரியைக் கட்டமைத்துள்ளது. திரவ நைட்ரஜனில் செயல்படும் முதலாவது சோதனை விமானம் அதுவாகும்.

அபயாஸ் - HEAT சோதனை

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation) பாலசோரில் (ஒடிசா) அபயாஸ் - HEAT வகை விமானத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  • HEAT என்ற சொற்றொடரானது அதிவேக விரிவாக்கமடையும் வான்வழி இலக்கு (High-speed Expendable Aerial Target) என்பதைக் குறிக்கின்றது.
  • இது DRDOன் வான்வெளித் தொலை அளவு வளர்ச்சி அமைப்பினால் வடிவமைக்கப் பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.

  • சிறப்பம்சங்கள்

  • இது பல்வேறு ஏவுகணை அமைப்புகளுக்கு இலக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு ஆளில்லா குட்டி விமானமாகும்.
  • இது ஒரு சிறிய வாயு டர்பைன் என்ஜினால் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது நுண் - மின்பொறிமுறை அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு அடிப்படையிலான ஒரு கண்காணிப்பு அமைப்பாகும்.
  • இது குறைந்த அளவு மின்சாரத்தை உட்கொள்ளும் மற்றும் குறைந்த செலவு கொண்ட இலகுரக, நம்பகத் தக்க சாதனமாகும்.
  • இது முழுவதும் தானியங்கும் வகை விமானமாக நிரலாக்கப் பட்டுள்ளது.

Share with Friends