Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 September 2020 26th September 2020


சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகர் நியமனம்

  • ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஹேக்கில் உள்ளது.
  • இந்த நீதிமன்றத்தில் சர்வதேச சட்ட விதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் 5 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று செயல்படுகிறது.
  • சர்வதேச சட்டம் படித்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு இயங்கும் இந்த ஐவர் குழுவின் ஆலோசனைப்படிதான் சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
  • இந்த ஆலோசனைக் குழுவில் முதல் முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஐவரில் மிகவும் இளையவரான ஹரிஹரா அருண் சோமசங்கர், தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். சர்வதேச சட்டம் படித்தவர்.
  • சர்வதேச வழக்கறிஞரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வாதத் திறமையால் பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்டமைக்காக நீதியரசர்களால் பாராட்டப்பட்ட இவர், சாகித்ய அகாடமி விருதுபெற்ற மீ.ப.சோமசுந்தரத்தின் மகள் வழி பேரன் ஆவார். இவர் சர்வதேச நீதிமன்ற ஆலோசகர் பொறுப்பில் இன்னும் 2 ஆண்டுகள் இருப்பார்.

இந்தியா இலங்கை உச்சி மாநாடு

  • இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான காணொளி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார். அதில், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
  • இலங்கை இந்தியா இடையிலான புத்தமத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்திய மதிப்பில் 110 கோடி மானியம் வழக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியாவில் வசதிகள் செய்யப்படும்.
  • அதற்காக உத்தரபிரதேசத்தின் குஷி நகரில் இருந்து விமானம் இயக்கப்படும்.
  • கரோனா தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க, இந்தியா 400 மில்லியன் டாலர் பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது. தற்போதைய கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் காணொளி உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது.
  • சில பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை தற்காலிக தடை விதித்துள்ளது. அதற்கு விரைவில் தளர்வுகள் வழங்கப்படும்.
  • மேலும், இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்தை திறக்க, வரும்படி பிரதமர் மோடிக்கு, இலங்கை பிரதமர் ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.

அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

  • அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கிளைப்பிரிவை மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கிவைத்துள்ளார்.
  • அசாமில் புதிதாக வேளாண்மைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு துவங்கியதன் மூலம் அருணாசல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்படும்.
  • 2050-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு அதிகரிக்கும். இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையிலும், உணவுப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்திலும் அரசு செயல்பட்டு வருகிறது.
  • இந்தியா விளைச்சல் மற்றும் உற்பத்தியில் தற்போது தன்னிறைவு அடைந்த நாடாக மட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் வளர்ந்துள்ளது. வளர்ச்சி நோக்கிய செயல்முறைக்கும், முடிவுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும்பொருட்டு ஜார்கண்ட் மற்றும் அசாமில் புதிய வேளாண் ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியா & டென்மார்க்

  • இந்தியா மற்றும் டென்மார்க் இடையே அறிவுசார் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது.
  • கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மத்திய அமைச்சரவை, அறிவுசார் சொத்து (ஐபி) ஒத்துழைப்புத் துறையில் டென்மார்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளித்தது.
  • இதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக அமைப்புடன் அறிவுசார் ஒத்துழைப்பு துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சனிக்கிழமை கையெழுத்திட்டது.
  • கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மோகபத்ரா மற்றும் டென்மார்க்கின் தூதர் ஃப்ரெடி ஸ்வானே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • இரு நாடுகளின் வணிகங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களிடையேயான சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில் அறிவுசார் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் பயிற்சித் திட்டங்கள், நிபுணர்களின் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலி கடற்படைப் பயிற்சி

  • இந்தியக் கடற்படையானது கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராயல் ஆஸ்திரேலியக் கடற்படையுடன் ஒரு தொடர் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தக் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த எச்எம்ஏஎஸ் ஹோபார்ட் மற்றும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான சஹாயத்ரி மற்றும் கர்முக் ஆகியவை பங்கு பெறவுள்ளன.
  • இந்தத் தொடர் பயிற்சியானது இரு நாடுகளிலும் இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்துதல், புரிந்துணர்வை மேம்படுத்தல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியக் கடற்படையால் நடத்தப்படும் 4வது பயிற்சி இதுவாகும்.

2020 ஆம் ஆண்டில் டைம்ஸின் 100 மிகவு சக்திமிக்க மனிதர்களின் பட்டியல்

  • டைம் பத்திரிக்கையானது இந்த ஆண்டில் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய 100 முன்னோடிகள், தலைவர்கள், முன்னிலையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பெருந்தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சாஹீன் பாஹ் போராட்டத்தில் மக்கள் முகமாக உருவெடுத்த பில்கிஸ், நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா ஆவார்.
  • கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மற்றும் மருத்துவ நுண் உயிரியல் பேராசிரியரான ரவீந்திர குப்தா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Share with Friends