14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு
- கொரோனா காலத்தில், மாநிலங்களின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.
- இந்நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு, 335.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- இந்த, 14 மாநிலங்களில், அதிகபட்சமாக கேரளாவுக்கு, 1,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் வகையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மினி' பஞ்சசீலம் கொள்கை
- காஷ்மீரின் லடாக் பகுதியில், சமீப காலமாக சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், ஜூனில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டபோது, இந்திய வீரர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
- அப்போது சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு நடந்தது. இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, பதற்றம் தணிந்தது.
- இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் சீன ராணுவம், மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதால், எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன், எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து பேச்சு நடத்தினார்.
- நீண்ட நேரம் நடந்த பேச்சின் முடிவில், எல்லையில் பதற்றத்தை தணிக்க, இரு தரப்புக்கும் இடையே ஐந்து அம்ச திட்டத்தை பின்பற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- தற்போது எல்லையில் நிலவும் சூழல், இரு நாடுகளுக்கும் ஏற்றதாக இல்லை. இதன் காரணமாக, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.
- எல்லை பகுதியில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை, பெரிய விவகாரமாக்கி சர்ச்சையை ஏற்படுத்தும் சூழலை, இரு தரப்பும் உருவாக்கக் கூடாது.
- ஏற்கனவே, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சின் அடிப்படையில், பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காணும் நடவடிக்கைகளை தொடர வேண்டும்.
- இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி, எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதற்காக தொடர் பேச்சு நடத்த வேண்டும்.
- எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு சூழலுக்கும், இரு நாடுகளும் வாய்ப்பு அளிக்கக் கூடாது.
21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி மாநாடு
- புதிய கல்விக் கொள்கை 2020-ஐ முன்னெடுத்துச் செல்லும் உறுதியோடு '21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' என்னும் இரண்டு நாள் மாநாடு நிறைவுற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
- மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வி இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, உயர்கல்வி செயலாளர் அமித் காரே மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
- பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் கலந்து கொண்ட விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெற்றன. இதில் பேசியவர்கள், நாட்டை கல்வி மற்றும் இதர துறைகளில் முன்னெடுத்து சொல்வதற்கான திட்டங்கள் புதிய கல்விக் கொள்கை மூலம் வகுக்கப்பட்டுள்ளன என்றும், அதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
- புதிய உயர்நோக்கங்களை நிறைவு செய்வதாகவும், புதிய இந்தியாவில் புதிய வாய்ப்புகளை அளிப்பதாகவும் தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
- மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தியாவின் 21வது நூற்றாண்டுக்குப் புதிய திசையைக் காட்டுவதாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று கூறினார். நாட்டின் எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
- கடந்த மூன்று தசாப்த காலங்களில் நமது செயல்பாடுகளில் எதுவுமே பழைய நிலையிலேயே இல்லாமல் மாறியுள்ளன என்ற நிலையில், நமது கல்வித் திட்டம் மட்டும் பழைய நடைமுறையிலேயே இருக்கிறது.
வடிகால் குழாய் அமைப்பு கண்டுபிடிப்பு
- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆதிச்சநல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது மக்கள் வாழ்விடங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் போலவே இந்த அமைப்பும் காணப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சொலிசிட்டர் ஜெனரல் - விக்டோரியா கவுரி
- தமிழகத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் வழக்கறிஞர் எனும் பெருமையை வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பெற்றுள்ளார்.
- இவர் குமரி மாவட்டம் வெளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர்.
CERT-TN
- CERT-TN (Computer Emergency Response Team) இணையதளம் துவக்கி வைப்பு :
- தமிழ்நாட்டின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு (CSA-TN) திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக, Centre for Development of Advanced Computing (C-DAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்ப டுத்தப்படவுள்ள CERT-TN-< (Computer Emergency Response Team) https://cert.tn.gov.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளான TNSWAN, TNSDC மற்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு 'தமிழ்நாட்டிற்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்' (Cyber Security Architecture for Tamil Nadu) செயல்படுத்தப்படும் என 1.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பிப்பை நிறைவேற்றுவதில் ஒருபகுதியாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எழுத்தறிவு வீதம்
- தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National statistical office (NSO)) வெளியிட்டுள்ள, தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National sample Survey) 75வது சுற்றின் (ஜீலை 2017 முதல் ஜீன் 2018 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்) அறிக்கையின் படி, எழுத்தறிவு வீதத்தில் (literacy rate) கேரளா 96.2% த்துடன் முதலிடத்திலும், 2,3,4 மற்றும் 5ஆம் இடங்களை முறையே தில்லி, உத்தரக்காண்ட், ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களும் உள்ளன.
- மிகக்குறைந்த எழுத்தறிவு வீதம் உடைய மாநிலங்களில் முதலிடத்தில் ஆந்திரப் பிரதேசமும் (66.4%), அடுத்தடுத்த இடங்களில் முறையே ராஜஸ்தான் (69.7%), பீகார் (70.9%), தெலுங்கானா (72.8%), உத்தரப்பிரதேசம் (72.8%) ஆகியவை உள்ளன.
- இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு வீதம் 77.7% ஆக உள்ளது.
- ஊரகப் பகுதிகளில் எழுத்தறிவு வீதம் 73.5% ஆகவும், நகர்புறங்களில் எழுத்தறிவு வீதம் 87.7% ஆகவும் உள்ளது.
- தேசிய அளவில் ஆண்களின் கல்வியறிவு வீதம் 84.7% ஆகவும், பெண்களின் கல்வியறிவு வீதம் 70.3% ஆகவும் உள்ளது.
- எழுத்தறிவு வீதம் என்பது, 7 வயது மற்றும் அதற்கு மேலுள்ள நபர்களின் எழுத்தறிவைக் குறிப்பதாகும்.
Global Economic Freedom Index, 2020
- உலக பொருளாதார சுதந்திர குறியீடு 2020 (Global Economic Freedom Index, 2020) ல் இந்தியா 105 வது இடத்தைப் பெற்றுள்ளது . கடந்த ஆண்டு (2019) 79 வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.
- The Heritage Foundation மற்றும் The Wall Street Journal மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
வான்வழி ஆம்புலன்ஸ் சேவை
- இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி ஆம்புலன்ஸ் சேவை (integrated air ambulance service ) கர்நாடக அரசினால் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது.
லக்ஸம்பர்க் தூதர் - சேதுராமன் மகாலிங்கம்
- தமிழகம், கேரள மாநிலங்களை உள்ளடக்கிய சென்னையில் இயங்கும் லக்ஸம்பர்க் தூதரகத்தின்கவுரவ தூதராக சேதுராமன் மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவருக்கு முன்பு இப்பதவியைவகித்த சுஹாசினி மணிரத்னத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, சேதுராமன்மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
”இந்திராகாந்தி அமைதி பரிசு 2019”
- ”இந்திராகாந்தி அமைதி பரிசு 2019” (Indira Gandhi Peace Prize for the year 2019) இங்கிலாந்தைச் சேர்ந்த சர் டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough) விற்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையின் (Indira Gandhi Memorial Trust) மூலம் இந்த விருது கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.