தொழிலாளர் சட்டச் சீர்திருத்த மசோதா
- தொழிலாளர் சட்டம் தொடர்பான பின்வரும் மூன்று மசோதாக்களைத் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
- தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த விதிமுறை,
- தொழில்துறை உறவுகள் விதிமுறை மற்றும்
- சமூகப் பாதுகாப்பு விதிமுறை
- இது தொழிற்சங்கங்கள், தொழில்துறை அமைப்புகளில் வேலைவாய்ப்பு நிலைமைகள் அல்லது தொழில்துறை முரண்களை விசாரணை செய்தல் மற்றும் அவற்றைத் தீர்த்து வைத்தல் தொடர்பான சட்டங்களைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் நான்கு பரந்த குறியீடுகளாக குறியிடப்பட்டுள்ளன (ஊதியங்கள் குறித்த முதல் குறியீடு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது),
- இது வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குகிறது மற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்குமான ஒரு சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது.
உலக நதிகள் தினம் - செப்டம்பர் 27
- உலக நதிகள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறன்று அனுசரிக்கப்படுகின்றது.
- இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நீர்வழிகள் மற்றும் நதிகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- ஐக்கிய நாடுகள் 2005 ஆம் ஆண்டில் “பத்தாண்டு வாழ்க்கைக்கான நீர்" என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
- முதலாவது உலக நீர் தினமானது 2005 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
கோவிட் - 19 தொற்றால் இறந்த முதல் மத் அமைச்சர்
- கோவிட் - 19 தொற்று உறுதியான நிலையில் மத்திய இரயில்வே இணை அமைச்சரும் கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் அங்காடி (55) அவர்கள் காலமானார்.
- கொரோனா தீநுண்மியால் இறந்த முதல் மத்திய அமைச்சர் இவராவார். * இவர் பெலகாவி தொகுதியில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினரானவர் ஆவார்.
- கன்னியாகுமரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எச். வசந்த குமார் அவர்கள் கோவிட் - 19 தொற்றால் இறந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
- எனவே 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடைத்தேர்தலைக் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காணவிருக்கிறது.
- முன்னதாக, 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இத்தொகுதி இடைத்தேர்தலைக் கண்டது. இந்தத் தேர்தல் முன்னாள் முதல்வர் கே.காமராஜர் அவர்களின் அரசியல் வருகையைக் குறித்தது.
72வது பிரைம்டைம் எம்மி விருதுகள்
- இந்த விருதானது தொலைக்காட்சி மற்றும் வளர்ந்து வரும் ஊடகத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கின்றது. புகழ்பெற்ற சிட்காம் சிச்சட்ஸ்ஸின் கிரீக் (Eitcom Schitt: Creek) என்ற தொடரானது நகைச்சுவைத் தொடருக்காக ஒரே தொடரில் மிக அதிகமான விருதுகளை வென்று உள்ளது.
- இவர் நகைச்சுவைப் பிரிவில் 7 பிரைம்டைம் விருதுகளையும் 9 எம்மிஸ் விருதுகளையும் வென்றுள்ளார்.
- பூபோரியாவில் சென்டாயா என்பவர் நாடகத் தொடர் பிரிவில் சிறந்த முன்னிலை நடிகைக்கான இளம் வயது விருது பெறுபவராக உருவெடுத்துள்ளார்.
- சிறந்த நடிகர் - நாடகம் - ஜெரிமீ ஸ்டராங் (Succession)
- சிறந்த நடிகை - நாடகம் - சென்டாயா (Euphoria)
- சிறந்த நடிகர் - நகைச்சுவை - யூஜூன் லெவி (Schi': Creek)
- சிறந்த நடிகை - நகைச்சுவை - மேத்தரீன் ஓ ஹாரா (Schit's Creek)
- சிறந்த நடிகர் - குறைந்தபட்சத் தொடர் அல்லது திரைப்படம் - மார்க் ரூபாலோ (I Know This Much Is Trus)
- சிறந்த நடிகை - குறைந்தபட்சத் தொடர் அல்லது திரைப்படம் - ரெஜினா சிங் (Watchmen)
இதர வெற்றியாளர்கள்
ஐஜி நோபல் பரிசு 2020
- நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான 2020 ஆம் ஆண்டின் ஐஜி நோபல் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
- கோவிட் - 19 நோய்த் தொற்றைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களை விட அரசியல் தலைவர்களே இறப்பு மற்றும் வாழ்க்கை மீதான உடனடித் தாக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று உலகிற்குக் காண்பிப்பதற்காக இந்தப் புகழ்பெற்ற விருதினை அவர் பெற்றுள்ளார்.
- பிரதமர் மோடி அவர்கள் பிரேசிலின் ஜெயிர் போல்சனரோ, ஐக்கிய இராஜ்ஜியத்தின் போரிஸ் ஜான்சன், மெக்சிகோவின் ஆண்டிரிஸ் மானுவேல் லோப்பெஸ் ஒப்ரடோர், பெலாரஸின் அலெக்சாந்தர் லூகாசென்கோ, அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப், துருக்கியின் ரெசப் தயிப் எர்டோகன், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் துர்க்மெனிஸ்தானின் குர்பாங்குலி பெர்டிமுகாமெடோ ஆகியோருடன் விருதைப் பகிர்ந்துள்ளார்.
- இதனைத் தவிர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் கூட்டாக 2020 ஆம் ஆண்டின் ஐஜி நோபல் அமைதிப் பரிசை வென்றுள்ளன.
- இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட 2வது இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
- இதற்கு முன் இந்த விருதானது 1998 ஆம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- இது பாகிஸ்தானின் அப்போதைய பிரதமரான நவாஸ் செரிப்புடன் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
கொள்ளை நோய்கள் (திருத்தம்) மசோத
- 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இந்திய நாடாளுமன்றமானது சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்ளை நோய்கள் (திருத்தம்) மசோதா, 2020 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
- இந்த மசோதாவானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று மாநிலங்களவையினால் நிறைவேற்றப் பட்டுள்ளது.
- இந்த மசோதாவானது கொள்ளை நோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இது போன்ற நோய்களின் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசின் அதிகாரங்களை விரிவு செய்வதற்காகவும் கொள்ளை நோய்கள் சட்டம். 1897 என்ற சட்டத்தைத் திருத்துகின்றது.
- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தொற்று நோய்கள் (திருத்தம்) அவசரச் சட்டத்தை நீக்குகின்றது.
- இந்தச் சட்டமானது சுகாதார நலப் பணியாளர்களின் வாழ்விற்கு இழப்பு ஏற்படுத்துதல், தீங்கு விளைவித்தல், அபாயகரமான முறையில் நடந்து கொள்தல், புண்படுத்துதல் ஆகியவற்றை நடவடிக்கை எடுக்கத் தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாததான ஒரு குற்றமாக ஆக்குகின்றது.
- மேலும் இந்த மசோதாவானது 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையையும் ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரையிலான அபராதம் விதிக்கப் படுவதற்கான அம்சத்தையும் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்