ஹையாங்2சி
- ஹையாங்2சி’ என்ற பெயரிலான சீனாவின் கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ‘லாங் மார்ச் 4பி’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது சீனா விண்ணுக்கு அனுப்பிய 3-வது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
உலக காண்டாமிருக தினம்
- உலக காண்டாமிருக தினம் (World Rhino Day ) - செப்டம்பர் 22
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா
- தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா 2020 ( National Forensic Sciences University Bill 2020) மாநிலங்களவையில் 22-9-2020 அன்று நிறைவேறியுள்ளது.
- இதன்மூலம்,குஜராத் தடய அறிவியல் அறிவியல் பல்கலைக்கழகம், காந்திநகர் மற்றும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம், புது தில்லி ஆகியவைதேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா
- ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 (Rashtriya Raksha University Bill 2020) 22-9-2020 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது.இந்த மசோதா குஜராத்தின் ரக்ஷ சக்தி பல்கலைக்கழகத்தை (Raksha Shakti University, Gujarat) ராஷ்டிரிய ராக்ஷா பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University) என்று அழைக்கப்படும் .
- பல்கலைக்கழகமாக நிறுவுகிறது.இந்த மசோதா பல்கலைக்கழகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கிறது. இந்த மசோதா 2009 சட்டத்தையும் ரத்து செய்கிறது.
ABHYAS- High speed Expendable Aerial Target (HEAT)
- அபியாஸ்- அதிவேக செலவின வான்வழி இலக்கு (ABHYAS- High speed Expendable Aerial Target (HEAT)) வாகனத்தின் வெற்றிகரமான சோதனை செப்டம்பர் 22, 2020 அன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் சோதனை தளத்தில் நடத்தப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தினால் (DRDO) தயாரிக்கப்பட்டுள்ள ஏவுகணைகளை மதிப்பீடு செய்வதற்கான இலக்காக பயன்படுத்தப்படலாம்.
2100 ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம்
- 2100 ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா ஆய்வில் தெரிய வந்துள்ளது.பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை வைத்தே இதனை கணக்கிட்டுள்ளனர்.
20000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மனிதர்களின் கால்தடங்கள்
- 20000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மனிதர்களின் கால்தடங்கள் சவுதி அரேபியாவின் நெபுட் பாலைவனத்தில் உள்ள அலதர் என்ற ஒரு பழங்கால ஏரியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.<
வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா 2020
- ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா 2020 ( Banking Regulation (Amendment) Bill, 2020) 22-9-2020 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது ( மக்களவையில் செப்டம்பர் 16-ந் தேதி நிறைவேறியது).
கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா 2020
- கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா 2020 22-9-2020 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது(செப்டம்பர் 19-ந் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது) .
- இதன் மூலம் கம்பெனிகள் சட்டத்தின் 48 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களை குற்றப்பட்டியலில் இருந்து விடுவிப்பதற்கும், சில குற்றங்களுக்கான அபராதத்தை குறைப்பதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவன சட்ட திருத்த மசோதா 2020
- ( Indian Institutes of Information Technology Laws (Amendment) Bill, 2020) - 22-9-2020 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா, ரெய்ச்சூர் ஆகிய ஊர்களில் தனியார்- பொது கூட்டில் அமைக்கப்பட்ட இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை (ஐ.ஐ.ஐ.டி.) தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க இம்மசோதா வழி வகுக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மசோதா 2020
- 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா 2020 (Essential Commodities (Amendment) Bill, 2020) 22-9-2020 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது (செப்டம்பர் 15-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது).
- இதன்படி,தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்க இம்மசோதா வகை செய்கிறது. மேலும், பொருட்களை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் முறையும் நீக்கப்படுகிறது.
"Voices of Dissent”
- "Voices of Dissent” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ரொமிலா தாபர் ( Romila Thapar )