யானை குத்தி பட்டான் நடுகல் கண்டெடுப்பு
- திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியில் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இது நடுக்கல் என்றும், யானை குத்தி பட்டான் கல் என்று அழைக்கப்படும் இக்கல், கிபி 12ஆம் நூற்றாண்டில் பெரம்பலூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் வேளாண் பொருட்களை தேடி இப்பகுதிக்கு வந்திருக்கக் கூடும் என்றும் அந்த யானையைக் கொன்ற வீரனுக்கு அல்லது யானையினால் கொல்லப்பட்ட வீரனுடைய நினைவாக இந்த நடுகல் நாட்டப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
- யானை குத்தி பட்டான் கல் என்பது ஊருக்குள் நுழையும் யானையை வீரன் ஒருவன் கொன்றாலோ அல்லது வீரனை யானை கொன்றாலே அதன் நினைவாக வைக்கப்படும் நடு கல்லாகும்.
அகரம் அகழாய்வில் 20 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு
- கீழடியில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
- இதுவரை இப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான பொருள்கள், கட்டிட அமைப்புகள், சுவர்கள், வடிகால் வசதி , மனிதர்கள், குழந்தைகளின் எலும்புகள், விலங்கு வகை எலும்புகள் மற்றும் குறைந்த அடுக்கு கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
- செப்டம்பர் 3- ந் தேதியுடன் கீழடியில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவிலான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்குக் கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
ராபி காலப் பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை
- இந்திய அரசானது ராபி காலப் பயிர்களின் மீதான MSP விலையை அதிகரித்து உள்ளது.
- கோதுமையின் மீதான MSP (Minimum Support Price) ஆனது 1 குவிண்டாலுக்கு ரூ.50 என்ற அளவில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
- கொண்டைக் கடலை, கடுகு, குங்குமப்பூ பருப்பு ஆகியவை இதர பயிர்களாகும்.
- MSP ஆனது வேளாண் விலைகள் ஆணையத்தினால் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது.
"பயண இலக்கு வடகிழக்கு, 2020"
- 4 நாட்கள் கால அளவுள்ள இந்த நிகழ்வானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று உள்துறை அமைச்சரால் முறையாகத் தொடங்கி வைக்கப்பட விருக்கிறது.
- மத்திய அமைச்சரான ஜித்தேந்திர சிங் அவர்கள் பயண இலக்கு வடகிழக்கு, 2020- (வளர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரியப் பயண இலக்குகள்) என்ற திருவிழாவிற்கான சின்னம் மற்றும் பாடலை வெளியிட்டுள்ளார்.
- இந்தத் திருவிழாவானது வடகிழக்கின் வளமிக்க ஆராயப்படாத திறன்கள் குறித்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தெரிந்து கொள்ள உதவ இருக்கின்றது.
- இந்தத் திருவிழாவானது 2018 ஆம் ஆண்டில் சண்டிகரிலும் 2019 ஆம் ஆண்டில் இந்திய நுழைவு வாயிலிலும் (புது தில்லி) தொடங்கப் பட்டது.
கர் தாக் ஒளியியல் இழைத் திட்டம்
- பிரதமர் பிகாரில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ஒளியியல் இழை இணையச் சேவைகள் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
- ஒளியியல் இழைச் சேவைகளானது "கர் தாக் ஒளியியல் இழை" என்ற திட்டத்தின் கீழ் வழங்கப் பட்டு வருகின்றது.
- இந்தத் திட்டமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
- இந்தத் திட்டமானது பிகாரில் 45,945 கிராமங்களை இணைக்கவுள்ளது.
- இது பீகாரின் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த வழிவகை செய்கின்றது.
வானூர்திப் பிரிவில் பெண் அதிகாரிகள்
- இந்தியப் பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதன்முறையாக 2 பெண் அதிகாரிகள் இந்தியக் கடற்படையின் வானூர்திப் பிரிவில் பார்வையாளர்களாக இணைவதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
- போர்க் கப்பல்களை இயக்கும் முதல் பெண் போர்படை வீரர்கள் இவர்களாவர்.
- துணைத் தளபதி (லெப்டினன்ட்) ரித்தி சிங் மற்றும் துணைத் தளபதி குமுதினி தியாகி ஆகியோர் அந்த வானூர்திப் பிரிவில் இணையவிருக்கும் 2 அதிகாரிகள் ஆவர்.
மாலத்தீவிற்கு முதலாவது நேரடி சரக்குப் சேவை
- இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இரண்டு நாடுகள் தங்களுக்கிடையேயான வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக முதலாவது நேரடி சரக்குப் படகுச் சேவையைத் தொடங்கியுள்ளன.
- இந்தச் சரக்குப் படகுச் சேவையானது இந்தியாவில் உள்ள தூத்துக்குடி மற்றும் கொச்சின் துறைமுகங்களை மாலத்தீவில் உள்ள குல்குதுக்பூசி மற்றும் மாலித் துறைமுகங்களுடன் இணைக்கவுள்ளது.
- இந்த முன்னெடுப்பானது இந்த 2 நாடுகளுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு ஏற்படும் பயணச் செலவு மற்றும் பயண நேரம் ஆகியவற்றின் குறைப்பிற்கு உதவ இருக்கின்றது.
- இந்திய மற்றும் மாலத்தீவுத் துறைமுகங்களை இணைப்பதற்காகப் பயன்படுத்தப் படும் சரக்குப் படகுக் கப்பலான எம்சிபி லின்ஸ் (MCP Linz) ஆனது இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தினால் இயக்கப்படுகின்றது.