ரேணாட்டு சோழர் (Renati Chola)
- ரேணாட்டு சோழர் (Renati Chola ) காலத்தைச் சேர்ந்த ஒரு அரிய கல்வெட்டு ஆந்திராவின் கடபா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு, டோலமைட் பலகை (dolomite slab) மற்றும் களிமண் பாறையில் (shale) பொறிக்கப்பட்டுள்ளது. பழமையான தெலுங்கில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டின் காலம், கி.பி 8 ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- ரேணாட்டின் தெலுங்கு சோழர்கள் (ரேணாட்டு சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) இன்றைய ஆந்திரப்பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்திலுள்ள ரேணாடு பகுதியை ஆண்டனர்.
- இந்த மன்னர்கள் தாங்கள் கரிகலா சோழனின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். சமஸ்கிருதத்திற்கு பதிலாக நிர்வாகத்திலும் கல்வெட்டுகளிலும் தெலுங்கைப் பயன்படுத்திய முதல் இராஜ்ஜியம் இவர்களுடையது என அறியப்படுகிறது.
“அக்ரியோட்டா” ( “Agriota” )
- “அக்ரியோட்டா” ( “Agriota” ) என்ற பெயரில் இந்திய விவசாயிகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உணவுத் தொழில்துறைக்கு இடையே பாலமாகச் செயல்படுவதற்கான புதிய மின்-சந்தை தளத்தை ஐக்கிய அரபு எமிரேட் தொடங்கியுள்ளது.
லெபனானின் புதிய பிரதமர்
- அரபு நாடான கத்தாரில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1000 ரியால்களாக (சுமாா் ரூ.20,000) ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- லெபனானின் புதிய பிரதமராக முஸ்தபா ஆதிப் (48) நியமிக்கப்பட்டுள்ளார்.
நேரடி விமான சேவை
- வரலாற்று நிகழ்வாக இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை 31-8-2020 அன்று தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஆகாஸ்டு 13-ந்தேதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.
’ஆர்மி 2020’ (“Army-2020)
- ’ஆர்மி 2020’ (“Army-2020) என்ற பெயரில் , 6வது சர்வதேச இராணுவ தொழில்நுட்ப மன்றம் (6th International Military-Technical Forum) 23-29 ஆகஸ்டு 2020 தினங்களில் ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
- தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .
- அதன்படி, வோடாபோன், ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றின் பாக்கித் தொகையை (ஏ.ஜி.ஆர்.) செலுத்துவதற்கு 10 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
- நிறுவனங்கள் தங்கள் ஏ.ஜி,ஆர் நிலுவைத்தொகையின் 10 சதவீதத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் கட்ட வேண்டும். பின்னர் 2031-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி விட வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் 2020-2021 நிதியாண்டு
- இந்தியாவின் பொருளாதாரம் 2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. லாக்டவுன் நடவடிக்கையால், நுகர்வோர் செலவிடுவது குறைந்தது, தேவை குறைந்து, முதலீடு செய்வதும் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த நிதியாண்டின் (2019-20)முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.2 சதவீதம் வளர்ச்சி இருந்த நிலையில், கடந்த ஜனவரி –மார்ச் மாதத்தில் 3.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உற்பத்தித் துறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 39.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கட்டுமானத்துறை வளர்ச்சி 50.3 சதவீதம் வீழ்ந்துள்ளது.
புதிய தேர்தல் ஆணையர்
- ராஜீவ் குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக 1-9-2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பில் இணைவதற்காக, தேர்தல் ஆணையராக பணிபுரிந்த அசோக் லவாசா தனது தேர்தல் ஆணையா் பதவியை கடந்த ஆகஸ்ட் 2020 ல் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போதைய தேர்தல் ஆணையர்கள்.
- தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner) - சுனில் அரோரா (Sunil Arora )
- தேர்தல் ஆணையர்கள் - சுஷில் சந்திரா (Sushil Chandra) , ராஜிவ் குமார் (Rajiv Kumar)
Central Board of Direct Taxes(CBDT
- மத்திய நேரடி வரி வாரியத்தின் (Central Board of Direct Taxes(CBDT)) தலைவராக பதவி வகித்து வரும் பிரமோத் சந்திர மோடிக்கு (Pramod Chandra Mody) ஆகஸ்ட் 1, 2020 முதல் பிப்ரவரி 28, 2020 வரை 6 மாதங்களுக்கு பணி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
Rashtriya Khel Protsahan Puruskar 2020
- ராஷ்டிரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் (Rashtriya Khel Protsahan Puruskar 2020) இந்திய விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ( Air Force Sports Control Board ) வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினால் வழங்கப்படும் இவ்விருது, நாட்டில் விளையாட்டு வளர்ச்சியில் கார்ப்பரேட்டுகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு வாரியங்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.