Start-Up Village Entrepreneurship Programme (SVEP)
- தொழில் தொடங்குவதற்கான கிராம தொழில்முனைவோர் திட்டம் (Start-Up Village Entrepreneurship Programme (SVEP))
- 2016 ஆம் ஆண்டு முதல், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின், தீனதயாள் அந்தியோகியா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதரார திட்டத்தின் (Deendayal Antyodaya Yojana –National Rural Livelihoods Mission (DAY-NRLM)) கீழ் துணைத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
US-India Strategic Partnership Forum (USISPF)
- அமெரிக்கா - இந்திய மூலோபாய கூட்டு மன்றத்தின் (US-India Strategic Partnership Forum (USISPF)) மூன்றாவது வருடாந்திர கூடுகை, 31-8-2020 முதல் 3-9-2020 வரையிலான 5 நாட்கள் இணைய வழியில், “அமெரிக்கா-இந்தியா புதிய சவால்களை வழிநடத்துகின்றன” (“US-India Navigating New Challenges”) எனும் மையக்கருத்தில் நடைபெற்றது.
- இக்க்கூடுகையில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஓமன் நாட்டு பொதுப் பணித்துறையில் அதிகளவு இந்தியர்கள்
- ஓமன் நாட்டு பொதுப் பணித்துறையில் உள்ள வெளிநாட்டினர்களில் அதிகளவு இந்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓமானின் மாநில புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் தேசிய மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஓமன் அரசாங்கப் பணியில் உள்ள 2,29,386 பேரில் 34,000 பேர் வெளிநாட்டினர்கள் உள்ளனர்.அதில், அதிகபட்சமாக 12,453 இந்தியர்கள், 9,631 எகிப்தியர்கள், 1,325 பாகிஸ்தானியர்கள் ஆகிய நாட்டினர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
8 பெண்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்
- குவைத் நாட்டில் முதல்முறையாக 8 பெண்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
4 நாடுகளில் பஞ்ச அபாயம
- போரால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ, யேமன், வடகிழக்கு நைஜீரியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகளவை எச்சரித்துள்ளது.
சர்வதேச அறக்கொடை தினம்
- சர்வதேச அறக்கொடை தினம் ( International Day of Charity) - செப்டம்பர் 5 ( 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கபப்டுகிறது.)
International Day of Clean Air for blue skies
- முதலாவது, சர்வதேச நீல வானத்திற்கான தூய காற்று தினம் (International Day of Clean Air for blue skies ) - செப்டம்பர் 7
Society of Indian Automobile Manufacturers(SIAM)
- ’இந்திய ஆட்டோம்மொபைல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்’ (Society of Indian Automobile Manufacturers(SIAM)) தலைவராக மாருதி சுசுகி இந்தியா (Maruti Suzuki India Ltd) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் கெனிசி ஆயுகாவா (Kenichi Ayukawa) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)
- பூமியில் அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்குவதற்கான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான, ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் 60 ஸ்டார்ட்லிங்க் செயற்கைக்கோள்கள் 3-9-2020 அன்று ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
Reusable Experimental Spacecraft
- மறுபயன்பாட்டுக்குரிய சோதனை விண்கலத்தை (Reusable Experimental Spacecraft) சீனா செப்டம்பர் 4, 2020 அன்று லாங் மார்ச் -2 எஃப் கேரியர் ராக்கெட்டில் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் அமெரிக்கா அறிமுகப்படுத்திய எக்ஸ் -37 பி (X-37B ) போன்றது. இந்த விண்கலம் ஒரு விண்வெளியில் சுற்றுப்பாதையில் செயல்பட்ட பின்னர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“The Little Book of Green Nudges”
- உலகமெங்கும் மாணவர்களிடையே சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “The Little Book of Green Nudges” என்ற புத்தகத்தை ஐ.நா. சுற்றுசூழல் திட்டம் (UN Environment Programme (UNEP)) வெளியிட்டுள்ளது.